[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 02:35.30 AM GMT ]
நாட்டுக்கான கடமைகளை ஆற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையை பார்த்தால், சில கடமைகளை செய்ய வேண்டிய சூழ்நிலைமை உருவாகியுள்ளது.
குறுகிய காலத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நிலைமயை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.
என்னையும் எனது குடும்பத்தாரையும் என்னைச் சுற்றி இருப்பவர்களையும் இந்த அரசாங்கம் பழிவாங்கி வருகின்றது.
இந்த நடவடிக்கையினால் அரச அதிகாரிகள் ஊழியர்கள் பல மணித்தியாலங்கள் இரகசிய பொலிஸ் நிலையங்களில் அலைந்து திரிய நேரிட்டுள்ளது.
1931ம் ஆண்டு முதல் ராஜபக்சக்கள் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இவ்வாறான ஓர் நெருக்கடியான நிலைமை எமக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை.
தற்போதைய அரசாங்கம் சேறு பூசல்களிலேயே அதிகளவு கவனம் செலுத்தி வருகின்றது.
எனது பாதுகாப்பு பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளது, இதனால் பாரியளவு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பண்டாரகம விஹாரையில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் நேற்று திங்கட்கிழமை பங்கேற்று அங்கிருந்த மக்களிடம் இந்தக் கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUkoyE.html
உடல் நலக்குறைவினால் நாடு திரும்ப தாமதமாகும்!- பசில் ராஜபக்ச
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 02:45.25 AM GMT ]
நிதிக் குற்றவியல் பிரிவிற்கு அவர் இதனைத் அறிவித்துள்ளார். எனினும், இன்னும் சில நாட்களில் நாடு திரும்ப உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
திவிநெகும திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் பசில் ராஜபக்ச உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.
விசாரணைகளை நடாத்த பசில் ராஜபக்சவிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்து கொள்ள வேண்டியுள்ளதாக நிதிக் குற்றவியல் பிரிவு நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தது.
இந்தக் கோரிக்கைக்கு கடுவல நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.
இது தொடர்பிலான அழைப்பாணை உத்தரவினை மெதமுலனவிற்கு எடுத்துச் சென்று ஒட்ட முற்பட்ட போது பொலிஸாருக்கு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நேற்றைய தினம் பசில் ராஜபக்ச விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தினரின் நிறுவனங்களை புலம்பெயர் தமிழர்கள் கைப்பற்றிக் கொள்வார்களாம்!
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 01:25.15 AM GMT ]
வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வந்த பல்வேறு நிறுவனங்கள் இவ்வாறு புலம்பெயர் தமிழர்களின் கைகளுக்குச் செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பகுதியில் விடுமுறை விடுதிகள், ஹோட்டல்கள், சுற்றுலா விடுதிகள், உணவு விடுதிகள் என்ப இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிறுவனங்களை படையினரிடமிருந்து வாங்கி கேள்விப்பத்திரங்களை கோரி வேறும் நபர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முப்படையினர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற அரசாங்கத்தின் புதிய கொள்கைகளின் அடிப்படையில் இவ்வாறு விலைமனுக் கோரப்பட உள்ளது.
இவ்வாறு விலைமனுக் கோரல்களின் போது புலி ஆதரவு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இந்த நிறுவனங்களை கைப்பற்றிக் கொள்ளக் கூடிய அபாயம் காணப்படுவதாக சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கு கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினரை அங்கிருந்து அகற்றுவதும், அவர்களினால் நடத்தப்பட்டு வரும் வர்த்தக நிறுவனங்களை கைப்பற்றுவதுமே புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் நோக்கமாக அமைந்துள்ளது.
வடக்கில் நிலை கொண்டுள்ள படையினர் விலகிச் செல்ல வேண்டுமென வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUkoyA.html
Geen opmerkingen:
Een reactie posten