தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 maart 2015

நல்லாட்சியில் குழப்பம்?

பூநகரி கிராமங்களின் தேவைகளை ஆராயும் பொருட்டு மக்கள் சந்திப்பில் பா.உறுப்பினர் சிறீதரன்
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 07:55.19 AM GMT ]
கிளிநொச்சி, பூநகரி கிராமங்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை ஆராயும் பொருட்டு பா.உறுப்பினர் சி.சிறீதரன் நேற்று அங்கு சென்று மக்களுடனான சந்திப்புக்களை நடாத்தியுள்ளார்.
பூநகரியின் வலைப்பாடு, கரியாலை, நாகபடுவான், பள்ளிக்குமா, ஜெயபுரம், முழங்காவில். சோழ நிலா குடியிருப்பு, சோலை பல்லவராயன்கட்டு போன்ற கிராமங்களின் மக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களை சந்தித்து கிராமங்களில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தேவைகள் பற்றி ஆராய்ந்துள்ளார்.
இந்த சந்திப்புக்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பூநகரி பிரதேசத்தின் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பா.உறுப்பினர் சி.சிறீதரன்,
பூநகரி பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் காணி, வீட்டுத்திட்டம், மின்சாரம், வாழ்வாதாரம், கல்வி போன்றவை தொடர்பாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளும் தேவைகளும் உள்ளதை அறிந்து கொண்டுள்ளேன்.
இந்த விடயங்களுக்கு உரிய அதிகாரிகளுடன் பேசி தீர்வுகளை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்ததுடன் பல்வேறு உதவிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் நம்பிக்கை வெளியிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRcSUlwzH.html

இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்டவர்கள் அதுகுறித்து தெளிவுபடுத்துமாறு கோரிக்கை
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 07:58.08 AM GMT ]
இராஜதந்திர கடவுச்சீட்டுகளை கொண்டுள்ளவர்கள் எந்த காரணத்திற்காக அவற்றைப் பெற்றுக்கொண்டனர் என்பதை தெளிவுபடுத்துமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கடந்த அரசாங்கத்தின் போது பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், பல சிறப்புரிமைகளை வழங்கும் இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை பலருக்கு வழங்கியிருந்தது.
இது தொடர்பாக திணைக்களத்தின் அதிகாரிகள் மீளாய்வு பணிகளை மேற்கொண்டனர். இதனையடுத்தே ராஜதந்திர கடவுச்சீட்டுக்களை கொண்டுள்ளவர்கள் எப்படி, எந்த காரணங்களின் அடிப்படையில் அவற்றை பெற்றுக்கொண்டனர் என்பது குறித்து தமக்கு தெளிவுபடுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் டி. சொய்சா தெரிவித்தார்.
முன்னாள் ஆட்சியாளர்களின் கீழ் இயங்கிய ஜனாதிபதி செயலகம் பல பேருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை வழங்குமாறு பரிந்துரைத்திருந்தது.
ஜனாதிபதி செயலகம் பரிந்துரைத்திருந்த காரணத்தினால், அதிகாரிகள் இராஜதந்திர கடவுச்சீட்டை விநியோகிக்கும் போது அந்த நபர்களின் தகுதி குறித்து கேள்வி எழுப்பவில்லை.
எனினும் இராஜதந்திர கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் முன்னர் அரசாங்கம் கடைபிடிக்கும் நடைமுறைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
கடந்த அரசாங்கத்தின் போது ஜனாதிபதி செயலகத்தின் பரிந்துரைகளுக்கு அமைய விநியோகிக்கப்பட்ட 39 இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன எனவும் டி.சொய்சா குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் சிரேஷ்ட அரச அதிகாரிகள், உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதியரசர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வழங்கி வருகிறது.
ஆனால், வெளிநாடுகளில் உள்ள தூதரங்களில் பணிபுரிவோரின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் இந்த இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆயிரத்து 809 பேருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை திணைக்களம் வழங்கியுள்ளதுடன் அவர்களில் 50 பேரிடம் இது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் உதவி கட்டுப்பாட்டாளர் டி.சொய்சா குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய பிரமுகர்களை தவிர வெளிநாட்டு சேவையில் பணியாற்றும் அதிகாரிகள், வெளிவிவகார அமைச்சின் சகல நிறைவேற்று அதிகாரிகள், பௌத்த பீடங்களில் தலைமை பிக்குகள், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத தலைவர்கள் மற்றும் தேயிலை விரிவாக்கல் பிரிவுக்கு பொறுப்பான ஆணையாளர் ஆகியோருக்கும் இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன.

நல்லாட்சியில் குழப்பம்?
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 07:59.08 AM GMT ]
சமீபத்தில் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் இருவரினால் தற்பொழுது அரசாங்கத்தினுள் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த வாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் உள்ள சிலரை அமைச்சரவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டது.
அதில் விசேடமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை நிர்வாணமாக பாதையில் ஓடவிடுவதாக கூறிய எஸ்.பி.திஸாநாயக்க உட்பட இன்னும் சிலருக்கு அமைச்சரவையில் பதவி பிரமாணம் வழங்கினார்கள்.
இதனால் அரசாங்கத்தில் குழப்பநிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தவிர இரத்தினபுரி மாவட்டத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு அரசாங்கத்தில் கதவு திறக்கப்பட்டது தொடர்பாகவும் அரசாங்கத்தினுள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறானவர்களை அருகில் வைத்திருப்பதனால் தான் இந்நாட்டு மக்களுக்கு அரசாங்கம் மீதுள்ள நம்பிக்கை குறைந்து வருகின்றது என நல்லாட்சியின் பிரபலங்களுக்கு நினைவுபடுத்துவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRcSUlwzJ.html

Geen opmerkingen:

Een reactie posten