தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 maart 2015

100 நாள் வேலைத்திட்டத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு கைவிடப்பட்டுள்ளதா? மக்கள் கேள்வி

தொடர்கிறது முகம் மூடிய தலைக்கவசத் தடை
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 06:59.25 AM GMT ]
மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் முகத்தை முழுமையாக கூடிய தலைக்கவசங்களை அணிவதற்கு தடை விதிப்பதற்கு மீண்டும் தீர்மானிக்கப்பபட்டுள்ளது.
இந்த தடை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி முதல் அமுலுக்கு கொண்டு வரப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் குறித்த தலைக்கவசத்திற்கு தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இத்தடை மீளப்பெற்று கொள்ளப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் குறித்த தடையை அமுல்படுத்துவதற்கு பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற செல்ல தயாராகும் சந்திரிக்கா!
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 07:00.47 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்காக ஆயத்தமாகிக் கொண்டு இருப்பதாக  அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
அது தொடர்பில் களுத்துறை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ரத்னசிறி விக்ரமநாயக்க இராஜினாமா செய்வதற்கு தற்பொழுது இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும், இதற்கு முன்னர் நீதிமன்ற தீர்ப்பிற்கமைய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பாராளுமன்ற பயணம் தொடர்பாக குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக அவருக்காக செயற்படுகின்ற சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளார்.

தப்பி சென்ற இராணுவ வீரர்கள் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 07:17.00 AM GMT ]
இராணுவத்திலிருந்து தப்பிசென்ற வீரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எம்.ஹத்துருசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இராணுவத்திலிருந்து தப்பி சென்ற வீரர்களை கடந்த கால அரசாங்கம் தேடி பிடித்து கைது செய்து வந்தனர்.
தற்போதைய அரசாங்கம் இந்நடவடிக்கையை மாற்றி அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி சமூகத்தில் அச்சமின்றி வாழ்வதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் குறித்த வீரர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி முதல் 16ம் திகதி வரையிலான காலப்பகுதியில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUlt7J.html

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் உணவகம் தொடர்பில் முறைப்பாடு
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 07:37.01 AM GMT ]
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு சொந்தமான தெஹிவளை வாசல வீதியில் இருக்கும் பெரதுடா என்ற உணவகம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு மோசடி எதிர்ப்பு அமைப்பு இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால், ஐக்கிய நாடுளுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷன் சரத் பொன்சேகாவுக்கு எதிராக பொய்ச்சாட்சி கூறியதற்கு பரிசாக, அவருக்கு மகிந்த ராஜபக்ச, இந்த பதவியை வழங்கியிருந்தார்.
அத்துடன் சவேந்திர சில்வாவை மாத்திரமல்லாமல் ஏனைய தரப்பினரையும் இணைத்து கொண்டதுடன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கு சிறப்புரிமைகளை வழங்கி வந்தார்.
எனினும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக பொய்ச் சாட்சி கூறி பிரதானி என்ற வகையில், சவேந்திர சில்வாவுக்கு பிரதிவதிவிடப் பிரதிநிதி பதவி மாத்திரமல்லாமல், காணிகள், வர்த்தகத்திற்காக உதவிகளும் செய்யப்பட்டன.
இதனடிப்படையில், தெஹிவளை – கல்கிஸ்சை மாநகர மேயர் தனசிறி அமரதுங்கவுடன் இணைந்து சவேந்திர சில்வா,அனுமதிப்பத்திரம் இல்லாமல் உணவகம் ஒன்றை ஆரம்பித்தார்.
அந்த உணவகத்திற்காக தெஹிவளை வாசல வீதியில் இருக்கும் இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை கோத்தபாய ராஜபக்ச வழங்கியிருந்தார்.
அத்துடன் ஸ்ரீ ஜயவர்தனபுர நாடாளுமன்றத்திற்கு அருகில் 60 பேர்ச்சஸ் காணியையும் கோத்தபாய, சவேந்திர சில்வாவுக்கு வழங்கியுள்ளார். இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஒருவர் எப்படி இப்படி பாரிய சொத்துக்களையும் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது கேள்விக்குரியது.
அதேவேளை சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகள் அமைப்பில் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகளையும் கொடுமைப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUluyA.html

100 நாள் வேலைத்திட்டத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு கைவிடப்பட்டுள்ளதா? மக்கள் கேள்வி
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 08:08.00 AM GMT ]
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு எவ்விதமான நன்மைகளும் கிட்டவில்லை எனவும் மேற்படி இரு மாவட்டங்களிலும் மீள்குடியேற்றம், சிவில் நிர்வாக நடைமுறை இல்லாமை போன்றன மிகப்பெரும் பிரச்சினையாக தொடர்வதாகவும் அம்மாவட்ட மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டு 100 நாள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தது.
இதன் கீழ் வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பாலான பகுதிகளில் படையினர் கையகப்படுத்தியிருந்த காணிகள் விடுவிக்கப்படுகின்றன.
மேலும் சிவில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தினால் எவ்விதமான நன்மைகளும் கிடைக்கவில்லை.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் பரவிப்பாஞ்சான் கிராமத்தில் 119 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளார்கள், அதேபோன்று கிருஸ்ணபுரம் பகுதியிலும் 18குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளார்கள்.
மேலும் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் இரணைத்தீவு என்ற தீவு முழுமையாக படையினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சுமார் 280ற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களுக்குச் செல்ல முடியாமல் இருக்கின்றார்கள்.
இதனைவிட கிளிநொச்சி மாவட்டத்தில் 100ற்கும் மேற்பட்ட தனியார் காணிகளை படையினர் கையப்படுத்தியிருக்கின்றார்கள்.
குறிப்பாக பூநகரி பிரதேசத்தில் சுமார் 32ஏக்கர் தனியாருக்குச் சொந்தமான வயல் நிலத்தை படையினர் கையகப்படுத்தியிருக்கின்றார்கள்.
இதனைவிட 5 ஏக்கர் வரையான அரசாங்க திணைக்கள காணிகள் மற்றும் பண்ணைகளை படையினர் கையப்படுத்தியிருக்கின்றார்கள். இவை தொடர்பில் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதுடன் இந்த விடயங்கள் தொடர்பாக, அரசியல்வாதிகளும் மௌனமாக இருக்கின்றார்கள்.
மேலும் மீள்குடியேற்றத்தை போன்றே சிவில் நிர்வாக நடைமுறையும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படுத்தப்படாமல் தொடர்ந்தும் படையினரின் சோதனைச் சாவடிகளும், சோதனை நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
குறிப்பாக வலைப்பாடு, கிராஞ்சி பகுதிகளுக்குச் செல்வதற்கு பிருந்தாவனம் சந்தியில், படையினரின் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு சோதனையின் பின்னர் உள்ளே அனுமதிக்கப்ப டுகின்றார்கள்.
இதேபோன்று ஜெயபுரம் செல்வதற்கு வன்னேரிக்குளம் பகுதியில் சோதனைச் சாவடி உள்ளது. மேலும் முழங்காவில் செல்வதற்கு 19ம் கட்டை பகுதியில் சோதனைச் சாவடி உள்ளது.
எனவே சிவில் நிர்வாகம் இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை என கிளிநொச்சி மாவட்ட மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் எல்லைக் கிராமங்களில் தொடரும் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என்பதுடன், கேப்பாப்பிலவு, புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளில் படையினர் கையகப்படுத்தியிருக்கும் நிலங்கள் இதுவரை விடுவிக்கப்படாத நிலை
தொடர்கின்றது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக அரசியல்வாதிகள் கூடிய கவனம் எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUluyB.html

Geen opmerkingen:

Een reactie posten