தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 maart 2015

கூட்டமைப்பு பதிவு செய்யப்படவில்லை! சுமந்திரன் பொய் சொல்கின்றார்! சம்பந்தனின் நிலைப்பாடு என்ன? சுரேஷ் பிறேமச்சந்திரன்!



தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் இரா.சம்மந்தன் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றார்? என்பதை வெளிப்படுத்தினாலேயே கூட்டமைப்பின் பதிவு தொடர்பான சர்ச்சைகள் ஒரு அளவுக்கு நிறைவுக்குவரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் காலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நீர்வேலி அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நேற்றைய தினம் திருகோணமலையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்வதில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும்  என தெரிவித்திருக்கின்றார்.
கூட்டமைப்பு பதிவு பற்றிய பேச்சு நீண்டகாலமாக இருந்து வருகின்றது. ஆனாலும் இப்பதிவினை செய்ய முடியாது என்று தமிழரசுக் கட்சி பலகாலமாக சொல்லி வந்திருக்கின்றது.
இந்த நிலையில் தற்போது தமிழரசுக் கட்சியின் ஒரு பகுதியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைபை கட்சியாக பதிய வேண்டும் என்பதை இப்போது வலியுறுத்தி வருகின்றார்கள்.
குறிப்பாக தமிழரசு கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் சீ.க.சிற்றம்பலம் போன்றவர்களை குறிப்பிடலாம். இந்நிலையில் அண்மையில் கனடா சென்றிந்த தமிழரசு கட்சியின் பிரதி செயலாளர் நடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டுவிட்டது என கூறியிருக்கின்றார்.
உண்மையில் பதிவு செய்யப்படவில்லை. நாங்கள் 3 கட்சிகள் இணைந்து தேர்தல் ஆணையகத்திற்கு ஒரு எழுத்துமூல அறிவித்தலை கொடுத்திருக்கின்றோம். அதாவது நாங்கள் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக செயற்படப் போகின்றோம் என்பது மட்டுமே அந்த எழுத்துமூல கடிதத்தில் இருக்கின்ற விடயமாகும்.
இந்நிலையிலேயே நேற்றைய தினம் சம்மந்தர் கூறியிருக்கின்றார் கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட வேண்டும் என்று.
எனவே ஆளுக்கொருவர் மாறி மாறி பொய் கூறுவதை விடவேண்டும். நாம் இந்த விடயத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனின் நிலைப்பாடு என்ன என்பதையே கேட்கவிரும்புகிறோம் என்றார்.
இதேவேளை வடமாகாணத்தில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்ட நிகழ்வுகளில் முதலமைச்சர் அழைக்கப்படாத நிலையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டமை தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பியபோது,
இவ்வாறான விமர்சனங்கள் எதற்காக வருகின்றன என்றால் எமக்குள் முதலில் ஒரு தொடர்பாடல் இல்லை.
முதலமைச்சர் தொடர்பாக பிரதமர் இவ்வாறான ஒரு கருத்து நிலைப்பாட்டை தெரிவித்திருக்கின்றார். எனவே அவருடைய நிகழ்வில் நாம் கலந்து கொள்ளப் போகிறோமா? இல்லையா? என்பது தொடர்பில் நாம் ஒரு கட்சி சார்ந்தவர்கள் என்றவகையில் ஒரு கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. எம்மோடு யாரும் இது தொடர்பாக பேசவும் இல்லை.
எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தங்கள் விரும்பம் போன்றே பிரதமரின் நிகழ்வுகளில் கலந்துகொண்டார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாகாணச பை உறுப்பினர்களும் கூட கலந்து கொண்டனர்.  எனவே அவர்களுக்கும் இவ்வாறான கலந்து ரையாடல் இடம்பெற்றிருக்கவில்லை. விடயம் தொடர்பாக பேசப்படவில்லை.
எனவே எதிர்காலத்திலாவது இவ்வாறான கலந்துரையாடல்களை நடத்தி தீர்மானங்களை நடத்துவது நிச்சயமாக அவசியமான ஒன்றாகும் என தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டு விட்டது – சுமந்திரன் விளக்கம்
http://www.tamilwin.com/show-RUmtyDQUSUlx6I.html

Geen opmerkingen:

Een reactie posten