தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 maart 2015

தேசிய அரசாங்கத்தில் இணைய இரண்டு காரணங்கள்: அநுர பிரியதர்சன யாப்பா



ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் மாயம்! வலைபோட்டுத் தேடும் மைத்திரி அரசு
[ திங்கட்கிழமை, 23 மார்ச் 2015, 05:38.42 PM GMT ] [ பி.பி.சி ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக உதயங்க வீரதுங்க செயற்பட்டார்.
இவர் கிழக்கு யுக்ரேனிலுள்ள பிரிவினைவாத கிளர்ச்சியாளரக்ளுக்கு ஆயுத விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு முன்னாள் இலங்கைத் தூதுவர் ஆயுதம் விநியோகித்துள்ளதாக யுக்ரேன் ஜனாதிபதி பெட்ரோ பொரொஷென்கோவின் அரசாங்கம் இலங்கை வெளியுறவு அமைச்சிடம் முறைப்பாடு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.
அரசியல் நியமனமாக ரஷ்யாவுக்கான தூதுவராக பணியாற்றியிருந்த உதயங்க வீரதுங்க, அண்மையில் புதிய அரசாங்கத்தால் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்ததாக இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் அஜித் பி. பெரேரா பிபிசிக்கு வழங்கிய செவ்வியின் போது குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அவர் நாட்டுக்கு திரும்பியதாகத் தெரியவில்லை என்றும் வெளியுறவு அமைச்சினால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அஜித் பெரேரா கூறினார்.
உதயங்க வீரதுங்க, இலங்கைக்கு வந்ததாகவும் தகவல் இல்லை. உலகில் எங்கிருக்கிறார் என்றும் கூறமுடியவில்லை. அவரைக் காணவில்லை' என அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினர் என்று உதயங்க வீரதுங்க-வை விபரித்த துணை வெளியுறவு அமைச்சர், அவர் தொடர்பிலான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகக் கூறினார்.

தேசிய அரசாங்கத்தில் இணைய இரண்டு காரணங்கள்: அநுர பிரியதர்சன யாப்பா
[ திங்கட்கிழமை, 23 மார்ச் 2015, 04:42.12 PM GMT ]
இரண்டு காரணிகளை கருத்திற்கொண்டே தேசிய அரசாங்கத்துக்குள் பங்கேற்பது என்று முடிவெடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள அவர், அரசியல் அமைப்பு திருத்தங்கள் மற்றும் தேர்தல் முறையில் மாற்றம் என்பவே அவையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு இணக்கத்தை வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRXSUls7I.html

Geen opmerkingen:

Een reactie posten