தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 maart 2015

இலங்கையில் காணாமல் போனோரை கண்டுபிடிக்க உதவத் தயார்! சர்வதேச செஞ்சிலுவை சங்கம்

மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றம் சென்றால் முன்னாள் ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை இழப்பார்!- ராஜித
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 03:57.44 PM GMT ]
மஹிந்த ராஜபக்ச பொதுத்தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டால் அவர் முன்னாள் ஜனாதிபதிக்கான வரப்பிரசாதங்களை இழப்பார் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தொடர்ந்தும் 21 வாகனங்கள் மற்றும் 213 அதிகாரிகளின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தமது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்தமை தொடர்பிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சவுக்கு இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்படுகின்றபோது அவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவில்லை.
இதற்காக சந்திரிக்கா நீதிமன்றம் செல்லவேண்டியிருந்தது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை மஹிந்த ராஜபக்ச பொதுத்தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டால் அவர் முன்னாள் ஜனாதிபதிக்கான வரப்பிரசாதங்களை இழப்பார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


இலங்கையில் காணாமல் போனோரை கண்டுபிடிக்க உதவத் தயார்! சர்வதேச செஞ்சிலுவை சங்கம்
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 03:47.30 PM GMT ]
இலங்கையில் போரின் போது காணாமல் போனோரை கண்டுபிடிக்கும் செயற்பாட்டில் உதவத் தயார் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் டொமினிக் ஸ்டில்ஹாட் இலங்கைக்கு ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்தார்.
இந்தநிலையில் இந்த விஜயம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
காணாமல் போனோரின் உறவினர்கள் மத்தியில் பணியாற்றிய அனுபவம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்கு உள்ளது.
எனவே அதனை பயன்படுத்தி இலங்கையில் காணாமல் போனோரை கண்டுபிடிக்க தம்மால் உதவ முடியும் என்று ஸ்டில்ஹாட் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபரில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், 1990ம் ஆண்டு முதல் காணாமல் போனோரின் உறவினர்களின் மாதிரிகளை கொண்டு நாடளாவிய ரீதியில் தேடுதல்களை நடத்தியது.
இதன்போது சங்கத்துக்கு 16ஆயிரத்து 100 முறைப்பாடுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDRYSUlt4D.html

Geen opmerkingen:

Een reactie posten