தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 maart 2015

ஆப்கானில் பெண் கொலை: வெளியான புது தகவல்கள்



இஸ்லாமியர்களின் புனித நூலான குர் ஆனை எரித்ததாகக்கூறி ஆப்கானிஸ்தானில் அண்மையில் இளம் பெண்ணொருவர் அடித்துக் கொலைசெய்யப்பட்டார்.
27 வயதான பர்குந்தா என்ற பெண்ணே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்திருந்தார்.
மேலும் குறித்த பெண் தாக்கப்படும் காணொளியும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் குறித்த பெண்ணின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் பெண்கள் உட்பட நூற்றுக் கணக்கானோர் பங்குபற்றியுள்ளனர்.


இறுதி ஊர்வலத்தில் பங்குபற்றியோர் குற்றவாளிகளை தண்டிக்கும் படியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை இக் கொலை தொடர்பில் புதுத் தகவல்களை விசாரணைகளை மேற்கொண்டு வருவோர் வெளியிட்டுள்ளனர்.
அதாவது பர்குந்தா புனித குர் ஆனை எரித்தமைக்கான எவ்வித ஆதாரமும் இல்லையென அவர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் ஆரம்பத்தில் கூறப்பட்டதைப் போல அப் பெண் மனநிலை குன்றியவர் இல்லையென அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்  மார்க்கப் பற்று கொண்டவர் எனவும் சமய ஆசிரியை ஆகுவதற்கான பயிற்சியை பெற்று வந்த தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் பர்குந்தா தினசரி 5 தடவைகள் தொழுகையில் ஈடுபட்ட துடன் , குர் ஆனை மனப் பாடம் செய்தவர் எனவும் அவரது உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


  
http://www.hirunews.lk/tamil/106108/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Geen opmerkingen:

Een reactie posten