ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தூதரகம் அருகே ஆர்ப்பாட்டம் !
[ Mar 24, 2015 06:43:48 AM | வாசித்தோர் : 4655 ]
தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டினால் சுட்டுக்கொல்ல இலங்கை கடற்படைக்கு உரிமை உள்ளது என்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் அருகே சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் இன்று (23) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்பட 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
http://www.athirvu.com/newsdetail/2670.htmlமாயா வைப் பார்த்து தீவிரவாதி என்று திட்டினாரா உலகப் புகழ் ஒபரா !
[ Mar 24, 2015 06:54:05 AM | வாசித்தோர் : 16430 ]
மாயா என்று அழைக்கப்படும் பாப் இசைப் பாடகி , பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த ஈழத் தமிழர் ஆவார். அவர் 2009ம் ஆண்டு அமெரிக்கா செல்லும் வேளை , அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் உள்ள பல மக்களால் நன்கு அறியப்படும் நிகழ்சி தொகுப்பாளரான ஓபராவை சந்தித்துள்ளார். மாயா தன்னை ஒரு நேர்காணல் செய்யுமாறும் , இலங்கையில் நடைபெறும் மனிதக் கொலைகள் தொடர்பாக தாம் பேசவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதற்கு பதிலளித்த ஓபரா , தான் பெரும் புள்ளிகளை மட்டுமே பேட்டி காணுவேன் என்று நக்கலடித்துள்ளார்.
அதுபோக நீ ஒரு தீவிரவாதி (புலிகள் என்று மறைமுகமாக) கூறியுள்ளார். எனது நாட்டில் நடக்கும் பிரச்சனை தொடர்பாகவே நான் பேசவிரும்பினேன். என்னை தீவிரவாதி என்று கூற நீங்கள் யார் ? நீங்கள் ஒரு தீவிரவாதி. அமெரிக்காவுக்கு நான் வர முன்னர். அமெரிக்காவின் தலையெழுத்தையே மாற்றவல்லவர் ஓபரா என்று பலர் பேசியதை நான் கேட்டு இருக்கிறேன். ஆனால் இங்கே வந்து பார்த்ததும் தான் உங்கள் வண்டவாளம் புரிகிறது என்று மாயா அவரை திட்டியுள்ளார். இது தொடர்பான செய்தி தற்போது வெளியாகி சர்சையை கிளப்பியுள்ளது.
மாயா அடிக்கடி விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் , இலங்கை அரசு 2009ம் ஆண்டு புரிந்த இனப்படுகொலைகள் தொடர்பாகவும் தனது கருத்துக்களை பதிவுசெய்து வருகிறார்.
http://www.athirvu.com/newsdetail/2671.html
Geen opmerkingen:
Een reactie posten