தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 maart 2015

அண்மைய நாட்களாக பிரபாகரன் வழியில் முதல்வர் சீ.வி..?

ரணிலின் வகுப்பு நண்பரான தினேஸை எதிர்க்கட்சி தலைவராக்க வேண்டும்!- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015, 03:59.29 PM GMT ]
ரோயல் கல்லூரியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒரே வகுப்பில் கல்வி கற்ற தினேஸ் குணவர்த்தனவை எதிர்க்கட்சி தலைவராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
ரோயல் கல்லூரியில் ஒரே வகுப்பில் கற்ற ரணில் விக்கிரமசிங்கவும் தினேஸ் குணவர்த்தனவும் அண்மையில் ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் ஒன்றாக பங்கேற்றனர்.
ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார்.
இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் உட்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் கையெழுத்துக்களை பெறுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே ரோயல் கல்லூரியில் கற்றவர்களான திலான் பெரேரா மற்றும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஆகியோரை ரணில் அமைச்சவையில் சேர்த்துக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே மற்றும் ஒரு ரோயல் பழைய மாணவரான தினேஸ் குணவர்த்தனவை எதிர்க்கட்சி தலைவராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த பிரதமரை தீர்மானிப்பவர்கள் முன்னாள் ஜனாதிபதிகளே: சரத் அமுனுகம
[ வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015, 04:13.21 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒரே மேடையில் இணைந்து பொதுத் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி கொள்வதே எமது இலக்காகும் என ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டி – ஹத்தரலியத்த பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு சுதந்திரக் கட்சி எதிர்ப்பு தெரிவிக்காது. இருப்பினும், ஜனாதிபதியின் முக்கிய சில அதிகாரங்களைக் குறைத்து பிரதமருக்கு வழங்குவதற்கு சுதந்திரக் கட்சி எதிர்ப்பை தெரிவிக்கும்.
அவ்வாறு செய்தால் நாட்டிலுள்ள சிறுபான்மைக் கட்சிகள் யாவும் பிரதமருக்கு எதிராக விரல் நீட்ட கூடிய சூழல் உருவாகும்.இது போன்ற சம்பவங்கள் முன்னர் ஏற்பட்டிருந்ததை அறிவோம்.
முன்னாள் ஜனாதிபதியான அமரர் டி.பி விஜேதுங்க காலமானதிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து எவரும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவில்லை.
ஆகவே முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒரே மேடையில் இணைந்து பொதுத் தேர்தலை வெற்றிகொள்வதே எமது இலக்காகும்.
அதேபோன்று அடுத்த பிரதமரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்தே தெரிவு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினரின் நோக்கம் எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தங்களில் ஒருவரை பிரதமராக்குவதாகும்.
மேலும் தேர்தல் முறை மாற்றத்தை 19ஆவது திருத்தச் சட்டமூலத்துடன் சேர்த்து சபையில் சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தோம்.
19ஆவது திருத்த சட்டம் பற்றி கருத்துரைத்த அவர்  தேர்தல் முறை திருத்தச் சட்டமூலம் சபையில் சமர்ப்பித்தால் மட்டுமே 19ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என்றும் கூறினார். 
http://www.tamilwin.com/show-RUmtyDRbSUlv6B.html

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீற தடை
[ வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015, 04:53.47 PM GMT ]
வருடம் ஒன்றுக்கு 83 நாட்களுக்கு இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபட அரசாங்கம் இணக்கம் வெளியிட்டதாக வெளியான தகவலை பிரதி வெளியுறவு அமைச்சர் அஜித் பி பெரேரா மறுத்துள்ளார்.
அடுத்த வருடம் முதல் மூன்று வருடங்களுக்கு வருடம் ஒன்றுக்கு 83 நாட்களுக்கு இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிக்க, தமிழக மீனவர்கள் அனுமதிக்கப்படுவர் என இந்திய ஊடகங்கள் செய்தியை வெளியிட்டிருந்தன.
இதேவேளை இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறும் செயல்களை தடுக்கும் இலங்கை நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கவும் இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்திருந்தார். இதன்போது அவர் கூறிய வார்த்தைகள் கண்டிக்கப்பட்டன.
எனினும் அத்துமீறுவோருக்கு எதிராக இலங்கையர்களின் எண்ணங்களையே பிரதமரின் கருத்துக்கள் வெளிப்படுத்தின என்று அஜித் பி பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.


அண்மைய நாட்களாக பிரபாகரன் வழியில் முதல்வர் சீ.வி..?
[ வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015, 05:36.54 PM GMT ]
வடக்கு முதல்வருடனான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடானது எதிர்காலத்தில் தென்னிலங்கைக்கு ஆபத்தில் முடிந்துவிடும் என்கிறார் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன்.
வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில், முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்திக்காமை எதிர்காலத்தில் பாரிய அரசியற் சிக்கலை ஏற்படுத்தும் என லங்காசிறி வானொலியின் சிறப்பு ஆய்வில் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRbSUlv6E.html

Geen opmerkingen:

Een reactie posten