தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 maart 2015

கோத்தாவிடம் ரூ. 2000 கோடி நட்டஈடு கோரி அமைச்சர் ரவி கடிதம்

நிமல் சிறிபால எதிர்க்கட்சி தலைவராக நீடிக்க முடியுமா? சபாநாயகர் தீர்மானிப்பார்! - எனக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது!- சபாநாயகர்
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 12:14.08 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக மாறியுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சி தலைவராக இருக்க முடியுமா? என்பது தொடர்பில் சபாநாயகர் தமது முடிவை அறிவிக்கவுள்ளார்.
நிமல் சிறிபால டி சில்வா, எதிர்க்கட்சி தலைவராக இருப்பதை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.
ஜேவிபி, மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் தேசிய சுதந்திர முன்னணி என்பன நேற்று இதற்கு எதிராக கருத்துக்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்தன.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகரின் தீர்மானத்துக்கு தாம் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதனையடுத்து கருத்துரைத்த சபாநாயகர் தமது இந்த விடயம் தொடர்பில் முடிவெடுக்க அவகாசம் தேவை என்று குறிப்பிட்டார்.
நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது பற்றி எனக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது! சபாநாயகர்
நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது பற்றி தமக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் அனுரகுமார திஸாநாயக்க, விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்தன மற்றும் பிரதமர் ஆகியோர் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி கடுமையான முயற்சியின் ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டியதொன்றா?
எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் எனக்கும் சிறிய பிரச்சினையொன்று ஏற்பட்டுள்ளது.
சற்று கால அவகாசம் எடுத்து ஆராய்ந்து எனது நிலைப்பாட்டை அறிவிக்கின்றேன்.
எல்லோரும் எதிர்க்கட்சியினர் எனக் குறிப்பிட்டால் அடுத்து என்ன செய்வது என சபாநாயகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUlt5E.html

மஹிந்த பயன்படுத்தும் மேலதிக அரச சொத்துக்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்படும்!- அரசாங்கம்
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 12:35.34 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் பயன்படுத்தப்பட்டு வரும் மேலதிக அரச சொத்துக்களை மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவருக்கு கிடைக்கக் கூடிய வசதிகள் சலுகைகள் தொடர்பில் உச்ச நீதிமன்றில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பிற்குஅ அமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பயன்படுத்தி வரும் மேலதிக அரச சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவருக்கான சலுகைகள் குறித்து விதந்துரைத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியொருவர் இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்கள். இரண்டு மோட்டார் கார்கள், மூன்று சாரதிகள், உத்தியோகபூர்வ வீடுகள் மற்றும் எரிபொருள் வசதிகள் வழங்கப்படும்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குண்டு துளைக்காத இரண்டு வாகனங்கள், இரண்டு மோட்டார் கார்கள், ஒரு கெப் வண்டி, எட்டு மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட 21 வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றார்.
102 இராணுவத்தினர் உள்ளிட்ட 213 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாகனங்கள் இல்லாத காரணத்தினால் கூட்டங்களை நடத்த முடியாது என மஹிந்த தெரிவித்துள்ளார்.
கூட்டங்களை இடைநிறுத்தாது தொடர்ச்சியாக நடத்துமாறு கோருவதாக அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUlt5I.html

கோத்தாவிடம் ரூ. 2000 கோடி நட்டஈடு கோரி அமைச்சர் ரவி கடிதம்
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 01:40.44 AM GMT ]
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவிடமும் லங்கா பத்திரிகை நிறுவனத்திடமும் தலா 2 ஆயிரம் மில்லியன் ரூபா நட்டஈடு கோரி சட்டத்தரணியூடாக கடிதங்களை நேற்று அனுப்பி வைத்தார்.
தனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் போலியான தகவல்களை எவ்வித ஆதாரமுமின்றி இருவேறு சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் வெளிப்படுத்திய குற்றச்சாட்டிற்காகவே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தலா 2 ஆயிரம் மில்லியன் ரூபா கோரி சட்டத்தரணியூடாக கடிதங்களை நேற்று அனுப்பியுள்ளார்.
அரசியலில் பழிவாங்கும் நோக்கில் தனிநபர் பெயரை களங்கப்படுத்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் லங்கா பத்திரிகை நிறுவனமும் மேற்கொண்ட முயற்சிகள் தவறானவை என்பதனாலேயே தான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அமைச்சர் கூறினார்.
பெப்ரவரி 12ம் திகதி வெளிவந்த டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வழங்கியுள்ள செவ்வியில், அமைச்சர் ரவி கருணாநாயக்க அரசியலுக்கு வந்ததன் பின்னரே வீடு வாங்கியதாக குறிப்பிட்டிருந்தார்.
அதனை மறுத்து தனது சொத்துக்களை பிரகடனப்படுத்திய அமைச்சர் ரவி கருணாநாயக்க, எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் கோத்தபாயவும் தனது சொத்துக்களை பிரகடனப்படுத்த வேண்டுமென ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.
கோத்தபாய அதனை நிறைவேற்ற தவறியமையினாலேயே தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக 2 ஆயிரம் மில்லியன் ரூபா கோரி சட்டத்தரணியூடாக கடிதத்தினை அனுப்பியிருப்பதாகவும் அமைச்சர் நேற்று தெரிவித்தார்.
இதேவேளை துறைமுகப் பணிகளுக்காக அமைச்சர் ரவியினால் 200 வாகனங்கள் சேவையிலீடுபடுத்தப்படப் போவதாக போலியான தகவல்களை லங்கா பத்திரிகை வெளியிட்டிருந்ததாகவும் அமைச்சர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUlt6B.html



Geen opmerkingen:

Een reactie posten