[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 03:54.11 PM GMT ]
கல்லடி, வேலூரில் உள்ள பெண்ணொருவரும் கொமர்சியல் நுண்கடன் வழங்கும் நிறுவகத்தின் சில ஊழியர்களும் இணைந்து பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக கடந்த காலத்தில் பல முறைப்பாடுகளை குறித்த நிறுவனத்திடம் தெரிவித்தபோதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.
இன்று காலை கொமர்சியல் கிறடிட் நுண்கடன் வழங்கும் நிறுவனத்தின் முன்பாக இதுதொடர்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கையெடுத்தபோது, குறித்த பெண் தான் பணத்தினை தருவதாகவும் வீட்டுக்கு வருமாறும் அழைத்துள்ளார்.
இந்தநிலையில் வீட்டுக்கு சென்ற பெண்கள் மீது, குறித்த பெண் தாக்குதல் நடத்தியதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
இதனையடுத்து, மட்டக்களப்பில் உள்ள வேலூரில் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் பெணின் வீட்டுக்கு முன்பாக கூடிய பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது தங்களது பணங்களை கொள்ளையடித்துக் கொண்டு தங்களை தாக்கிய பெண்ணை கைது செய்யும் வரையில் தாங்கள் போராட்டங்களை மேற்கொள்ளப் போவதாக பெண்கள் தெரிவித்தனர்.
மிகவும் கஸ்டங்களுக்கு மத்தியில் கடன்களைப்பெற்று அவற்றின் மூலம் மாதம் மாதம் பெறும் பணத்தினை குறித்த நிறுவனத்துக்கு செலுத்தி வந்தபோதும் அந்த பணத்தினை குறித்த பெண்ணும் கொமர்சியல் கிறடிட் நுண்கடன் வழங்கும் நிறுவகத்தின் சில ஊழியர்களும் சிலரும் இணைந்து மோசடி செய்துள்ளதாகவும் அதன் காரணமாக தாங்கள் கட்டிய பணம் குறித்த நிறுவனத்தில் செலுத்தப்படவில்லையெனவும் இதன்போது கருத்து தெரிவித்த பெண்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கல்லடி, வேலூர் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்களின் பணம் இவ்வாறு சூறையாடப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான சம்பவங்கள் இனி இந்த மாவட்டத்தில் நடைபெறாத வண்ணம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புபட்ட பெண்ணை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை செய்வதாகவும் பாதிக்கப்பட்டவர்களையும் பொலிஸ் நிலையம் வருமாறு கோரிய நிலையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyDRaSUlvzB.html
பழுதடைந்த பொருட்களை விற்கும் வர்த்தகர்கள் பற்றிய தகவல்களை வழங்கினால் சன்மானம்
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 04:32.52 PM GMT ]
பொருட்களை பதுக்கி வைப்போர், பழுதடைந்த, தரம் குறைந்த, காலாவதியான பொருட்களை விற்பனை செய்வோர் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு நிதிச் சன்மானங்கள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகார சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் நுகர்வோர் பாதிக்கப்படுவதனை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ள விசேட பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
நுகர்வோர் அதிகாரசபையின் பேச்சாளர் ஒருவர் இந்த தகவல்களை கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி, பிரதமருடன் நெருக்கமாக முயற்சி: அர்ஜூன
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 05:11.43 PM GMT ]
சூதாட்டக்காரர்கள், எதனோல் வியாபாரிகள், போதைப்பொருள் வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட தரப்பினர் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் நெருங்கிக்கொள்ள முயற்சிக்கின்றனர்.
மக்கள் பணத்தைக் கொள்ளையிடவே இவர்கள் முயற்சிக்கின்றனர். இவ்வாறான மோசடிகாரர்களின் முயற்சியை நாம் தோற்கடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்தாண்டு கால குடும்ப சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு ஆளும் எதிர்க்கட்சிகள் இணைந்து நாட்டை மீளக்கட்டியெழுப்பி வரும் முயற்சியை மலினப்படுத்த சிலர் சூழ்ச்சி செய்கின்றார்கள்.
இந்த சூழ்ச்சிகாரர்களின் பங்குதாரர்கள் ஆளும் கட்சிக்குள்ளும் இருக்கின்றார்கள் என்பது அதிர்ச்சியை அளிக்கின்றது.
இவ்வாறான நபர்களுக்கு எப்போது நாடாளுமன்ற தேர்தல் நடத்தினாலும் வேட்பு மனுக்களை வழங்க வேண்டாம் என ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் கோருகின்றேன் என அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடிதம் ஒன்றின் மூலம் அவர் இந்தக் கருத்துக்களை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRaSUlvzF.html
Geen opmerkingen:
Een reactie posten