[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 01:24.11 PM GMT ]
எது சர்வாதிகார அரசாங்கம் என்பது தற்போது தெளிவாகியுள்ளதாகவும் வீரவன்ஸ கூறியுள்ளார். நாராஹேன்பிட்டிய அபயராமயவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடு அரசியல் ரீதியாக மிகவும் பாதுகாப்பற்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு வருகிறது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவர், பிரதமரையும் நியமித்து,எதிர்க்கட்சித் தலைவரையும் தெரிவு செய்து கொண்டு மூன்று அதிகாரங்களையும் தம்வசம் வைத்துள்ள அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் காணப்படுகிறது.
முழு நாடாளுமன்றமும் தேசிய அரசாங்கமாக ஒன்றிணைந்திருக்கும் அனுபவங்களை உலக நாடுகள் கொண்டுள்ளன. ஆனால், இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தை போன்ற அரசாங்க அனுபவங்களை உலக நாடுகள் கொண்டிருக்காது.
சிங்கப்பூர் போன்ற தேசிய அரசாங்கம் ஆட்சி செய்யும் நாடுகளில் பெயரளவிலாவது தனியான எதிர்க்கட்சித் தலைவர் பிரதிநிதித்துவம் செய்கிறார்.
இலங்கையின் மூன்று அதிகார கேந்திரங்களையும் ஒரு இடத்திற்கு எடுத்துக்கொண்டுள்ளனர். இதனால், தற்போதைய அரசாங்கம் சர்வாதிகார அரசாங்கமா அல்லது முந்தைய அரசாங்கம் சர்வாதிகார அரசாங்கமா என்ற கேள்வி எழுகிறது.
நல்லாட்சி ஐயாமார் சர்வாதிகார அரசாங்கம் என்று வர்ணிக்கும் கடந்த அரசாங்கம் அந்த மலையும் என்னுடையது, இந்த மலையும் என்னுடையது என்று அனைத்தை பிடித்து வைத்திருக்கவில்லை.
கடந்த அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் 150க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. தேவையிருந்தால், தனியான எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்கி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இலகுவாக பறித்திருக்கலாம்.
எனினும் கடந்த அரசாங்கம் அப்படி செய்யவில்லை. அப்படி செய்யாத அரசாங்கத்தை இந்த நல்லாட்சி துரைமார் சர்வாதிகார அரசாங்கம் என்கின்றனர்.
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று முக்கிய பதவிகளை கைப்பற்றியுள்ள இந்த அரசாங்கத்தை எப்படியான சர்வாதிகார அரசாங்கம் எனக் கூறுவது எனவும் விமல் வீரவன்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
புலிகளின் மீதான தடை கடந்த அரசாங்கத்தின் சிலருக்கு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது!
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 01:33.55 PM GMT ]
குமரன் பத்மநாதனின் சொத்துக்களைக் கொண்டு செல்வந்தர்களாக காத்திருந்தவர்கள் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டுமென்றே விரும்பினார்கள்.
எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புலிகளுக்கு எதிரான தடையை நீடிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
பிரதமரின் கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டு தடையை விதித்துள்ளது.
கடந்த அரசாங்கம் உரிய முறையில் புலிகளுக்கு எதிரான தடை நீடிப்பிற்கு முயற்சிக்கவில்லை.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்க, நாட்டை நேசித்து இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் குமரன் பத்மநாதன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
குமரன் பத்மநாதன் பற்றிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQUSUlx6F.html
Geen opmerkingen:
Een reactie posten