தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 maart 2015

கட்டநாயக்காவில் வைத்து பகீரதி கைதானார்: பயங்கரவாத தடைச் சட்டம் பாய்கிறது !

குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக இலங்கை வந்த பின்னர் பிரான்ஸ் திரும்பும் வழியில் கொழும்பு விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்ட முருகேசு பகீரதி என்ற பெண் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். பிரான்ஸிலிருந்து கடந்த மாதம் இலங்கை வந்திருந்த பகீரதியும் அவரது 8 வயது மகளும் கிளிநொச்சியில் உள்ள பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் விடுமுறையை கழித்துவிட்டு திரும்பும் வழியிலேயே திங்கட்கிழமை விமானநிலையத்தில் தடுக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பகீரதியை மூன்று நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரித்துவருவதாக காவல்துறை பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோஹண தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பில் மூன்று ஆண்டுகள் இருந்துள்ள பகீரதி 2005-ம் ஆண்டில் பிரான்ஸ் செல்ல முன்னர் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கெடுத்திருந்தாக காவல்துறை குற்றம் சாட்டுகின்றது. பகீரதி கடல்புலிகளில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் அக்காலப்பகுதியில் இலங்கை கடற்படை மீது நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியுள்ளதாக தெரியவருகின்றது’ என்று அஜித் ரோஹண தெரிவித்தார்.
இப்போது விடுதலைப் புலிகளின் பிரச்சனை இல்லை. ஆனால் இலங்கையில் கடந்த காலத்தில் யாராவது குண்டுத் தாக்குதல் அல்லது கொலைகளில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கு இன்னும் 20 ஆண்டுகாலத்திற்கு எங்களுக்கு அதிகாரம் இருக்கின்றது என்றும் அஜித் ரோஹண தெரிவித்தார். பகீரதி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சியங்கள் இருப்பதாகவும் அவற்றை எதிர்காலத்தில் வெளிப்படுத்துவதாகவும் கூறிய காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண, விசாரணைகளின் முடிவில் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.
http://www.athirvu.com/newsdetail/2465.html

Geen opmerkingen:

Een reactie posten