தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 maart 2015

லலித், குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ். நீதிமன்றில்!



கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்றனர்
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 02:12.32 PM GMT ]
கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் மேற்படி 3 மாவட்டங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தின் அடிப்படையில் இன்றைய தினம் புதிய கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதன்படி யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சுந்தரம் அருமைநாயகம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராகவும்,
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய திருமதி ரூபவதி கேதீஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராகவும்,
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய என்.வேதநாயகன் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு, இன்றைய தினம் அந்தந்த மாவட்டங்களில் தங்கள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதன்படி யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக கடமையை என்.வேதநாயகன் இன்றைய தினம் காலை. யாழ். மாவட்டச் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டம் மிக இக்கட்டான காலப்பகுதியில் இருந்த போது, இங்கு கடமையாற்றியவன் என்னும் வகையில் யாழ்ப்பாணம் தொடர்பாக நன்றாக அறிந்து கொண்டிருப்பதாகவும், இங்குள்ள மக்களுடைய தேவைகள், நலன்கள் தொடர்பில் அறிந்துள்ளதாகவும் தெரிவித்ததுடன், இங்குள்ள மக்களின் மீள்குடியேற்றம், மற்றும் மீள்குடியேறிய மக்களின் நலன்கள் தொடர்பில் அதிகம் அக்கறை கொண்டு செயற்படுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUlu1B.html

லலித், குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ். நீதிமன்றில்!
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 02:16.19 PM GMT ]
யாழ். மாவட்டத்தில் அரசியல் பணியிலிடுபட்டிருந்த போது காணாமல்போன முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்களான லலித், குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த விசாரணையில் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வலவுக்கு நாடாளுமன்றத்தின் ஊடாக யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வழக்கின் சாட்சியாளரான மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாமையால், அவரையும் அடுத்த தவணையில் மன்றுக்கு வருமாறு நாடாளுமன்றத்தினூடாக அழைப்பாணை விடுக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.
முன்னணி சோசலிச கட்சியைச் சேர்ந்த லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது கடந்த 2011ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 10ம் திகதி காணாமல் போனார்கள்.
அவர்கள் பயணம் செய்த மோட்டார் வண்டி, கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் தொடர்பான தகவல் இதுவரையில் கிடைக்கவில்லை.
இவர்கள் காணாமல் போனமை தொடர்பில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகள், யாழ். நீதவான் நீதிமன்றத்தால் நடத்தப்படும் என, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கடந்த 201ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 23ம் திகதி கட்டளை பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த வழக்கின் விசாரணைகள் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.
வழக்கு விசாரணைகளின் போது, இருவரும் காணாமற்போனவர்களின் விவரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள். அதனால் அவர்களுக்கு அரச தரப்பால் அழுத்தங்கள் தொடர்ந்து இருந்தன என அவர்கள் சார்பான சட்டத்தரணிகள் மன்றுக்கு தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, யாழ். மாவட்ட படைகளின் முன்னாள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, அச்சுவேலி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர் ஆகியோரையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதவான் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
லலித், குகன் ஆகியோர் காணமற்போன சில நாட்களுக்கு பின்னர் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் கருத்து தெரிவித்திருந்த முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவ்விருவரும் கடத்தப்படவில்லை. பொலிஸ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். விசாரணை முடிந்த பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார் என நாம் இலங்கையர் அமைப்பின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான உதுல் பிரேமரத்ன, கடந்த 2012ம் ஆண்டு ஒக்டோபர் 18ம் திகதி, யாழ். நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
லலித் மற்றும் குகன் ஆகியோருடன் போராட்டங்கள், கூட்டங்களை நடத்திய போது அவர்களுடன் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியையும் சாட்சியம் அளிப்பதற்கு இன்று புதன்கிழமை ஆஜராகும்படி கூறியிருந்த போதும், அவரும் இன்று மன்றில் ஆஜராகவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 30ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், கெஹெலியவையும் ஹந்துன்நெத்தியையும் அன்றைய தினம் மன்றில் ஆஜராகுமாறு
நாடாளுமன்றத்தின் ஊடாக அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUlu1C.html

Geen opmerkingen:

Een reactie posten