தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 maart 2015

மனித உரிமை குற்றச்சாட்டுகள்: உள்ளக விசாரணை முன்னேற்றத்தை ஐநா கவுன்சிலில் வைப்பது அவசியம்!

சுதந்திரக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி பதவிக்கு வர ஐ.தே.கட்சி உதவியது!– பிரதமர் ரணில்
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 01:10.47 PM GMT ]
பாழ்பட்டுப் போன இன்றைய அரசியல் முறைமை மற்றும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டுக்கு புதிய அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் கலாசாரத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாகவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வைத்து அனைத்து தரப்பினரும் இணைந்து ஆதரவு வழங்கியதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு முதல்முறையாக ஐக்கிய தேசியக் கட்சி உதவியது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற உள்ளூராட்சி பிரதிதிநிதிகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சரவையில் இணைந்து கொண்டமை மிக சிறந்த விடயமாகும்.
அரசாங்கத்துடன் இணையுமாறு அவர்களுக்கு கடந்த ஜனவரி மாதமே அழைப்பு விடுக்கப்பட்டது.
அதேவிதமாக சில கட்சிகள் அமைச்சுப் பதவிகளை பெற்று அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது போல், தேசிய நிறைவேற்றுச் சபையில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் இருக்கின்றன.
அனைவரும் மூன்று முனைகளில் இருந்து செயற்பட்டாலும் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சிக்காக செயற்பாடுகளை முன்னெடுப்பது மிக முக்கியமானது.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர், அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு இது முன்பயிற்சியாக இருக்கும். பொதுத் தேர்தலுக்கு பின்னர், முழு நாடாளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றும் தேவை தனக்கிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUlu0I.html

மனித உரிமை குற்றச்சாட்டுகள்: உள்ளக விசாரணை முன்னேற்றத்தை ஐநா கவுன்சிலில் வைப்பது அவசியம்!
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 01:05.52 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்நாட்டில் விசாரணை நடத்தி அதன் முன்னேற்றத்தை வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அறிவிப்பது முக்கியம் என்று இலங்கையின் இராஜாங்க நிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு காணாமல் போனோரை கண்டறிவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை தற்போது தயாராகியுள்ள நிலையில், அதனை மக்கள் பார்வைக்காக வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க இராஜங்க நிதி அமைச்சராக, அமைச்சரவை பொறுப்புக்களை ஏற்கும் முதல் நாளான இன்று ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னைய மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது, மனித உரிமைகள் அமைச்சுக்கு பொறுப்பாக இருந்த மஹிந்த சமரசிங்க, ஐக்கிய நாடுகள் சபை கூட்டங்கள் பலவற்றில் இலங்கையின் பிரதிநிதியாக பங்கேற்று வந்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் இலங்கைத் தொடர்பில் மார்ச் மாதம் வெளியிடப்படவிருந்த பிரேரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டமையானது மைத்திரிபால அரசுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்தால் இலங்கைக்கு எதிராக பொருளாதா தடை கொண்டுவரவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.
குறிப்பாக, இன்று இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாக பலர் குற்றஞ்சாட்டுகின்ற நிலையில், ஒருவேளை பிரேரணைக் கொண்டுவரப்பட்டு பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்தால் இலங்கையின் பொருளாதாரம் முற்றாக இல்லாமல் போயிருக்கும் எனவும் கூறினார்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் சர்வதேசத்திடமிருந்து கிடைத்துள்ள வாய்ப்புக்கள் இலங்ககைக்கு முக்கியமானதாக இருக்கிறது என கூறிய அவர் ஒரு தரப்பினர் மட்டுமல்லாது அனைவரும் தங்களது ஒத்துழைப்பை இலங்கைக்கு தர முன்வந்துள்ளமை தற்போதைய அரசாங்கத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUlu0H.html

Geen opmerkingen:

Een reactie posten