[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 08:23.12 PM GMT ]
இன ஐக்கியத்தை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம் அரசின் செயற் பாட்டில் மாற்றம் கட்டாயம் என்கிறார், மட்டு. மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா
அரசாங்கத்திற்கு கீழ்படிவாக நடந்து கொள்ளும் ஓர் எதிர்க்கட்சித் தலைவர் தேவையில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRdSUlx0B.html
அரசாங்கத்திற்கு கீழ்படிவான எதிர்க்கட்சித் தலைவர் தேவையில்லை!- முன்னாள் அமைச்சர் சந்திரசேன
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 12:20.51 AM GMT ]
நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்துடன் இணைந்து அரசாங்கத்தின் கீழ்படிவுள்ள ஒர் சேவகனாக செயற்பட்டால் அவ்வாறான ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்க முடியாது.
எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா எனது நல்ல நண்பர், அரசாங்கத்திற்கு கீழ்படிந்து செயற்படுவதிலிருந்து விடுபட்டு செயற்பட்டால் முழு அளவில் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்.
மெய்யான எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டால் நான் உள்ளிட்ட நாடாளுமன்றின் பெரும்பான்மையானவர்கள் ஆதரவளிப்பார்கள்.
மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பளாகராக போட்டியிடச் செய்ய முயற்சிக்கப்படுகின்றது.
இதற்கான கூட்டங்களில் நாம் பங்கேற்காவிட்டால் மக்கள் எம்மை நிராகரித்து விடுவார்கள். இதன் காணரமாகவே நாம் இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றோம்.
கட்சியை இரண்டாக பிளவடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் சுதந்ததிரக் கட்சியின் 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரத்தினபுரிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சுதந்திரக் கட்சியின் ஓர் ஆலோசகராகும். அவரை பிரதமர் வேட்பாரளராக நியமிக்குமாறு மக்களும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும் கோரி வருகின்றனர்.
தற்போதைய அரசாங்கம் எனக்கு பிரதமர் பதவி வழங்கினாலும் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ள மாட்டேன் என எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQUSUlx0C.html
Geen opmerkingen:
Een reactie posten