[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 05:14.50 AM GMT ]
இப்படியான கொள்ளைகளை கடந்த அரசாங்கமும் பின்பற்றியிருந்தால் அந்த அரசாங்கத்திற்கு 150ற்கும் மேற்பட்ட ஆசனங்கள் இருந்திருக்கும், அப்பொழுது அந்த அரசாங்கத்தை ஏகாதிபத்திய அரசாங்கமாக பார்க்கப்பட்டது, அவ்வேளையில் இதே முறைமையை மகிந்த அரசாங்கம் பின்பற்றியிருந்தால் என்ன நடந்திருக்கும்?
இறுதியில் 47 பாராளுமன்ற உறுப்பினர்களே எதிர்க்கட்சி தலைவருடன் இருந்தார்கள். அதன் போது 50 பேரை இந்த பக்கம் அனுப்பியிருந்தால் அந்த 50 பேரில் ஒருவரை எதிர்க்கட்சி தலைவராக தெரிவு செய்ய இடமளிப்பீர்களா? அவ்வாறு எதிர்க்கட்சி தலைமை பதவினை தெரிவு செய்ய அனுமதிக்காதீர்கள்
கடந்த அரசாங்கம் ஒரு ஏகாதிபத்திய ஆட்சி என்றால் இது புதினமான ஒரு ஏகாதிப்பத்திய ஆட்சி, ஏன் என்றால் ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதியை மாத்திரமே தெரிவு செய்வார்கள். ஆனால் அந்த அரசாங்கம், ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர் என மூவரையும் தெரிவு செய்துள்ளார்கள். இது என்ன முறைமை? என கேள்வியெழுப்பியுள்ளார்.
அதனால் கௌரவ சபாநாயகர் அவர்களே, தங்களின் அதிகாரங்களை விரும்பிய முறைமையில் நடைமுறைப்படுத்திக் கொள்ளுங்கள் தயவு செய்து பாராளுமன்றத்தில் இதுவரை நடைமுறைபடுத்தப்பட்ட சம்பிரதாயங்களை மாற்றாதீர்கள்.
08 எதிர்க்கட்சிகள் இருந்தால் அந்த 08ற்கும் ஒரு எதிர்க்கட்சி தலைவரே இருந்தாரே ஒழிய அரசாங்கத்திற்கு என்று ஒரு எதிர்க்கட்சி தலைவர் இருக்கவில்லை.
இப்பொழுது இந்த அரசாங்கத்திற்கு என்று ஒரு எதிர்க்கட்சி தலைவரை உருவாக்கி நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டாம். அவ்வாறான எதிர்க்கட்சி தலைவர்கள் எங்களுக்கு தேவையில்லை.
எதிர்க்கட்சிக்கே எதிர்க்கட்சி தலைவர் தேவை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி “அ” ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி “எ” என்று இரண்டு கட்சிகள் உள்ளதா? ஸ்ரீ.சு.க.அ என்றால் அரசாங்கம், ஸ்ரீ.க.சு என்றால் எ எதிர்க்கட்சி அவ்வாறு இரு கட்சிகள் இருப்பின் அதற்கான எழுத்து மூல ஆவணம் தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் ஸ்ரீ.சு.க எ விற்கு எதிர்க்கட்சி தலைமை பதவியை வழங்குங்கள்.
அவ்வாறு இரு கட்சி இல்லாமல் ஒரு கட்சி மாத்திரம் இருக்குமென்றால் அந்த கட்சிக்கு இருப்பது ஒரே தலைவர் எனில் அந்த கட்சி எங்கு உள்ளதென ஆராய்ந்து கண்டுபிடியுங்கள்.
அது இப்பொழுது அரசாங்கத்திலா அல்லது எதிர்த்தரப்பிலா உள்ளது? கண்டு பிடித்து அதனை சரியான இடத்திற்கு அனுப்புங்கள். எதிர்க்கட்சி தலைமை பதிவியை ஈடு வைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்காதீர்கள்.
பாராளுமன்றத்தை நகைப்பிற்கு உட்படுத்தாமல் நியாயமான தீர்வொன்றை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என விமல் வீரவன்ச நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUlt7B.html
அழுத்தங்களுக்கு புதிய அரசாங்கம் அடிபணிய கூடாது: விக்ரமபாகு
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 05:27.10 AM GMT ]
நவசமசமாஜ கட்சியின் தலைவரும் தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்பாக செயற்பட்டு வருபவர்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள கூடாது என அவர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்துவதற்கு நாங்கள் அனுமதிப்பதும் இல்லை, அப்படி நடந்தால் நாங்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வது தொடர்பில் கலந்தாலோசித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும்,
சிறுபான்மையினத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தேசிய அரசாங்கத்தின் மூலம் தீர்வொன்றை பெற்று கொடுத்து அவர்களின் நலனை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை கால தாமதமின்றி விரைவில் நீக்கப்பட வேண்டும் என விக்ரமபாகு கருணாரத்ன கேட்டு கொண்டுள்ளார்.
லலித், குகன் எங்கே? யாழில் போராட்டம்
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 06:14.16 AM GMT ]
இந்த போராட்டம் இன்று முன்னிலை சோஷலிச கட்சியினால் நடத்தப்பட்டுள்ளது.
“தருவதாக கூறிய ஜனநாயகம் எங்கே?”, லலித், குகன் ஆகியோரை விடுதலை செய் உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
லலித், குகன் ஆகியோர் காணாமல்போய் இற்றைக்கு மூன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவர்கள் குறித்த எவ்வித தகவல்களும் இதுவரை வெளிக்கொணரப்படவில்லை.
அவர்கள் மாத்திரமல்லாது, கடத்தப்பட்டவர்கள், காணாமற் போனவர்கள் ஆகியோருக்கு நடந்தது என்ன, என்பது தொடர்பிலும் அரசாங்கம் இதுவரை எந்தவித தகவல்களையும் வெளியிடவில்லை.
வெறுமனே விசாரணைகளை மாத்திரம் நடத்தி வருகின்றதே தவிர, காணாமல் போனவர்களை அவர்களின் உறவினர்கள் இதுவரை கண்ணிலும் காணவில்லை, குறைந்த பட்சம் அவர்களது குரலை கூட கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் துண்டு பிரசுரங்களையும் பொது மக்களிடம் வழங்கினர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUlt7E.html
Geen opmerkingen:
Een reactie posten