தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 maart 2015

மைத்திரி சகோதரர் கொலை களம் இறங்கும் "றோ"

கடந்த 26ம் திகதி இரவு ஏற்பட்ட தாக்குதல் சம்பவமொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் ,பிரியந்த சிறிசேன படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார் என்று பலரும் அறிந்திருப்பீர்கள். இன் நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த பிரியந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள், மீது விசாரணை நடத்த அமெரிக்கா முதலில் உதவ இருப்பதாக தெரியவந்துள்ளது. அமெரிக்கா தனது உளவு அதிகாரிகளை இலங்கைக்கு வழங்கி விசாரணைகளை முன்னெடுக்க உதவிபுரிய இருந்துள்ளது. இருப்பினும் முண்டியடித்த இந்தியா , "றோ" அதிகாரிகள் சிலரை தற்போது கொழும்புக்கு அனுப்பி , இலங்கை அரசுக்கு உதவுமாறு , பணித்துள்ளது என்று அறியப்படுகிறது.
மைத்திரியின் சகோதரர் , அடாவடிகளில் ஈடுபட்டவர் என்ற கருத்தும் உள்ளது. ஆனால் அவற்றைக் கூட கணக்கில் எடுக்காது , இந்தியாவும் அமெரிக்காவும் நான் நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு இக்கொலையை விசாரிக்க உதவுவதாக கூறுகிறார்கள். இதேவேளை மைத்திரி கூட இதனை அவ்வளவு சீரியசாக எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை ஜனாதிபதியின் சகோதரரது மறைவிற்குஇ பாகிஸ்தான் மக்களும் அரசாங்கமும் ஆழ்ந்த இரங்கலையும் அதிர்ச்சியையும் வெளியிட்டுக் கொள்வதாக இலங்கைக்கான பாகிஸ்தான் பதில் உயர்ஸ்தானிகர் டொக்டர் சப்ராஸ் சிப்ரா தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten