[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 10:30.39 AM GMT ]
இந்த விவாதத்திற்காக நாடாளுமன்றத்தில் பத்தரை மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் நாள் விவாதம் ஏப்ரல் 9 ஆம் திகதி பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 7.30 வரை நடைபெறவுள்ளதுடன் இரண்டு நாள் விவாதம் மதியம் 1.30 முதல் பிற்பகல் 6.30 வரை நடைபெறவுள்ளது. கட்சி தலைவர்கள் இதற்கு இணக்கத்தை வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனக் கூறி, உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் ஏப்ரல் 1 ஆம் மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன் உயர் நீதிமன்றம் எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு முன்னர் தீர்ப்பை ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அனுப்பி வைக்க உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கி்ன்றன.
http://www.tamilwin.com/show-RUmtyDRcSUlw0G.html
நீதிமன்றத்தின் தீர்ப்பையும் பாராது ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளின் தடையை நீடித்துள்ளது: அரசாங்கம்
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 10:36.39 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான அரசாங்கத்தினால் விடுதலைப் புலிகளின் தடையை நீடிக்க முடிந்துள்ளது என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்பு கொண்டு இந்த தடையை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த நவம்பரில் அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பெரட்ரிக்கா மொக்ஹெரன்னியுடன் தொடர்புகொண்டு இந்த தடையை நீடிக்குமாறு கோரியிருந்தார் என்றும் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRcSUlw0H.html
Geen opmerkingen:
Een reactie posten