தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 maart 2015

பயங்கரவாதத்திற்கு இனி ஒரு போதும் இடமில்லை: பிரதமர்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஐ.ம.சு கூட்டமைப்பிற்கு வழங்கப்படுவதனை எதிர்க்கின்றோம்!- ஜே.வி.பி.
[ வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015, 12:59.26 AM GMT ]
எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வழங்கப்படுவதனை எதிர்க்கின்றோம் என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படக் கூடாது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தினேஸ் குணவர்தனவிற்கு வழங்குமாறு கூட்டமைப்பின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் கையெழுத்துக்களை திரட்டி வருகின்றனர்.
இந்த நடவடிக்கைக்கு எமது கட்சி எந்த வகையிலும் உடன்படாது.
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு மற்றுமொரு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவரை நியமிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
எதிர்க்கட்சித் தலைவராக மெய்யாகவே எதிர்க்கட்சியில் இருக்கும் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
நடைபெறும் விடயங்களை அவதானித்து அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கப்படும்.
ஐக்கிய மக்கள் சுதந்;திரக் கூட்டமைப்பின் ஒரு தொகுதியினர் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஒரு தொகுதியினர் எதிர்க்கட்சியின் பதவிகளை வகித்து வருகின்றனர் என அனுரகுமார திஸாநாயக்க நேற்று சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி கூட்டத்திற்கு சென்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தண்டிக்கப்படுவர்!– எஸ்.பி.நாவின்ன
[ வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015, 01:25.31 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் நோக்கில் இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் தண்டிக்கப்படுவர் என சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தால் அவர்களுக்கு எதிராக தண்டனை விதிக்கப்படும்.
இரத்தினபுரி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்திருந்தது.
இந்த தீர்மானத்திற்கு உடன்படாது கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர், முதலமைச்சர்,  நகரசபை உறுப்பினர், பிரதேச சபை உறுப்பினர் அல்லது தொகுதி அமைப்பாளர் எவரேனும் பங்கேற்றிருந்தால், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்சித் தலைமை மற்றும் மத்திய செயற்குழுவிற்கு சவால் விடுக்க எவருக்கும் முடியாது.  ஒவ்வொருவருக்கும் தேவையான வகையில் ஆட இடமளிக்க முடியாது.
கட்சி என்றால் அதற்கென சில ஒழுக்க விதிகள் உண்டு.  கட்சியின் அனைவரும் கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு இசைந்து செயற்பட வேண்டும்.
சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தி அரசாங்கமொன்றை அமைக்கவே விரும்புகின்றோம்.
அரசியல் ரீதியாக அனாதைகளாக்கப்பட்ட சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சீரழிக்க முயற்சிக்கின்றனர் என கொழும்பு ஊடகமொன்று இரத்தினபுரி கூட்டம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார்.

லசந்தவின் கொலைக்கு கோத்தபாயவே காரணம்: புலனாய்வு பிரிவிடம் மேர்வின் வாக்குமூலம்
[ வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015, 07:11.23 AM GMT ]
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தொடர்பிருப்பதாக தான் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் கூறியதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக தன்னிடம் இருக்கும் சகல தகவல்களையும் தான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேர்வின் சில்வா, லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக இதற்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தார்.
அது சம்பந்தமான விசாரணைகள் நேற்று ஆரம்பமாகியதுடன் மேர்வின் சில்வா திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்கினார்.
லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்ய போவதை கோத்தபாய ராஜபக்ச அறிந்திருந்தார். லசந்த மீது அவருக்கும் கடும் கோபம் இருந்தது.
முன்னாள் ஜனாதிபதி இதில் சம்பந்தமில்லை. கோத்தபாயவே லசந்த கொலைக்கு காரணம்.
அடுத்தது ராகம லொக்கு சிய்யா பற்றி கேட்டனர். கோத்தபாய மற்றவர்கள் கோள் சொல்வதை அதிகம் கேட்பவர். யாராவது வந்து எவரை பற்றியாவது கோள் சொன்னால், அவரை முடித்து விடுவார் எனவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்தி:

பயங்கரவாதத்திற்கு இனி ஒரு போதும் இடமில்லை: பிரதமர்
[ வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015, 07:13.04 AM GMT ]
நாட்டினுள் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகள் ஒருபோதும் தலைதூக்க இடமளிக்கப்போவதில்லை என்றும் பயங்கரவாதிகள் தற்பொழுது உலகம் முழுவதும் செயற்படுவது பல்வேறு முகங்களில் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று அலரி மாளிகையில் தேசிய ஊடகங்களின் பிரதானிகள் மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான 'தேசிய ஒற்றுமைக்கான செயலகம்' ஒன்று உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களை உடனடியாகக் கைது செய்யக்கூடிய அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லை எனவும் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தைப் பயன்படுத்தி, குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவே அரசாங்கத்தால் முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேசடிகளுடன் தொடர்புடையவர்களா என்று விசாரணை செய்து அவர்களுக்குரிய தண்டனையை வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்திடமே உள்ளதாகவும், அவசரகாலச் சட்டத்தை மீண்டும் பலப்படுத்தி சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கோ அல்லது தடுத்து வைப்பதற்கோ தற்போதய அரசாங்கத்திற்கு எந்தவொரு தேவையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சினைக்கான தீர்மானம் எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கும் நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சிகளுக்குமே உள்ளது. இந்த விடயத்தில் நான் இந்த நாட்டின் பிரதமர் என்ற வகையிலேயே செயற்படுவேன் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
இலங்கையினுள் எந்தவொரு பகுதியிலும் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. ஜாதி, மத பேதமின்றி அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய நாடொன்றை உருவாக்குவதே இந்த அரசாங்கத்தின் நோக்கமெனவும் அதற்காக அனைத்து தரப்பினரும் தங்களது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இனங்களுக்கு இடையில் ஒற்றுமை பலப்படும் வகையில் ஊடகங்களும் செயலாற்ற வேண்டும் என்றும் பிரதமர் இதன்போது கோரியுள்ளார்.
நாட்டுக்குள் நிதிக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதே இந்த அரசாங்கத்தின் அடுத்த நோக்கமாகும். அதற்கான புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிக்கிணங்க, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல தரப்பினர், நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். குறித்த விடயத்தில் உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்பை அடுத்து இப்பிரச்சினைக்கான தீர்வு பெற்றுக்கொள்ளப்படும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தேர்தல் முறையை மாற்றியமைப்பது குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னர் அது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRbSUlv2G.html

Geen opmerkingen:

Een reactie posten