முன் நாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை நெருங்கிய சிலர் , வைத்திருந்த குண்டு வெடித்ததால் அவர் கொல்லப்பட்டது யாவரும் அறிந்ததே. அன்று ராஜீவ் காந்திக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பில் பாரிய ஒழுங்கீனம் இருந்தது என்று கூறப்பட்டது. அன்று முதல் பல வருடங்களாக யார் பிரதமராக வந்தாலும் அவருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் மோடி யாழ் சென்றவேளை கீரிமலைப் பகுதிக்குச் சென்றார். அங்கே ஒரு தமிழர் மிகவும் சாதூரியமாக, எந்த ஒரு தடையும் இன்றி மோடியை சந்தித்து கைகுலுக்கினார். அவரிடம் எதுவும் இருக்கவில்லை. ஆனால் இந்திய பாதுகாப்பு பிரிவினர் தான் சற்று ஆடிப்போய் விட்டார்கள்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சனிக்கிழமை கீரிமலைக்கு வீடு கையளிப்புக்காக வந்திருந்தார். இதன் போது அவர் நிகழ்வு முடித்து வெளியேறுகையில், ராஜரட்டைப் பல்கலைக்கழக மூன்றாம் வருட மாணவனான திரவியச்செல்வம் சிறீறஜீவன் (வயது26) பிரதமர் மோடிக்கு கைகொடுத்தார். இவர் எவ்வாறு 3 அடிக்கு பாதுகாப்பு வலயத்தினுள் நுளைந்து , பின்னர் எவ்வித சோதனையும் இன்றி மோடிக்கு அருகே சென்றார் என்று தெரியவில்லை.
இந்தியப்பிரதமரின் பயண ஏற்பாட்டில் நிகழ்ந்த பாரதூரமான பாதுகாப்பு ஒழுங்கீனமாக இந்தச் சம்பவத்தை இந்திய அரசு நோக்குவதாகவும், அதனாலேயே இது தொடர்பில் முழுமையான விசாரணை மேற் கொள்ளப்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் அலுவலக செயலகம் உத்தரவிட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியப் பிரதமருடன் கைலாகுவின் பின்னர், இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த இளைஞனைக் கைது செய்து, இளவாலைப் பொலிஸாரிடம் கையளித்திருந்தனர். குறித்த இளைஞன் மீது மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு இடம் பெற்றுவருகின்றது.
http://www.athirvu.com/newsdetail/2658.html
Geen opmerkingen:
Een reactie posten