[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 10:12.07 AM GMT ]
இதற்கு கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன் தர்மசிறீயிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தர்மசிறீக்கு ஆதரவாக இருந்து காணி உரிமையாளரிடம் காணியை ஒப்படைக்காமல் இழுத்தடித்து வருவதுடன் தொடர்ந்தும் கணவனை இழந்த விசாலம் என்பவரின் குடும்பத்தை தர்மசிறீ கொலை அச்சுறுத்தல் விடுப்பதற்கும் ஒத்துழைத்து வருதாக தெரியவருகின்றது.
கரைச்சி பிரதேச செயலருக்கு இந்த காணியின் விடயம் தொடர்பாக அனுப்பப்படும் கடிதங்களுக்கும் பதில் அளிக்கவில்லை என்பதுடன் எந்த நியாயமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரியவருகின்றது.
தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக வரமுடியாதா? கல்வி இராஐாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன்
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 10:32.49 AM GMT ]
திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரியின் நிர்வாக கட்டிடத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இன்று காலை திறந்து வைத்தார்.
அமைச்சருடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், உள்நாட்டு போக்குவரத்து பிரதி அமைச்சர் எம். எஸ்.தவுபிக், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி உட்பட கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அங்கு பேசிய கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்,
இன்று இலங்கையில் அரசியலில் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த மாற்றங்கள் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நடைபெறுகின்றது. எனவே இந்த நிலையில் ஏன் சிறுபான்மையை சார்ந்த ஒருவர் எதிர்கட்சி தலைவராக வர முடியாது? எமது பாராளுமன்றத்தில் தமிழர்கள் அதாவது மறைந்த தலைவர் அமிர்தலிங்கம் எதிர்கட்சி தலைவராக இருந்த வரலாறும் சரித்திரமும் எமக்கு உண்டு.
எனவே இன்று இந்த நிலையில் நாம் சிறுபான்மை இனங்கள் ஒன்று சேர்ந்தால் நிச்சயமாக எதிர்கட்சி தலைவராக ஒருவர் வரமுடியும் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் மலையக மக்கள் முன்னணி அதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராகவுள்ளது. இதனை நாம் அரசியலாக பார்க்காமல் சமூக ரீதியில் சிந்தித்து எமது மத்தியில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே நான் இதனை கூறுகின்றேன்.
ஆனால் இதனை வைத்துக் கொண்டு ஒரு சிலர் அரசியல் செய்ய முற்படுகின்றார்கள். அதற்கு சிறுபான்மை மக்களாகிய நாம் இடமளிக்க கூடாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRYSUlt2E.html
இலங்கையில் அனைவரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள்: கேலி செய்கிறார் மகிந்த
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 11:22.19 AM GMT ]
அமைச்சரவையிலுள்ள அனைவரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேலி செய்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் இன்று பிக்குகள் மற்றும் கலைஞர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தேசிய அரசாங்கத்தின் உருவாக்கம், புதிய அரசியலமைப்பு, தேர்தல் முறைமை மாற்றம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியே முன்னாள் ஜனாதிபதி இம்மாதிரியான கேலி பேச்சுக்களை ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா என ஊடகவியலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு தற்போது தான் ஓய்வெடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களைத் துன்புறுத்தினோமா? நிரூபித்துக் காட்டுமாறு ஞானசார தேரர் ஜனாதிபதிக்கு சவால்
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 11:43.59 AM GMT ]
கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த அமைப்பு முஸ்லிம் பள்ளிவாயல்களை தாக்கியது, முஸ்லிம் மக்களை துன்புறுத்தியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது குறிப்பிட்டிருந்தார்.
மைத்திரிபால சிறிசேன தான் ஒரு ஜனாதிபதி என்பதை அடிக்கடி மறந்து விடுகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளதுடன், அவர் சிலருடன் இணைந்துகொண்டு எங்கள் அமைப்பு மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முப்படைகளும், குற்றப்புலனாய்வு பிரிவும், பொலிஸாரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையில் உள்ளது.
தயவு செய்து அவரிடமுள்ள நிறைவேற்று அதிகாரத்தை வைத்து பொது பல சேனா அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை முஸ்லிம் மக்களுக்கு எதிராக கை தூக்கியிருக்கின்றது.
முஸ்லிம் வியாபார நிலையத்திற்கு, முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு, முஸ்லிம் மக்களுக்கு குறைந்த பட்சம் ஒரு கல்லிலாவது தாக்குதல் மேற்கொண்டது என நிரூபித்து காட்டுமாறு நாங்கள் ஜனாதிபதிக்கு ஒரு சவால் விடுகிறோம்.
