தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 maart 2015

சிறிலங்காவில் பயங்கரவாத தடைச்சட்டமும் தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியும் : ஐ.நா மனித உரிமைச்சபை உபமாநாடொன்றில் கருத்துரைப்பு



ஜெனீவா - ஐ.நா மனித உரிமைச்சபையில் உலக அளவில் பயங்கரவதாத்துக்கு எதிரான சட்டங்களினால் ஏற்படும் மனித உரிமைமீறல்களை மையமாக கொண்டு இந்த உபமாநாடு இடம்பெற்றிருந்தது
ஐ.நா மனித உரிமைச்சபையில் பிரென்சு மொழிபேசுகின்ற நாடுகளை மையமாக கொண்டு செயற்படும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நாவுக்கான வள அறிஞர் குழுப்பிரதிநிதியும் (பிரான்ஸ்) CNRJ அமைப்பின் தலைவருமாகிய வெடறிக் பர்பனி அவர்களே சிறிலங்காவின் பயங்கரவா தடைச்சட்டம் தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான அல்லது தடைச்சட்டங்கள் ஊடக கலைஞர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகர்கள் மற்றும் அப்பாவிப்பொதுமக்கள் பல்வேறு நெருக்கடிகளையும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டும் உள்ளனர்.
இவ்வாறான மனித உரிமைமீறல்களை தடுப்பதற்கு உலகளாவியரீதியில் மனித உரிமை அமைப்புக்கள் செயற்படவேண்டும் என்பதனை மையப்படுத்தி கருத்துரைத்த வெடறிக் பர்பனி அவர்கள் சிறிலங்காவில் இவ்வறான சவால்களை அங்குள்ள தமிழர்கள் எதிர்கொண்டு வருகின்றனர் என பிரஸ்தாபித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRYSUlt5B.html

Geen opmerkingen:

Een reactie posten