தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 maart 2015

அதிகம் பேசாதே உட்காரு! தேசிய பாடசாலை அதிபரைப் பார்த்துக் கூறிய ரணில்!

த.தே.கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்ய தமிழரசுக் கட்சியினர் ஒத்துழைப்பு தேவை: சம்பந்தன்
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 03:35.10 PM GMT ] [ பி.பி.சி ]
தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதென்றால் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பும் அங்கீகாரமும் தேவை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமையன்று திருகோணமலை நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு விடயத்தில் விஷேடமாக தான் சார்ந்த கட்சியான இலங்தைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டியது மிக முக்கியமானது என அவர் கூறினார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டு பாரிய பங்களிப்புகளை செய்தவர்கள் என்று கூறிய அவர் தமிழரசுக் கட்சியினரின் ஒத்துழைப்பும் அங்கீகாரமும் இன்றி இதனை முன்னெடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்
இலங்கை தமிழ் அரசுக்சு கட்சி, டெலோ, புளொட் மற்றும் ஈ. பி. ஆர். எல். எப் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில் இலங்கை தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்துவரும் நிலையிலே இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டபப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய மாட்டோம் என நாம் ஒரு போதும் கூறவில்லை. அதனை பதிவு செய்வதென்றால் அதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும். எமது மக்கள் முழுமையாக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தற்போது சகலரும் ஒருமித்து செயல்படும் வேளையில், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு உயர்ந்த அங்கீகாரத்தை பெற்றுள்ள நிலையில், அந்த அங்கீகாரத்தை சகலரும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்துவிட்டவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும் என கூறிவிட முடியாது என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அங்கத்தவர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் எற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்றது.
http://www.tamilwin.com/show-RUmtyDRcSUlw3D.html

மட்டக்களப்பில் கூத்துப் பெருவிழா 2015!- கல்வி அபிவிருத்திச் சங்கம் ஏற்பாடு
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 03:51.03 PM GMT ]
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் பாரம்பரிய நாட்டுக்கூத்துகளைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் “மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம்” கூத்துப் பெருவிழா 2015ஐ ஏற்பாடு செய்துள்ளது.
கூத்துக் கலைஞர்களிடையே போட்டிகளை நடத்தி அவர்களுள் சிறந்த கலைஞர்களையும் கூத்தையும் தெரிவுசெய்து பெறுமதியான பரிசுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய ஏழு கூத்துக் கழகங்களைச் சேர்ந்த 140 கலைஞர்கள் பங்குபற்றிய கூத்துப்போட்டிகள் நொச்சிமுனை கல்வி அபிவிருத்திச் சங்க விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமையும் இன்று சனிக்கிழமையும் நடைபெற்றன.
இதில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவான மூன்று கூத்துகளுக்கான போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி உப்போடை ஸ்ரீ சித்திவிநாயகர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளன.
போட்டியில் வெற்றிபெறும் கூத்துக்குப் பெறுமதியான பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்றில் முதற்தடவையாக கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும் இந்தக் கூத்துப்பெருவிழாவிற்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இறுதிப்போட்டி நடைபெறும் தினத்தன்று கலைஞர் மாஸ்டர் சிவலிங்கத்திற்கான கௌரவிப்பு விழாவும் நடைபெறவுள்ளதாக கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் சி.தேவசிங்கம் தெரிவித்தார்.

அதிகம் பேசாதே உட்காரு! தேசிய பாடசாலை அதிபரைப் பார்த்துக் கூறிய ரணில்
[ சனிக்கிழமை, 28 மார்ச் 2015, 03:54.22 PM GMT ]
நீ பாடசாலைக்குச் செல்லும்போது நான் கல்வியமைச்சராக இருந்தவன். போதும் உட்காரு என தேசிய பாடசாலை அதிபர் ஒருவரைப் பார்த்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் கூறியிருக்கின்றார்.
இன்றைய தினம் காலை யாழ்.மாவட்டச் செயலகத்தில் தேசிய பாடசாலை அதிபர்களுடான சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் தனது பாடசாலையின் குறைகள் தொடர்பாக எழுந்து நின்று பேசியபோது ஆய்வுகூடம், கட்டிடட வசதி மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை போன்றன தமது பாடசாலையில் இருப்பதாக கூறினார்.
இதன்போது உங்கள் பாடசாலை போரினால் பாதிக்கப்பட்டதா? என பிரதமர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு சற்றே தடுமாறிய அதிபர் இல்லை எங்கள் பாடசாலையில் முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என மீண்டும் மீண்டும் கூறியதுடன், தங்கள் பாடசாலையில் வளப்பற்றாக்குறை உள்ளது. என மீண்டும் கூறிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் கோபமுற்ற பிரதமர் ரணில் நீ பாடசாலைக்கு செல்லும்போது நான் கல்வி அமைச்சராக இருந்தவன், அதிகம் பேசாதே போதும் உட்காரு என சிங்கள மொழியில் கூறினார்.
இதனையடுத்து சற்றே திகைப்படைந்த குறித்த அதிபர் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்துவிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRcSUlw3F.html

Geen opmerkingen:

Een reactie posten