தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 maart 2015

அகதிகள் தொடர்பில் அரசின் கொள்கைக்கு அவுஸ்திரேலியா வரவேற்பு

போலி வீசாவில் வெளிநாடு செல்ல முயன்ற தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 08:38.33 AM GMT ]
போலியான வீசா மற்றும் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நியூசிலாந்து செல்ல முயன்ற வடபகுதியைச் சேர்ந்த தம்பதியினரை கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையிலான உலக கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டியை பார்க்கப்போகும் போர்வையில் நியூசிலாந்து செல்ல முயற்சித்த தம்பதியினரே இவ்வாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறையை சேர்ந்த இவர்கள் போலி வீசா மற்றும் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நியூசிலாந்து செல்ல முயற்சித்த போது விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்தில் வசிக்கும் இவர்களின் உறவினர் ஒருவர் இலங்கையில் உள்ள முகவர் ஊடாக வெளிநாடு செல்வதற்கான ஆவணங்களை போலியாக தயாரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நியூசிலாந்தில் இறங்கிய பின்னர், 30 லட்சம் ரூபா வழங்கும் உடன்பாட்டின் அடிப்படையில், முகவர் இந்த போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRcSUlw0A.html

உதயங்க வீரதுங்க ரஸ்யாவில் இருக்கலாம் என்று சந்தேகம்: இலங்கை அரசாங்கம்
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 10:00.22 AM GMT ]
யுக்ரெய்ன் அரசாங்கத்தின் இரண்டு முறைப்பாடுகளுக்கு இணங்க ரஸ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது
எனினும் வீரதுங்க இன்னும் நாடு திரும்பவில்லை. 8 வருடங்கள் சேவையின் பின்னர் அவரின் பணிநிறுத்தப்பட்டவுடன் அவர் உரிய ராஜதந்திர முறைகளை பின்பற்றவில்லை.
அத்துடன் அவர் ராஜதந்திர கடவுச்சீட்டை மீள ஒப்படைக்கவுமில்லை என்று பதில் வெளியுறவு அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவர் இன்னும் ரஸ்யாவில் அல்லது யுக்ரெய்னில் இருக்கலாம் என்று பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
யுக்ரெய்ன் அரசாங்கத்துக்கு எதிராக போராடிவரும் தீவிரவாதிகளுக்கு ஆயுத விநியோகம் செய்தார் என்று குற்றச்சாட்டே உதயங்க மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி சீனாவில் இருந்து திரும்பியதும் முறையிடப்படும் என்று பெரேரா தெரிவித்துள்ளார்.
வீரதுங்க யுக்ரெய்னில் ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வந்ததாக பெரேரா தெரிவித்துள்ளார். உதயங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்களுக்கும் நிவாரணம்…!
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 10:23.04 AM GMT ]
இலங்கை ஊடகவியலாளர்களிற்கு வெகுசன உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிவாரணக்கடன் வசதி வழங்குவதற்கு ஊடக அமைச்சு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இலத்திரணியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் முழுநேர மற்றும் பகுதிநேர அடிப்படையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள்,முழு நேர பணியில் ஈடுபடும் ஊடக தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர்கள் ஆகியோர் விண்ணப்பிக்க முடியும் என்றும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரிகள் ஊடகங்களில் 3வருட சேவையைப் பூர்த்தி செய்திருப்பவர்களே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.
மோட்டார் சைக்கிள், கணனி, புகைப்படக்கருவிகள் கொள்வனவு செய்ய தலா 1லட்சம் ரூபாவும், தொலைநகல் கருவி(fax), டிஜிட்டல் ஒலிப்பதிவுக் கருவி கொள்வனவு செய்ய தலா 15ஆயிரம் ரூபாவும் நிவாரணக்கடனாக வழங்கப்படவுள்ளது.
ஊடக அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டிருக்கும் தெரிவுக் குழுவினால் தகைமையுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தெரிவு செய்யப்படுவர்.
இவ்விண்ணப்பங்களை ஏப்ரல் 3 ஆம் திகதிக்கு முன் கிடைக்கக் கூடியவாறு பணிப்பாளர் ( ஊடகம்) ஊடக அமைச்சு, இல 163, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட கொழும்பு – 05 என்ற முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்குமாறும்,
கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ஊடகவியலாளருக்கான ஊடக உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கான நிவாரணக்கடன் வசதி வழங்கல் 2015 என குறிப்பிட்டு அனுப்புமாறும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவிதாரண கேட்டுக் கொண்டுள்ளார்.


அகதிகள் தொடர்பில் அரசின் கொள்கைக்கு அவுஸ்திரேலியா வரவேற்பு
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 09:02.52 AM GMT ]
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் றொபின் மூடி இக்கருத்தை ஊடகங்களிடம் அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக பயணிக்கும் இலங்கை அகதிகளின் வருகை தற்போது மலிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந் நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRcSUlw0C.html

Geen opmerkingen:

Een reactie posten