தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 maart 2015

19வது அரசியலமைப்பு முரண்பாட்டை தீர்க்க சர்வஜன வாக்கெடுப்பு?

எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு இழுவைப்படகுகளை பயன்படுத்தமாட்டோம்!- இந்திய மீனவர்கள் இணக்கம்
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 12:41.02 AM GMT ]
எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு பாக்கு நீரிணையில் இழுவைப்படகுகளை பயன்படுத்துவதில்லை என்று தமிழக மீனவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். 
இந்தநிலையில் இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் நேற்று சென்னையில் இடம்பெற்ற சந்திப்பு சுமுகமாக முடிந்திருக்கிறது.
இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்துவதன் காரணமாக இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் பிரச்சினை தொடர்ந்து வருகிறது.
இதனை தீர்க்கும் முகமாக தமிழக அரசாங்கம் 52 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது.
இதனைத் தவிர இந்திய மத்திய அரசாங்கம் 975 கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று சந்திப்பில் பங்கேற்ற தமிழக மீனவர் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் இந்திய தரப்பில் இருந்து வரும் இழுவைப்படகுகள் இலங்கை கடல்பகுதிக்கு வராமல் ஆழ்கடல் பகுதிகளுக்கு திருப்பிவிடப்படவுள்ளன.
இதேவேளை குறித்த மூன்று வருட காலப்பகுதியில் 83 நாட்கள் தாம் பாக்குநீரிணையில் தொழில் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று இந்திய மீனவ தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து சந்திப்பு நிறைவடைந்த நிலையில் இலங்கை தரப்பினர் நேற்று சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவை தமது நாட்டின் மீனவ சங்கங்களின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் எதிர்வரும் மேமாத இறுதியில் இலங்கை தரப்பின் பதில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் பதவிக்கு ரணில் பொருத்தமானவர் இல்லை: ஹெல உறுமய
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 03:51.23 AM GMT ]
100 நாள் வேலைத் திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொருத்தமானவர் இல்லை ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
நேற்று வானொலி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்குமாறும், அத்துரலிய ரத்ன தேரர் அல்லது மாதுலுவாவே சோபித்த தேரர் ஆகிய இருவரில் ஒருவரே அப்பதவிக்கு பொருத்தமானவர் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தேர்தல் முறைமையினை இவ்வளவு விரைவாக மாற்றுவது அவசியமா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

19வது அரசியலமைப்பு முரண்பாட்டை தீர்க்க சர்வஜன வாக்கெடுப்பு?
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 04:45.29 AM GMT ]
19வது அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதினால் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தும் நிலை ஏற்படும் என எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்று கொள்ள வேண்டும்.
குறிப்பாக 19 வது திருத்தச் சட்டத்தின்படி அமைச்சரவைக்கு தலைமை தாங்குபவர் யார் என்பது உள்ளிட்ட சில விடயங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு காணப்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்லாத முறையிலேயே இந்த அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் குறித்த முரண்பாடுகளின் காரணமாக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தும் நிலை ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த சட்ட திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்லாத வகையிலேயே கொண்டு வரப்படும் என தெரிவித்த போதிலும், சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்லும் நிலைமையையே தோற்றுவிக்கும் என அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUlt7A.html

Geen opmerkingen:

Een reactie posten