தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 maart 2015

ஐ.தே.கவுடன் இணைவது வாக்களித்த மக்களுக்கு இழைக்கும் துரோகம்

பொது பல சேனா மகிந்தவை தோற்கடித்த புழுக்கள்!– டிலான் பெரேரா
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 09:18.16 AM GMT ]
சுற்றியிருந்த புழுக்களினால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்ற பாரிய மரம் விழுந்து விட்டதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச என்ற மரம் சுற்றியிருந்த சில புழுக்களினாலே முறிந்து விழுந்தது. பொது பல சேனா புழுக்களை கழுத்தில் போட்டுக்கொண்டது.
அரசாங்கத்தினுள் இருந்துகொண்டு அரசாங்கத்தை பற்றி விமர்சனங்கள் செய்த, பொருளாதார கொலைகாரர்கள் என கூச்சலிட்டவர்கள் புழுக்கள்.
அவ்வாறான புழுக்களினாலே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்துள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தேர்தல் சட்டமூலம் ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 09:20.45 AM GMT ]
புதிய தேர்தல் சட்டமூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள வார இதழ் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளது.
தேர்தல் முறைமை மாற்றம் குறித்த அம்சங்கள் உள்ளடக்கப்பட்ட சட்டமூலம் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரியவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சீன விஜயத்திற்கு முன்னரே இச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது என குறித்த வார இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.tamilwin.com/show-RUmtyDRdSUlxyA.html

ஐ.தே.கவுடன் இணைவது வாக்களித்த மக்களுக்கு இழைக்கும் துரோகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 09:32.51 AM GMT ]
சிறுபான்மையாகவுள்ள ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம் என முன்னாள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள அச்சு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெற்றிலை சின்னத்தில் மக்கள் வாக்குகளினால் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள நாம் ஐ.தே.கவுடன் இணைவது வெட்ககேடு என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மரத்துக்கு மரம் தாவும் குரங்குகளை போல கட்சிக்கு கட்சி மாறுவது நல்ல மனிதனுக்குரிய பண்பாடல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா எனக்கு அழைப்பு விடுத்தார் என தெரிவித்த முன்னாள் அமைச்சர்,
கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்காமல் இருந்து விட்டு பதவி மோகம் பிடித்தவர்களை போல் அமைச்சு பதவியை பெற்று கொள்வது நன்னடத்தையுள்ள ஒருவருக்கு முறையானதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRdSUlxyB.html

Geen opmerkingen:

Een reactie posten