[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 02:10.35 AM GMT ]
ஐ.நாவின் உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடுகள் மற்றும், மீள உருவாகாமல் உத்தரவாதப்படுத்தலுக்கான சிறப்பு அறிக்கையாளரான பப்லோ டி கிரெய்ப் என்ற நிபுணரே இன்று இலங்கைக்கு வரவுள்ளார்.
ஆறு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இவர், அரச தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.
கடந்த ஜனவரி மாதம், புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், இலங்கைக்கு வருகை தரும் ஐ.நாவின் முதலாவது உயர்மட்டப் பிரதிநிதி இவரேயாவார்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இவர் கொழும்பு வரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா நிபுணரின் இந்தப் பயணம் ஒரு ஆய்வு மற்றும் கலந்தாலோசனைக்கானது என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உண்மை, நல்லிணக்க செயல்முறைகள் குறித்த அனுபவங்களை அறிந்து கொள்வதற்கு, ஏற்கனவே தென்னாபிரிக்க அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அந்தப் படிமுறையை நோக்கிய மற்றொரு அடியாகவே இந்தப் பயணம் அமையும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு அரசாங்கங்கள், அரசசார்பற்ற அமைப்புகள், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புகள், உண்மை ஆணைக்குழுக்கள், பால்நிலை விவகாரங்கள், நீதி, பாதுகாப்பு, அபிவிருத்திக்கிடையிலான தொடர்புகள் குறித்த ஆலாசனைகளை வழங்குவதற்காக, பப்லோ டி கிரெய்ப், 2012ம் ஆண்டு ஐ.நா சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்டார்.
மகிந்த மீண்டும் வந்தால் நாடு நாசமாகி விடும்!– தலதா அத்துகோரள
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 03:33.59 AM GMT ]
நேற்று காவத்தையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பொது தேர்தலில் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு எதிர்கட்சியினர் முயற்சிக்கிறார்கள். அவை அனைத்துமே பகல் கனவு தான்.
எங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்திற்கு கொண்டு வந்ததது மோசடிக்காரர்களை ஒழிப்பதற்காகவே.
கடந்த அரசாங்கம் மீண்டும் வந்தால் நாடு நாசமாகிவிடும் அதற்கு ஒருபொழுதும் மக்கள் இடமளிக்க மாட்டார்கள்.
விமல் வீரவன்சவின் பகல் கனவை கலைத்து மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றையே அமைப்போம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 04:01.01 AM GMT ]
இந்த சந்திப்பு எதிர்வரும் 2ம் திகதி இடம்பெறும் என கடற்றொழில் அமைச்சின் செயலாளர் நிமால் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இதன்படி வடமாகாண மீனவ சங்கங்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண மீன்பிடி அமைச்சர் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
சென்னையில் கடந்த 24ம் திகதி இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்திய மீனவர்கள் ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்த திட்டத்தில் 3 வருடங்களுக்கு இலங்கை கரையிலிருந்து 5 கடல் மைல் தூரத்தில் 83 நாட்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரப்பட்டது.
இது தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசம் தருமாறு இலங்கை அரசாங்கம் கேட்டு கொண்ட நிலையிலேயே ஜனாதிபதியுடன் எதிர்வரும் 2ம் திகதி பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தை பக்கச்சார்பின்றி பிரிக்கவும்!– அனுரகுமார திஸாநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 04:26.20 AM GMT ]
இலாபம் சரிசமமாக பிரிக்கப்பட்டு அனுப்பாவிட்டால் நீதியும் சாதாரணமாக அமையாதென அம்முன்னணி சுட்டிக்காட்டுகின்றது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று பாருங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்களை பார்வையிட செல்பவர்கள் யாரும் பெரிய வாகனங்களில் வருபவர்கள் அல்ல எல்லோரும் ஏழைகளே அப்படி என்றால் வசதியானவர்கள் தவறு செய்வதில்லையா, ஏழைகள் மாத்திரமா தவறு செய்கின்றார்கள்? ஆனால் தண்டனை கிடைப்பது ஏழைகளுக்கே.
சட்டத்திருத்தங்கள் நியாயமான முறையில் இடம்பெறுகின்றதா பணம் வைத்திருப்பவர்களை கைது செய்யாமல் இருப்பது உத்தமமான சட்டமா?
இன்று நாட்டில் உள்ள சட்டமுறைமையில் சாதாரணம் இல்லை, பணக்காரர்கள் நல்ல சட்டத்தரணிகளை தங்களுக்காய் வாதாடுவதற்கு அழைப்பார்கள், ஏழைகள் சாதாரணமான சட்டத்தரணிகளையே நாடுவார்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மே மாதம் பாராளுமன்றம் கலைப்பு: ஜுனில் தேர்தல் நடத்த உத்தேசம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 05:09.30 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோருக்கிடையில் கடந்த 17ம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி நடத்தி ஜுன் மாதம் 27ம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்தின் முடிவில் ஏப்ரல் 23ம் திகதி பாராளுமன்றத்தை கலைக்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
எனினும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைமையில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம் உள்ளிட்டவற்றை கருத்திற்கொண்டு மே மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்தலாம் என ஜனாதிபதி யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில் மே மாதம் 3ம் மற்றும் 4ம் திகதிகளில் வெசாக் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதினால் வெசாக் பண்டிகையின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கலாம் என பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் மே மாதம் 5ம் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் ஜுன் மாதம் 27ம் திகதி பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் நாட்டில் தற்போது காணப்பட்டு வரும் அரசியல் சூழ்நிலை மாற்றங்களினால் பாராளுமன்றம் கலைப்பு மற்றும் தேர்தல்களில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyDRdSUlw5A.html
Geen opmerkingen:
Een reactie posten