[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 12:32.26 AM GMT ]
பதுளை லுனுகல பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது தெரிவித்துள்ளார்.
நான் எனது அரசியல் வாழ்க்கையில் அடக்குமுறைகளை பிரயோகித்ததில்லை.
நாட்டை முன்னேற்றுவதற்கு வெறும் கட்டடங்கள் மட்டும் போதுமானதல்ல. ஆன்மிக ரீதியான வளர்ச்சியும் மிகவும் முக்கியமானது.
உலகின் அபிவிருத்தி அடைந்த நாடு எனக் கூறிக் கொள்ளும் பல நாடுகளில் ஆன்மிக ரீதியான வளர்ச்சி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மின்சார நாற்காலி, தூக்குதண்டனை அமுல்படுத்தப்படுகின்றது.
கடுமையான சட்டங்கள், தூக்குமேடை போன்றவற்றின் ஊடாக குற்றச் செயல்களை தடுக்க முடியும் என பலர் கருதுகின்றார்கள். எனினும் அவ்வாறு குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த முடியாது என நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஸ்திரப்பாட்டுக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வு அவசியம்: ரணில்
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 01:12.35 AM GMT ]
வடக்குக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்ட அவர், இந்த கருத்தை வெளியிட்டதாக அவரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
நாடு ஸ்திரப்பட தமிழர்களுடன் இணைந்து பிரச்சினையை தீர்ப்பதுடன், அதனை முன்கொண்டு செல்லவேண்டும் என்று அவர் குறிப்பிட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பது குறித்து அவர் தகவல் எதனையும் வெளியிடவில்லை.
போர் முடிவடைந்துள்ளது. எனினும் ஏனைய சமூகங்களுடன் இன்னும் இணைவாழ்க்கை ஏற்படுத்தப்படவில்லை. இந்தநிலையில் தமிழர்களும் நல்லிணக்கத்துக்கான தமது விருப்பத்தை வெளிக்காட்ட வேண்டும் என்று ரணில் கோரியுள்ளார்.
இதேவேளை போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணை என்ற தமது அரசாங்கத்தின் திட்டத்துக்கு ஐக்கிய நாடுகளும் ஆதரவு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQUSUlx0G.html
Geen opmerkingen:
Een reactie posten