தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 maart 2015

கொடுப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்: காணி கையளிக்கும் நிகழ்வில் டி.எம்.சுவாமிநாதன்



வடக்கில் படையினர் உல்லாச விடுகளை அமைக்கவில்லை! மீண்டும் பொய் சொன்ன இராணுவத் தளபதி
[ திங்கட்கிழமை, 23 மார்ச் 2015, 02:47.04 PM GMT ]
யாழ்.வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் விளையாட்டு மைதானங்களோ, உல்லாச விடுதிகளோ அமைக்கப்படவில்லை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இந்தப் பகுதியில் படையினர் விவசாயம் செய்கின்றார்கள் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை என படைத்தளபதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா காலத்திலும் மீண்டும் பொய் கூறியிருக்கின்றார்.
இன்றையதினம் யாழ்ப்பாணம் வளலாய் பகுதியில் மக்களுடைய காணிகளை உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள மேற்படி விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிடம், சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன்போது அங்கிருந்த படைத்தளபதியிடம் அவ்வாறு உள்ளனவா? என சந்திரிக்கா வினவிய போது அவ்வாறு எதுவுமே இல்லை. என படைத்தளபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் கூறிய பொய்யை மீண்டும்
கூறியிருக்கின்றார். இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறித்த படைத்தளபதியை அருகில் அழைத்து. நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை உங்கள் பகுதிக்குள் முழுமையாக கொண்டு சென்று காண்பிக்க உங்களால் முடியுமா? அதனையும் இன்றே செய்ய முடியுமா? என வினவிய போது அதற்கு படைத்தளபதி கையை பிசைந்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் அதற்குச் சந்தர்ப்பம் வராது மற்றொரு சந்தர்ப்பத்தில் வருகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை கூறியிருக்கின்றார். இந்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவே இன்றைய தினம் மாலை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,
மேற்படி வளலாய் நிகழ்வு நிறைவடைந்த பின்னர் நான் முன்னாள் ஜனாதிபதியுடன் நீண்ட நேரம் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் மக்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தேன். அதன்போது அவர் எனக்கு உறுதியளித்திருக்கின்றார். இங்குள்ள முழுமையான காணிகளும் விடுவிக்கப்படும் என்று. எனவே அவருக்கு இந்த மீள்குடியேற்ற பிரச்சினை தொடர்பாக வலியுறுத்தியிருக்கின்றோம் என்றார்.
இதேவேளை இன்றைய தினம் மாலை வசாவிளான் பகுதிக்கு வலி,வடக்கு மீள்குடியேற்ற நடவடிக்கை குழுவின் தலைவர் ஹரீன் பீரிஸை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அழைத்துச் சென்று அங்குள்ள நிலமைகள் தொடர்பாக நேரில் விளக்கமளித்துள்ளதுடன், மக்களையும் சந்தித்துப் பேச வைத்திருக்கின்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRXSUls7B.html


கொடுப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்: காணி கையளிக்கும் நிகழ்வில் டி.எம்.சுவாமிநாதன்
[ திங்கட்கிழமை, 23 மார்ச் 2015, 03:06.35 PM GMT ]
புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தற்போது தான் ஆரம்பமாகியுள்ளன. கொடுப்பதை ஏற்றுக்கொண்டு மக்கள் வாழ வேண்டுமென மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
வளலாய், வசாவிளான் பகுதியில் விடுவிக்கப்படும் காணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தற்போது தான் ஆரம்பமாகியுள்ளது.
நாங்கள் கூறியது போல, 1000 ஏக்கர் காணியையும் விடுவிப்போம். தற்போது 400 ஏக்கர் காணியை விடுவித்துள்ளோம்.
அடுத்து படிப்படியாக மிகுதி நிலங்களை விடுவித்து ஏப்ரல் மாத இறுதிக்குள் 600 ஏக்கர் காணியையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
சில தடங்கல்கள் மற்றும் சிறிய பிரச்சினைகள் இருக்கலாம். அதனை நாங்கள் ஊதி பெரிய பிரச்சினையாகக் காண்பிக்கக்கூடாது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRXSUls7C.html

Geen opmerkingen:

Een reactie posten