[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 04:58.25 AM GMT ]
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவை மேற்கொண்டு வரும் அறிக்கை இம்மாதம் சமர்பிக்க தீர்மானித்திருந்தது.
எனினும் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் காரணமாக பக்கசார்பற்ற உள்ளக விசாரணை மேற்கொள்ளப்படும் என தற்போதைய அரசாங்கம் கேட்டு கொண்டதற்கிணங்க இவ் அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சமர்பிப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அனுமதி வழங்கியிருந்தார்.
இந்த அறிக்கை சமர்பிப்பதற்கான காலம் தாமதப்படுத்தப்பட்டமையினால் மேலதிக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் இல்லை என மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்கனவே போதியளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், இதனால் மேலதிக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ள தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன ஆதரவுடனேயே மேற்குலக நாடுகளுடன் தொடர்பு: அரசு
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 05:21.00 AM GMT ]
தற்போதைய அரசாங்கம் புதிதாக மேற்குலக நாடுகளுடன் பேணும் உறவுகள் சீனாவை பகைத்து கொண்டு பேணப்படவில்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவுடனான உறவுகள் சீனாவுடனான உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுடனான நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்தி கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் யுத்தம் இடம்பெற்ற கால கட்டத்தில் சீனா, ரஷ்யா, மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்கின எனவும் குறிப்பிட்டார்.
எது எவ்வாறாக இருப்பினும் விடுதலை புலிகள் தோல்வியடைவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் அமெரிக்காவின் ஒத்துழைப்பையும் பெற்று கொண்டது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை அணி சேரா நாடுகளின் கொள்கையை பின்பற்றி வருவதினால் எந்தவொரு மேற்குலகத்தையும் பகைத்து கொள்ள விரும்பவில்லை எனவும் அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பு இலங்கையின் முன்னேற்றத்திற்கு அவசியம் எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு வழங்கிய அடல்பிகாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 05:27.02 AM GMT ]
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது நேற்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவருடைய இல்லத்திற்கு நேரில் சென்று இந்த விருதினை வழங்கி வைத்தார்.
அடல்பிகாரி வாஜ்பாய் ஈழத் தமிழர்கள் பிரச்சனையில், தமிழர்களுக்கு ஆதரவாகவே தம் ஆட்சிகாலத்தில் முடிவுகளை மேற்கொண்டார். இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தந்தை நிறுத்திவைத்ததோடு, எதிர்காலத்திலும் ஆயுத தளபாடங்கள் எதுவும் இலங்கைக்கு அளிக்கக்கூடாது என்று தெளிவான உத்தரவைப் பிறப்பித்தார்.
பம்பாயிலிருந்து இவர் ஆட்சிகாலத்தில் இந்தியாவின் போர்கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்ப இருந்ததை தடுத்து ஆணையிட்ட இரும்பு மனிதர். 1986ம் ஆண்டு மே மாதம் மதுரை பந்தயத் திடலில் டெசோ மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் வாஜ்பாயும் கலந்துகொண்டார்.
அத்தோடு இவர் ஒரு சிறந்த கவிஞர், இலக்கியகர்த்தா, ரசனைமிகுந்தவர், ஆங்கிலத்திலும் இந்தியிலும் சிறப்பாக மக்களை ஈர்க்கக் கூடிய பேச்சாளர், மென்மையானவர், அரசியலில் அடிமட்டத்திலிருந்து வளர்ந்தவர். இவருடைய நாடாளுமன்ற பேச்சுக்கள் நான்கு தொகுதிகளாக புத்தகமாக வெளிவந்துள்ளன. அவை இந்தியாவின் சமகால அரசியலைப்பற்றி சொல்கின்ற ஆவணங்களாகும்.
http://www.tamilwin.com/show-RUmtyDRcSUlwyD.html
Geen opmerkingen:
Een reactie posten