[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 08:25.52 AM GMT ]
இந்த முதலை சுமார் 12 அடி நீளமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முதலை நாய்களை துரத்திக்கொண்டு மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த வேளையிலேயே மக்களால் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து ஏறாவூர்ப் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்தனர்.
சித்தாண்டி முருகன் கோயில் தீர்த்தக் குளத்திற்குள் இருந்தாக கருதப்படும் இந்த முதலை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நபர் ஒருவரை பலியெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து குறித்த முதலை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRdSUlw7E.html
ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்!
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 08:43.05 AM GMT ]
இம் மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
மேலும் நீர்கொழும்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த இல்லாத அரசியல் மணமகள் இல்லாத திருமண வீடு போன்றது: உதய கம்மன்பில
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 08:42.12 AM GMT ]
மகிந்த இல்லாத அரசியலில் வெளிச்சம் இல்லை, கவர்ச்சி இல்லை, எனவே எமது உயிரைப் பணயம் வைத்தாவது மீண்டும் மகிந்த ராஜபக்சவின் யுகத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
நாம் மேற்கொள்ளும் இந்த செயற்பாட்டை யாராலும் தடுத்து நிறுத்த முடியும், ஆனாலும் பரவாயில்லை நாம் எமது பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.
தற்பொழுது எழுச்சி பெற்றுள்ள மக்கள் அலைக்கு மைத்திரி அரசாங்கம் பயந்துள்ளது. எனவே தான் தேசிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளது எனவும் உதய கம்மன்பில மேலும் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு அழைத்து வருவதற்காக மேல் மாகாண சபை உறுப்பினர் பியல் நிஷாந்த டி சில்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட கருத்தரங்கில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் மோதுவது ரணிலுடனோ அல்லது மைத்திரியுடனோ அல்ல, அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனே. ஏகாதிபத்தியவாதிகள் எங்கள் ஆட்சியை பறித்துக்கொண்டது.
100 நாட்களில் ஆட்சியை திருப்பி தருவதற்கல்ல,தடைகள் இருந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தாய் நாட்டிற்காக மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்குள் கொண்டுவருவதற்கான போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தோற்கடிப்பது, அக்கட்சி உறுப்பினர்கள் அடி வாங்குவது, அவர்களின் தொழில் பறிபோவது ராஜித போன்ற அமைச்சர்களினாலேயே.
தாய் நாட்டை பாதுகாப்பதற்கும் மகிந்தவை மீண்டும் பிரதமராக்குவதற்கான, இப்போராட்டதில் இணைந்துள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்கினால் அது தாய் நாட்டை நேசிக்கிற மக்களை தண்டிப்பது போன்றென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRdSUlw7F.html
சுதந்திரக் கட்சி ஐ.தே.கட்சிக்கு முட்டுக்கொடுக்கும் கட்சியாக மாறியுள்ளது: தயான் ஜயதிலக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 08:41.35 AM GMT ]
இலங்கையின் சிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவரான பிலிப் குணவர்தனவின் 43 வது சிரார்த்த தின நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசியத்துவதை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான ஜனநாயகக் கட்சியாகும். ஏகாதிபத்திய சார்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றாக சமூக ஜனநாயக, தேசியத்துவ கட்சியாக பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்தார்.
இதனை மறந்து விட்டு, தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஏகாதிபத்திய சார்பான சம்பிரதாயத்தை கொண்ட எதிரியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு முட்டுக்கொடுக்கும் கட்சியாக மாறியுள்ளது.
இதற்காக பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை 1951 ஆம் ஆண்டு தொடங்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்கும் மேற்குலக சக்திகளின் சதித்திட்டங்கள் தற்போது செயற்பட்டு வருகிறது.
பண்டாரநாயக்கவின் கொள்கைகள் என்ற பெயரில் தற்போது அனுர பண்டாரநாயக்கவின் கொள்கைகளை சுதந்திரக் கட்சி தற்போது பின்பற்றி வருகிறது.
இது சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கையோ, எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் கொள்கையோ அல்ல எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRdSUlw7G.html
Geen opmerkingen:
Een reactie posten