[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 01:33.33 AM GMT ]
மஹிந்தவை பிரதமராக்கும் நோக்கில் நடத்தப்பட்டு வரும் கூட்டத் தொடர்களுக்கு தொடர்ச்சியாக எனது பங்களிப்பு வழங்கப்படும்.
இதனால் முதலமைச்சர் பதவியை இழக்க நேரிட்டாலும் அதனை பொருட்படுத்தப் போவதில்லை.
மஹிந்தவை பிரதமராக்கும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சகோதரர் அர்ஜூன ரணதுங்க அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பதவியை வகித்த போதிலும் ஒரு நாளும் அரசியல் ரீதியான உதவியை அவரிடம் கோரியதில்லை என பிரசன்ன தெரிவித்துள்ளார்.
மஹிந்த ஆதரவு கூட்டம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று தொலைபேசி மூலம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க முடியாது: முதலாளிமார் சம்மேளனம்
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 01:45.55 AM GMT ]
ஏற்கனவே தொழிலாளர்களுக்கு சம்பளம் உட்பட்ட கொடுப்பனவுகளாக நாள் ஒன்றுக்கு 620 ரூபா கிடைத்து வருகிறது. இதனை 1000 ரூபாவாக உயர்த்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரி வருகின்றன.
எனினும் தற்போது உள்ள நிதிநிலைமையின் அடிப்படையில் இந்தளவு தொகையை வழங்க முடியாது என்று முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
எனினும் எதிர்வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது இந்த விடயத்தில் இணக்கம் ஏற்படலாம் என்று கூட்டுத்தொழிற்சங்க செயலாளர் சுப்பையா ராமநாதன் தெரிவித்துள்ளார்.
இவரின் சங்கம் மற்றும் ஆறுமுகன் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் என்பனவே பெருந்தோட்ட தொழிலாளர் சார்பில் சம்பள உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு வருகின்றன.
இந்த சம்பள உடன்படிக்கை 2 வருடங்களுக்கு ஒருமுறை செய்துக்கொள்ளப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUkoyD.html
வடக்கு இளைஞர் யுவதிகள் 400 பேர் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 02:54.50 AM GMT ]
வடக்கைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் 400 பேர் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தலா இருநூறு இளைஞர்களும் தலா இருநூறு யுவதிகளும் இவ்வாறு பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் இந்த இளைஞர் யுவதிகளை கடமையில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அண்மையில் பிரதமர் யாழ்ப்பாணத்தில் வைத்து இந்த விடயத்தை சிவில் சமூக உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
பெண்கள் பொலிஸ் நிலையங்களுக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாகவும், வடக்கு பொலிஸ் நிலையங்களில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவதில்லை எனவும் மகளிர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் விரும்பும் போதிலும், தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ள அதிக நாட்டம் காட்டுவதில்லை என பிரதமர் மகளிர் அமைப்புக்களிடம் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUkoyG.html
Geen opmerkingen:
Een reactie posten