[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 02:08.26 AM GMT ]
நேற்று கூடிய அமைச்சரவை இந்த முடிவை எடுத்ததாக இலங்கையின் அரசாங்க ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த யோசனையின்படி இலங்கையின் ஜனாதிபதியானவர், நாட்டின் தலைவராகவும் பாதுகாப்பு படைகளின் தலைவராகவும் இருப்பார்.
அரசாங்கத்தின் தலைவர் தொடர்பில் எவ்வித யோசனைகளும் கூறப்படவில்லை. எனினும் பிரதம மந்திரியே அரசாங்கத்தின் தலைவராக இருப்பார் என்று அமைச்சரவை அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சுயாதீன ஆணைக்குழுக்களை கொண்ட 17வது திருத்தத்தையும் அமைச்சரவை நேற்று அங்கீகரித்தது.
இதன்படி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, பொதுச்சேவைகள் ஆணைக்குழு மற்றும் அரசியல் அமைப்பு சபை என்பன அமைக்கப்படவுள்ளன.
அத்துடன் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு, பொதுச்சேவைகள் ஆணைக்குழு, அரசியலமைப்பு சபை என்பனவற்றின்மீது உள்ள நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்படவுள்ளன.
இதற்கிடையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியின் முதல் தவணையுடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை முடிவுக்கு வரும் என்றும் அதற்கு பின் வரும் ஜனாதிபதிகள் இந்தியா மற்றும் மேற்கத்தைய நாடுகளைப் போன்ற ஜனாதிபதிகளாக இருப்பர் என்பதையும் அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
19ஆவது திருத்தசட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்பிப்பு
19ஆவது திருத்தசட்ட மூலம், விசேட சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கிகாரம் கிடைத்திருந்தது.
அமைச்சரவை அனுமதியளித்ததன் பின்னர் 19ஆம் திகதி விசேட வர்த்தமானியும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
19ஆம் திருத்தசட்ட மூலத்திற்கு ஜாதிக்க ஹெல உறுமயவும், மக்கள் விடுதலை முன்னணியும் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRYSUltzA.html
எஸ்.பியின் அமைச்சு பதவியை சித்தரிக்கும் ஹிருனிக்கா: எதிர்க்கும் சந்திரிக்கா
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 05:39.17 AM GMT ]
இதன்போது கிராமிய அபிவிருத்தி அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்கவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.
எப்படியிருப்பினும் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டமையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க எதிர்த்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை நிர்வாணமாக்கி வீதியில் ஓட விடுவதாக எஸ்.பி.திஸாநாயக்க பிரச்சார மேடைகளில் சூளுரைத்திருந்தார்.
எஸ்.பி.திஸாநாயக்கவின் சூளுரையை கண்டித்து மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர விளம்பரம் ஒன்றிலும் தோன்றியிருந்தார்.
இவ்வாறான ஓர் நிலையில் எஸ்.பி.திஸாநாயக்கவிற்கு அமைச்சர் பதவியை மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.
சர்வதேச விசாரணையைத் தடுக்கவே தேசிய அரசு அமைக்கப்பட்டுள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015, 08:06.17 AM GMT ] [ வலம்புரி ]
தேசிய அரசை அமைத்ததன் மூலம் மகிந்த ராஜபக்வின் நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்த முன்னாள் அமைச்சர்களுக்கு அமைச்சுப் பதவி கிடைத்துள்ளது.
அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கிறார்.
ஆக, மைத்திரி ஜனாதிபதி; ரணில் பிரதமர்; ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்ந்தவர்கள் அமைச்சர்கள் என்ற வகையில் எதிர்க் கட்சி இல்லை என்பதாகப் பாராளுமன்ற நிலைமை மாற்றப்பட்டுள்ளது.
இத்தகையதொரு அமைப்பை ஏற்படுத்திய பெருமை மைத்திரியையும், ரணிலையுமே சாரும். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வுக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கமாட்டோம் என்று ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் கூட்டாகச் சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் அப்படி எதுவும் சொல்லாமல், மகிந்தவின் ஆதரவாளர்களுக்கு- தேர்தலில் மைத்திரியை தோற்கடிக்க கடும் பிரயத்தனம் செய்தவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது தமிழ் மக்கள் வாக்களிக்காவிட்டால் மைத்திரி ஜனாதிபதியுமில்லை, ரணில் பிரதமரும் இல்லை என்ற சூழ்நிலையே இருந்திருக்கும். எனினும் தமிழ் மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்கிவிட, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்வுக்குப் பக்கபலமாக இருந்த முன்னாள் அமைச்சர்களுக்கு மந்திரிப் பதவியைக் கொடுத்து தேசிய அரசை அமைத்துள்ளார்.
இவ்வாறு தேசிய அரசை அமைப்பதன் ஊடாக இலங்கை மீதான சர்வதேச விசாரணையைத் தடுப்பதே நோக்கமாகும்.
சர்வதேச விசாரணை இடம்பெற்றால், அது இலங்கைக்கு அவமானம் என்று கூறியவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. ஆக, சர்வதேச விசாரணையைத் தடுத்து நிறுத்த சிங்கள இனம் ஒன்றுசேர்ந்து-ஓரணியில் திரண்டு தீட்டிய மிகப்பெரும் திட்டமே தேசிய அரசாகும்.
சர்வதேச விசாரணை இடம்பெற்றால் அது மகிந்தவுக்கும் அவரது சகாக்களுக்கும் ஆபத்து என்பதுடன் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணு மாறும் சர்வதேசம் அழுத்தம் கொடுக்கும்.
அந்நிலையில் அந்த அழுத்தத்தை நிறைவேற்ற வேண்டி வரும் என்பதால், சர்வதேச விசாரணையைத் தடுப்பதே ஒரேவழி என சிங்கள அரசியல் தலைமைகள் நினைத்து ஓரணியில் திரண்டுள்ளன.
அட, தேசிய அரசை அமைப்பதில் மகிந்த ராஜபக் வுக்கும் காத்திரமான பங்கு இல்லாமலா போகும்?
இனி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைமை கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகின்றது.
எங்களை எதிர்க்க அவர்கள் ஒன்று சேர்ந்தால் நாங்கள் தானே அவர்கள் எதிர்க்கும் கட்சி. இம்... என்ன நடக்கப் போகுது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
http://www.tamilwin.com/show-RUmtyDRYSUlt1A.html
Geen opmerkingen:
Een reactie posten