[ வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015, 10:08.44 AM GMT ]
யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை சென்றிருந்த போதே மேற்கொண்டவாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வடக்கில் உள்ள இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பு இன்றியும் வாழ்வாதாரத்தில் பின்னடைவுடனும் உள்ளனர். இதனால் இங்கு அதிகமான இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
எனவே வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கவும், வேலையில் இருந்து இடையில் விலகியவர்கள் மற்றும் வேலையை இழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளிக்கும் முகமாக பேசிய போதே மேற்கண்டவாறு பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர்,
விவசாயத்திற்கு வடக்கு மாகாணம் சிறந்த இடமாக உள்ளது. எனவே எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கமைவாக யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, அம்பாந்தோட்டை , கண்டி ஆகிய மாவட்டங்களை பொருளாதார வலயமாக முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் முடிந்ததும் அதற்கான செயற்பாடுகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
வேலையில்லாப்பிரச்சினை வடக்கு மாகாணத்தில் மட்டுமல்ல இலங்கை பூராகவும் உள்ளது. இதனால் பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசாங்கமானது குறுகிய கால திட்டமான 100 நாள் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. அதனூடாக நாட்டில் ஒற்றுமை, சட்ட ஆதிக்கத்திற்கு உட்படுத்தி பொதுத் தேர்தலின் பின்னர் 10 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டு வருகின்றது.
எனவே விவசாயத்திற்கு சிறந்த இடமாக இருக்கும் வடக்கு மாகாணத்தை சிறந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத்தை முன்னேற்றுவதற்கு சிறந்த நடவடிக்கை எடுப்போம். அதற்கான நிதியினைப் பெற்றுத்தரவும் நாம் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.
இலங்கையில் இரகசிய முகாம்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ள அவர் எமது ஆட்சியில் 21 ஆம் நூற்றாண்டுகளுக்கு ஏற்ற மாற்றம் வடக்கில் ஏற்படுமாயின் முழுநாடும் மாற்றமடையும் எனவும் ரணில் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- யாழில் ரணில்: விவசாயத்திற்கு வடக்கு மாகாணம் சிறந்த இடம்- இலங்கையில் இரகசிய முகாம்கள் இல்லை!
- பிரதமர் இன்று யாழ். விஜயம்! பரு. ஹாட்லி கல்லூரியில் ஆய்வுகூடம் திறப்பு!
- தற்போதைய அரசுக்கு ஆதரவளிப்பது அமைச்சுப்பதவிக்காக அல்ல: மாவை சேனாதிராஜா
- வடக்கு முதல்வரை புறக்கணித்த ரணில்: ரணிலை புறக்கணித்த சிறீதரன்
எதிர்வரும் தேசிய விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில்
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களையும் இன்று காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதேவேளை மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக யாழ் மீனவர் சமூகத்தினருடன் பேச்சுவார்தை நடத்துவதற்கு பிரதமர் ஆயத்தமாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கர்ப்பிணித் தாய்மாருக்கான உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார் பிரதமர்
போஷாக்கு உணவு வழங்கும் திட்டத்திற்கமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பயனாளிகளுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மகளிர் விவகார அமைச்சர் ரோசி சேனாநாயக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமசந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணித் தாய்மாருக்கு பொதிகளை வழங்கி வைத்தனர்.
யாழ்.மக்களுக்கு பௌத்தம் போதிக்க உதவுவேன்: பிரதமர் ரணில்
சென்னையிலுள்ள பௌத்தவிகாரையில் இருக்கும் தமிழ் பௌத்த பிக்குகளை அழைத்து வந்து யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்கள் மத்தியில் பௌத்தத்தை போதிக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், அதற்கு தான் உதவுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம்செய்த பிரதமர் ரணில் தலைமையிலான குழுவினர் முதலில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நாகவிகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.அவ்வேளை நாகவிகாரையின் விகாராதிபதியுடன் கலந்துரையாடிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழர்கள் மத்தியில் பௌத்த மதத்தை போதிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார்.
இதன்போதே சென்னையில் இருக்கும் தமிழ் பௌத்த பிக்குகளை வரவழைத்து வந்து அவர்களின் உதவியோடு யாழ்ப்பாண தமிழ் மக்களுக்கு பௌத்தத்தை போதிக்க முடியும். அதற்கு தான் உதவுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதன்போது மீள்குடியேற்ற மற்றும் நல்லிணக்க அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுடன் இச்சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மைத்திரி ஆட்சி தொடர்ந்தால் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்: இரா.சம்பந்தன்
[ வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015, 08:07.51 AM GMT ]
சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி குறித்து வடக்கு கிழக்கு மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல காலமாக தான் அறிந்த ஒருவர் எனவும் அவர் மனசாட்சிக்கு உண்மையாக நடந்து கொள்வதோடு சட்டத்திற்கு விரோதமான காரியங்களை மேற்கொள்ளாத ஒருவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலங்களில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றிக் கொண்டிருப்பதனால் வடக்கு கிழக்கு மக்கள் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRbSUlv2J.html
Geen opmerkingen:
Een reactie posten