தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 maart 2015

ஐ.தே.க மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஏன் அமைதி: மகிந்தானந்த அரசாங்கத்திடம் கேள்வி

வட மாகாண அதிபர்களுக்கு இடமாற்றம்: எச்சரிக்கும் பிரதமர்
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 05:51.56 AM GMT ]
யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் கல்வியை தரமுயர்த்த அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ் மாவட்டங்களை விசேட மாவட்டங்களாக கருதி அப் பகுதியில் உள்ள மாணவர்களின் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைக்கு கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது யாழ் கச்சேரியில் இடம்பெறும் வட மாகாண அதிபர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் கல்வி நடவடிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதாகவும் கொழும்போடு ஒப்பிடும் போது போட்டித் தன்மையின்றி காணப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
வட மாகாண கல்வி நடவடிக்கையினை முன்னேற்றாவிட்டால் அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மீள் குடியேற்ற மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து  கல்வி நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி, பாடசாலைகளுக்கு தேவையான வளங்களை அதிகரிக்கச் செய்து, கல்வியின் தரத்தை முன்னேற்ற நடவடிக்ககைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் சகல தரப்பினரிடமும் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்
http://www.tamilwin.com/show-RUmtyDRcSUlwyE.html

களியாட்ட விடுதிகளில் உள்ளவர்களை திருத்தி நல்வழிப்படுத்தவே நான் அங்கு செல்கின்றேன்: மாலக்க சில்வா
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 05:56.10 AM GMT ]
நான் இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு செல்வது அங்குள்ள கெட்டவர்களை திருத்தி நல்வழிப்படுத்துவதற்கே என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று நீதிமன்றத்திற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நான் மாலையில் மிக்கேலாகவும், இரவில் டானியல் போன்று இருக்கும் ஒருவன். மாலை நேரத்தில் பார்க்கும் மாலக்கவை இரவில் பார்க்க முடியாது. அதனால் இரவு நேர களியாட்ட விடுதிக்கு செல்வதற்கு என்னை அனுமதிக்காதது நல்ல விடயம் என நான் நினைக்கிறேன்.
இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றுக்கு செல்ல வேண்டும் என நான் நினைத்தால் வெளிநாடுகளில் உள்ள, இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு சென்று நான் விரும்பியது போன்று செயற்பட முடியும், இங்கு தான் நான் திரும்பும் இடமெல்லாம் சென்று புகைப்படம் எடுக்கின்றார்கள்.
நான் விகாரைக்கோ அல்லது பாடசாலைக்கோ சென்று எவரையும் தாக்கவில்லை, இரவு நேர களியாட்ட விடுதிகளில் இருப்பவர்கள் அனைவரும் குடிகாரர்கள் தான், அதனால் அவர்களை திருத்தி நல்வழிப்படுத்துவதற்கே, நான் இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு சென்றேன் என மாலக்க சில்வா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRcSUlwyF.html

முற்றுப்புள்ளிக்கு வருகிறது எதிர்க்கட்சி தலைவர் பதவி
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 05:56.27 AM GMT ]
இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை சபாநாயகர் 7ம் திகதி பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.
கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள ஊடகெமொன்று இதனை தெரிவித்துள்ளது.
தேசிய அரசாங்கம் அமைப்பட்டதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் யாரெனும் பிரச்சினை கொழுந்து விட்டு எரிகின்றது.
பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆளுக்கொரு நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர்களை பரிந்துரை செய்து வருகின்ற நிலையில் கட்சிகளுக்கு நீ, நான் என போட்டியும் நிலவுகின்றது.
இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் யாரென அறிவிக்கும் பொறுப்பை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் எதிர்வரும் 7ம் திகதி இப்பதவிக்கு தகுதி வாய்ந்தவர் யாரென்பதை சபாநாயகர் தெரிவிக்கவுள்ளார்.
இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவா?, தினேஷ் குணவர்தனவா? என்பதை தீர்மானிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கையெழுத்து பெறும் நடவடிக்கை தீவிரமாக நடைபெறுகின்றது.
அத்துடன் பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஒற்றுமைப்படுத்த அவசரமாக கூடி தீர்மானமொன்றை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கே வழங்க வேண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து பேரணிகளை நடாத்தும் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நாட்டில் குற்றங்கள் அதிகரித்துள்ளன: முன்னாள் ஜனாதிபதி
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 06:04.04 AM GMT ]
நாடு முழுவதும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ரத்கம பிரதேச சபை தலைவர் மனோஜ் மென்டிஸின் இறுதி கிரியைகளில் நேற்று மாலை கலந்துகொண்டதன் பின்னர்  ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மனோஜ் மென்டிஸை கொலை செய்தவரை விரைவாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு தான் பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் கனவு பற்றி கூறும் நிதி இராஜாங்க அமைச்சர்
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 06:50.28 AM GMT ]
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த கனவு காண்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதனை புரிந்து கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல உறுப்பினர்களும் ஐக்கியத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாக பிளவுபட்டால் எமக்கே பாதிப்பு. பிரதேச சபைகளில் நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினை ஏற்படும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இரண்டு அணிகள் ஏற்பட வேண்டும் என்பதே ரணில் விக்ரமசிங்கவின் கனவு.
இதனால், பெரிய பிரச்சினைகள் பற்றி நாங்கள் பேச வேண்டியதில்லை. காலம் செல்லும் போது அந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடும்.
நாம் கிராம மட்டத்தில் ஒருங்கிணைப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சுற்றியே நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். அதனை மகிந்த ராஜபக்சவும் விரும்புகிறார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுப்படுவதை மகிந்த ராஜபக்ச ஒரு போதும் விரும்பமாட்டார் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
அனைத்து உறுப்பினர்களும் ஐக்கியமாக செயற்பட்டால் அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கட்டாயம் வெற்றி பெறும் எனவும் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.க மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஏன் அமைதி: மகிந்தானந்த அரசாங்கத்திடம் கேள்வி
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 07:24.06 AM GMT ]
முன்னைய அரசாங்க பிரதிநிதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு முதல், 2001 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியினர் மேற்கொண்ட இலஞ்ச ஊழலிற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நாங்கள் முறைப்பாடு செய்துள்ளோம்.
ஆனால் சம்பந்தப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இந்த அரசாங்கம், எவ்வித நடவடிக்கையும் இதுவரையும் மேற்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்பொழுது வரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் பலர் மீது தன்னிச்சையான முறையில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten