தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 maart 2015

தேசிய அரசாங்கம் ஓர் நேரக் குண்டாகும்: மஹிந்த ராஜபக்ச

தேசிய அரசாங்கம் என்பது ஓர் நேரக் குண்டாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாரஹன்பிட்டியில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் குறிப்பிட்டுள்ளார். 
தேசிய அரசாங்கம் என்கிறார்கள், கூட்டணி அரசாங்கம் என்கிறார்கள். எனினும், இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பெரும் குழப்பமாக உள்ளது.
மத்திய வங்கியில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது.
தேசிய அரசாங்கம் என்ற நேரக் குண்டை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கையில் எடுத்தக்கொண்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வரலாற்றில் நாம் பாரிய தவறுகளை இழைத்துள்ளோம். அதனை இல்லை என்று சொல்லவில்லை. பௌத்த பிக்குகள் கூறியதனைப் போன்று நாம் குற்றவாளிகளை தண்டிக்கவில்லை.
போரின் பின்னர் நான் வித்தியாசமான ஓர் நிலைப்பாட்டையே கொண்டிருந்தேன். அபிவிருத்திப் பணிகள் பற்றிக் கவனம் செலுத்திய நான் வேறு விடயங்கள் பற்றிய சிந்திக்கவில்லை.
இப்போதுதான் தெரிகிறது நண்பர்கள் யார், விரோதிகள் யார் என்பது. இன்னும் கொஞ்சம் காலம் காத்திருந்தால் ஏனைய விரோதிகளையும் கண்டுகொள்ள முடியும்.
சுதந்திரக் கட்சி என்பது டார்லி வீதியில் அமைந்துள்ள அலுவலகமோ அல்லது கை சின்னமோ கிடையாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு பண்டாரநாயக்க குடும்பத்தினர் எத்தனை தடவை வெளியேறியிருக்கின்றார்கள்.
ஒட்டுமொத்த குடும்பத்திற்கு எதிராகவும் தற்போது பொய்யான குற்றச்சாட்டு சுமத்துகின்றனர். எமது குடும்பத்தில் ஒருவரையேனும் கைது செய்ய முயற்சிக்கப்படுகின்றது.
நாமல் ராஜபக்சவின் பெயரை குறிப்பிடுமாறு சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கி வைத்து மிரட்டியுள்ளார்.
இதுவே இன்று நடைபெறும் நல்லாட்சியாகும். அரச ஊடகங்கள் மிக மோசமாக அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படத் தொடங்கியுள்ளன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUlt6F.html

Geen opmerkingen:

Een reactie posten