தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 maart 2015

கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவி பெற முயற்சித்தால் தோற்கடிப்போம்!– டக்ளஸ் தேவானந்தா

பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகமாக யாழ். மாவட்டத்திலேயே உள்ளன! அமைச்சர் ரோசி சேனநாயக்க
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 02:45.50 AM GMT ]
பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகமாக உள்ளன என சிறுவர் விவகார அமைச்சர் ரோசி சேனநாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கான விஐயத்தை மேற்கொண்ட சிறுவர் விவகார அமைச்சர் ரோசி சேனநாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் எமது நாட்டை மீளக் கட்டி எழுப்புவதில் ஆர்வமாக இருக்கின்றார்.
யுத்தம் முடிவடைந்த  பின்னர் கடமையின் நிமித்தம் மீண்டும் யாழ்ப்பாணம் வருகை தருவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
யுத்தகாலத்தில் வடபகுதி பெண்கள், சிறுவர்கள் அதிகளவு துன்பங்களை சந்தித்திருந்தார்கள் எனினும் யுத்தம் முடிவடைந்த பின்னர் அவர்களுக்குரிய புனர்வாழ்வு பணிகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
எனினும் அவர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அவற்றுக்குரிய தீர்வைப் பெற்று கொடுக்க ஆவலாக உள்ளோம்.
பெண்களை தலைமைத்துவமாக கொண்டு செயற்படும் குடும்பங்களின் எண்ணிக்கை யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகமாக காணப்படுகின்றது.
எமது ஐனாதிபதியும், பிரதமரும் இணைந்து கடந்த வாரம் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒரு பகுதியை செய்து முடித்திருக்கிறார்கள். அடுத்த பகுதியாக வடபகுதியில் உள்ள கர்ப்பிணி தாய்மாருக்கான நலன் திட்டமாக ரூபா 200000 வழங்கும் நிகழ்வு செயல்ப்படுத்தப்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விஐயம் மேற்கொண்டு மக்களுக்கு உள்ள தேவைப்பாடுகள் வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQUSUlx1C.html


எனது கணவர் கொலை செய்யப்பட்டமை திட்டமிடப்பட்ட சதி: பிரியந்த சிறிசேனவின் மனைவி
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 05:33.03 AM GMT ]
தனது கணவர் கொலை செய்யப்பட்டது திட்டமிடப்பட்ட சதி என ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேனவின் மனைவி தெரிவித்துள்ளார்.
தனது கணவரின் கொலையின் பின்னால் பல சதிகாரர்கள் உள்ளார்கள். குற்றம்சாட்டப்பட்டுள்ள காராஜ் உரிமையாளரை நான் முன்னர் ஓரு போதும் சந்தித்ததில்லை. குறிப்பிட்ட கராஜ் தனது பணத்திலேயே கட்டப்பட்டது என எனது கணவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த நபரிற்கு அவர் பெருந்தொகை பணத்தை வழங்கியுள்ளார். பணத்தை பெற்ற நபர் அந்த பணத்தை மீண்டும் திருப்பிக்கொடுக்க விரும்பாததாலேயே இந்த கொலையை அவர் புரிந்துள்ளார்.
எனது கணவர் எனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வெளியே சென்று வருமாறு கூறினார். அதற்கு சில மணிநேரத்தின் பின்னர் நான் அவருடைய தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன், ஆனால் முடியவில்லை என பிரியந்த சிறிசேனவின் மனைவி கீதாஞ்சலி சமன்குமாரி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQUSUlx2A.html

அமைச்சு பதவியை நகைச்சுவைக்காகவே பெற்றேன் – எஸ்.பீ.திஸாநாயக்க
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 06:15.43 AM GMT ]
தான் அமைச்சர் பதவியை ஒரு நகைச்சுவைக்காகவே பெற்றேன் என அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கான கூட்டத்தில் இடம்பெற்ற குழப்பத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனக்கு வழங்கப்பட்ட அமைச்சு பதவி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம், மத்திய குழு அனுமதித்த தீர்மானம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நேரத்தில் எங்களுக்கு பொய் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நான் என்றால் நடிப்பதற்காகவே பதவியேற்றுள்ளேன்.
இது ஒரு நகைச்சுவை.
இவ்வாறான ஒரு நேரத்தில் தேர்தலுக்கு சென்று எங்களால் வெற்றி பெற முடியாது. தேர்தலை தாமதப்படுத்துவதென்றால் இவ்வாறான ஒரு நடிப்பு அவசியமான ஒன்று என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவி பெற முயற்சித்தால் தோற்கடிப்போம்!– டக்ளஸ் தேவானந்தா
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 06:00.23 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற தயாரானால், அதனை தோற்கடிக்க அணிதிரளப் போவதாக முன்னாள் அமைச்சரும், ஈபிடிபியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற எந்த கட்சிக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்குமாயின் அதனை தடுக்க ஈபிடிபி நடவடிக்கை எடுக்கும்.
1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அ.அமிர்தலிங்கத்திற்கு கிடைத்ததாகவும், அதன் பிரதிபலன் 2009 மே 19ம் திகதி நந்திக்கடல் களப்பில் முடிவடைந்தது எனவும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
இதனால், வடக்கில் மீண்டும் ஆயுத போராட்டம் ஏற்படுவதை தடுக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கக் கூடாது எனவும் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQUSUlx2D.html

Geen opmerkingen:

Een reactie posten