தயவு செய்து சாட்சியமில்லாமல் செல்லும் இடமெல்லாம் எங்கள் அமைப்புக்கெதிராக குறை கூற வேண்டாம் என கோரியுள்ளதுடன்,
இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டோம் என சாட்சிகளுடன் ஒப்புவித்தீர்கள் என்றால் அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்த அமைப்பினை கலைத்துவிடுகிறோம்.
அவ்வாறு சாட்சிகளுடன் நிரூபிக்கவில்லை என்றால் ஊர் ஊராக சென்று வீணே கதை பேசும் சிறிசேன விகாரைக்கு வந்து துறவரம் பூணவேண்டும். ஏன் என்றால் தற்பொழுது இவ்வாறெல்லாம் பேசுவது பொலன்னறுவை சிறிசேன அல்ல, நாட்டின் ஜனாதிபதி என்பதை நினைவில் கொள்ளட்டும்.
நாட்டின் ஜனாதிபதி வீணாய் போனவர்களுடன் இணைந்து கொண்டு அந்த திருட்டு கூட்டத்தை மேலும் போஷிப்பதற்கு சிறிசேனவிற்குள்ள அதிகாரம் என்ன?
அவர் நிராகரிப்பதற்கு பொதுபல சேனா என்ன அவரால் உருவாக்கப்பட்டதா? அல்லது எல்லாம் தெரிந்து கொண்டா அவர் பேசுகின்றார் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.
சிங்கள பௌத்தர்களை குறித்து யாரும் பேச மாட்டார்கள். பாராளுமன்றத்திற்கு சென்ற ஜாதிக ஹெல உறுமய கூட கதைப்பதில்லை.
ஊழல் மோசடிகள் குறித்து விசாரிப்பதற்காக ஹெல உறுமயவுக்கு வாக்களிக்கவில்லை. அத்துரலிய ரத்தின தேரர் பிவித்துரு ஹெடக்கை உருவாக்குவதற்காக பாராளுமன்றத்திற்கு அனுப்பபடவில்லை.
நேர்மையான அரசாங்கமொன்றை அமைப்பதற்காகவே அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம். அவர்கள் தங்களுக்கு வழங்கிய பணிகளை சிறப்புற செய்யாமல் எங்கோ போகும் ஓணானை தூக்கி பையில் போட்டு கொள்ள அனுப்பவில்லையே என பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாட்டிலுள்ள தனிப்பட்ட மதமொன்று அனுபவிக்க வேண்டியது இவ்வாறானதொரு தலையெழுத்தை தான்.
இந்த முட்டாள் கழுதைகளுக்கு தனது மதம் குறித்து மாத்திரமே பேச முடியாது. எல்லோரும் சிறுபான்மையினர் குறித்து மாத்திரமே பேசுகின்றனர். எல்லோரின் மனங்களும் சிறுபான்மையினரின் அவல நிலை குறித்தே இரங்குகின்றன.
பெரும்பான்மையினருக்கு இடி விழுந்தால் கூட யாரும் அதை பற்றி கணக்கெடுப்பதில்லை. அசமந்த போக்கில் விட்டு விடுகின்றனர். நீங்கள் பொலன்னறுவை சிறிசேன அல்ல, சுகாதார அமைச்சர் சிறிசேனவும் இல்லை. தாங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதி என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள் என இறுதியும், அறுதியுமாக கேட்டு கொள்கின்றேன் என பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் கேட்டு கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRYSUlt2I.html
மஹிந்தவின் புகைப்படத்துடன் யாழில் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 12:00.56 PM GMT ]
யாழ் மாவட்டத்தில் இன்று அரச காணிகளில் குடியிருந்த 191 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வாறு வழங்கி வைக்கப்பட்ட காணி உறுதிப் பத்திரங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புகைப்படம் மற்றும் கையெழுத்து பொறிக்கப்பட்டிருந்ததாக பத்திரங்களைப் பெற்ற பயனாளிகள் தெரிவித்தனர்.
இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச சபைகளில் உள்ள 191 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அதற்கமைய கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 50 பேருக்கும், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 40 பேருக்கும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 10 பேருக்கும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 91 பேருக்குமே இன்று காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
அந்த காணி உறுதிப்பத்திரங்களில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு ஜனாதிபதி என்பதன் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கையெழுத்து இட்டுள்ளார்.
கையெழுத்திட்ட திகதி 2015 ஜனவரி 6ஆம் திகதி எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், காணி பதிவாளரின் கையெழுத்தில் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி இடப்பட்டுள்ளது.
காணி உறுதியின் பக்கத்தில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் காணி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் போது, அவை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதாக யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏனையோருக்கு எதிர்காலங்களில் வழ்ங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRYSUlt3B.html
Geen opmerkingen:
Een reactie posten