தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 31 maart 2015

சந்திரிகா ஆணைக்குழு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு காணும்!– இரா. சம்பந்தன் நம்பிக்கை

ரவிராஜ், லசந்த கொலைகள் தொடர்பான மர்மங்கள் அம்பலமாகக்கூடிய சாத்தியம்
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 03:05.13 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம அசிரியர் லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் கொலைகள் தொடர்பான மர்மங்கள் அம்பலமாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்னும் ஒரு சில தினங்களில் இந்த சம்பவங்கள் குறித்த மர்மங்களை அம்பலப்படுத்த முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் வத்தளை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை உறுதி செய்யும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பலரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இவர்களில் சிலர் கடற்படை வீரர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 
சந்தேக நபர்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUkoyH.html

மஹிந்த இன்று நீதிமன்றில் முன்னிலையாக வேண்டியிருந்தது
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 03:30.08 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று நீதிமன்றில் முன்னிலையாக வேண்டியுள்ளது.
உச்ச நீதிமன்றில் இன்று முன்னிலையாகுமாறு மஹிந்தவிற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரை ஈடுபடுத்தி, சிவிலியன்களின் அடிப்படை உரிமையை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவிற்கு உச்ச நீதிமன்றம் இன்று முன்னிலையாகுமாறு உத்தரவிட்டு அழைப்பாணை பிறப்பித்திருந்தது.
இதேவேளை, இன்று நீதிமன்றில் முன்னிலையாவதா என்பது குறித்து சட்ட ஆலேசானைப் பெற்றுக்கொள்ள உள்ளதாக மஹிந்த ராஜபக்ச நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUkoyJ.html

சந்திரிகா ஆணைக்குழு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு காணும்!– இரா. சம்பந்தன் நம்பிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 03:06.25 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள ஆணைக்குழு, இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஆற்றலைக் கொண்டிருக்கும் என்று நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான எல்லா விபரங்களையும் அவரிடம் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.
இந்த பிரச்சினைகள் அர்த்தபூர்வமான வகையில், உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்.
1994ம் ஆண்டு, சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது, தமிழ் மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பதில் அக்கறை கொண்டிருந்தார்.
அந்தப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சிகளையும் ஆரம்பித்திருந்தார். எனினும் அதை வெளிப்படையாக காண முடியவில்லை.
முன்னைய அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு, புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததில் இருந்து, அரசியல் அரங்கில் பல மாற்றங்கள் இடம்பெறுகின்றன.
சிங்கள மக்களும் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்திருந்தார்கள், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக அவரை ஆதரித்திருந்தனர். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன பெற்ற வெற்றியினால் எல்லோரும் நன்மை பெற வேண்டும்.
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதிப்பளிப்பார் என்று நம்புகிறேன். அந்த கோரிக்கைகளை வென்றெடுப்பதில் நாம் தெளிவான கவனம் செலுத்த வேண்டும்.
பொருத்தமான அரசியல் தீர்வு காணுமாறு அனைத்துலக சமூகம் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகிறது என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUkoyI.html

Geen opmerkingen:

Een reactie posten