தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 31 maart 2015

ஓராண்டில் 6792 பேர் வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் கோரியுள்ளனர்!

பெரும்பான்மை பலமில்லாத சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்க முடியாது!- தினேஷ்
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 12:57.29 AM GMT ]
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்கான பெரும்பான்மை பலம் எங்களிடமே இருக்கின்றது. எனவே பெரும்பான்மை பலமில்லாத ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் அறிவிக்க முடியாது என்று மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் குறித்து குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவராக உள்ள நிமால் சிறிபால டி. சில்வா அந்த பதவியை வகிக்க முடியாது என்று கூறப்பட்டு வருகின்றது.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் ஐக்கிய முன்னணியி்ன் தலைவர் தினேஷ் குணவர்த்தனவை நியமிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி தற்போது மிகப்பெரிய விவகாரமாக எழுந்துள்ளது.
இந்நிலையில் என்னை எதிர்க்கட்சித் தலைவராக்கும்படி சிலர் கோரிக்கை விடுக்கின்றனர். என்னை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் அறிவித்தால் அதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அந்த வகிபாகத்தை வகிக்கவும் நான் தயாராக இருக்கின்றேன்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்க முடியாது. காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய நிறைவேற்று சபையில் அங்கம் வகிக்கின்றது. எனவே கூட்டமைப்பின் தலைவர் எதிர்க்கட்சித் தலைரவாக வர முடியாது.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் பங்கெடுத்திருந்தாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏனைய பங்காளிக் கட்சிகள் எதுவும் இணைந்து கொள்ளவில்லை.
எனவே எமக்கே பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்கான பெரும்பான்மை பலம் உள்ளது.
எனவே எதிர்வரும் ஏழாம் திகதி சபாநாயகர் வெளியிடும் அறிவிப்புக்காக நாங்கள் காத்திருக்கின்றோம். பெரும்பான்மை பலமில்லாத ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் அறிவிக்க முடியாது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUlx7I.html

இராணுவத்தினரின் நிறுவனங்களை புலம்பெயர் தமிழர்கள் கைப்பற்றிக் கொள்வார்களாம்!
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 01:25.15 AM GMT ]
இராணுவத்தினரின் நிறுவனங்களை புலம்பெயர் தமிழர்கள் கைப்பற்றிக் கொள்ளக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வந்த பல்வேறு நிறுவனங்கள் இவ்வாறு புலம்பெயர் தமிழர்களின் கைகளுக்குச் செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பகுதியில் விடுமுறை விடுதிகள், ஹோட்டல்கள், சுற்றுலா விடுதிகள், உணவு விடுதிகள் என்ப இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிறுவனங்களை படையினரிடமிருந்து வாங்கி கேள்விப்பத்திரங்களை கோரி வேறும் நபர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முப்படையினர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற அரசாங்கத்தின் புதிய கொள்கைகளின் அடிப்படையில் இவ்வாறு விலைமனுக் கோரப்பட உள்ளது.
இவ்வாறு விலைமனுக் கோரல்களின் போது புலி ஆதரவு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இந்த நிறுவனங்களை கைப்பற்றிக் கொள்ளக் கூடிய அபாயம் காணப்படுவதாக சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கு கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினரை அங்கிருந்து அகற்றுவதும், அவர்களினால் நடத்தப்பட்டு வரும் வர்த்தக நிறுவனங்களை கைப்பற்றுவதுமே புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் நோக்கமாக அமைந்துள்ளது.
வடக்கில் நிலை கொண்டுள்ள படையினர் விலகிச் செல்ல வேண்டுமென வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUkoyA.html

ஓராண்டில் 6792 பேர் வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் கோரியுள்ளனர்!
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 01:31.21 AM GMT ]
ஓராண்டு காலப்பகுதியில் 6792 பேர் வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் கோரியுள்ளனர். ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
2014ம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையில் வெளிநாடுகளில் பல்வேறு காரணங்களுக்காக அரசியல் புகலிடம் கோரியவர்களின் மொத்த எண்ணிக்கை 6792 எனத் தெரிவிக்கப்படுகிறது.
2013ம் ஆண்டை விடவும் இந்த எண்ணிக்கை 12 வீதமாக உயர்ந்துள்ளது.
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நேபாளத்திற்கு சென்று அங்கு காத்மண்டுவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தில் புகலிடம் கோரியுள்ளனர்.
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சாட்சியமளிக்க முன்வந்த 60 சிங்கள மற்றும் தமிழர்களும் இதில் உள்ளடங்குகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUkoyB.html

Geen opmerkingen:

Een reactie posten