தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 29 maart 2015

யார் இந்த உதயங்கன ? இவரின் ஆயுதக் கொடுக்கல் வாங்கல் பற்றிய சுவாரசியமான தகவல் !

மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான , உதயங்கன ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவராக முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவுக்கு அருகில் உள்ள உக்கிரைன் நாட்டின் , ஒரு பகுதியைக் கைப்பற்ற ரஷ்ய அதிபர் புட்டின் சில திட்டங்களை தீட்டி வைத்திருந்துள்ளார். இதற்கு அவர் உதயங்கனவை பாவித்தும் உள்ளார். உக்கிரைன் நாட்டில், பிரிவினையை தூண்ட அங்கே ஒரு ஆயுதக் குழு அமைக்கப்பட்டது. அக் குழுவுக்கு , ஆயுதங்களை உதயங்கனவே வழங்கியுள்ளார்.
உதயங்கன ஒரு ஆயுத வியாபாரி அல்ல. ஆனால் இவர் கைகளுக்கு எப்படி ஆயுதம் வந்தது என்று பார்த்தால் அதன் பின்னணியில் கோட்டபாயவே இருக்கிறார். அவரிம் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்தே பல ஆயுதங்கள் உக்கிரைக்குச் சென்றுள்ளது என்று கூறப்படுகிறது. இது தொடர்பான பல தகவலை , உக்கிரைன் நாடு தற்போது வெளியிட்டுள்ளது. அன் நாடு நேரடியாகவே குற்றஞ்சாட்டியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமறைவாக இருக்கு உதயங்கன , குற்றம் புரிந்தவரா என்று இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளர்.

Geen opmerkingen:

Een reactie posten