[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 03:00.55 AM GMT ]
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் பங்கேற்க உள்ளார்.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் கட்சித் தலைவர்களிடம் இன்று கருத்து கோரப்பட உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பில் தேர்தல் ஆணையாளரின் பரிந்துரைகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கட்சித் தலைவர்கள் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்த உள்ளனர்.
சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அவசரமில்லை: சுசில் பிரேமஜயந்த
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 03:19.42 AM GMT ]
கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து இன்னமும் கட்சிக்குள் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.
இரத்தினபுரி கூட்டத்தின் பின்னர் கூட்டணி கட்சித் தலைவர்கள் இதுவரையில் சந்திக்கவில்லை.
கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய கட்சியின் சில உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சித் தாவும் நிலைக்கு என்னை தள்ளிவிட வேண்டாம்: பிரசன்ன ரணதுங்க
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 03:24.33 AM GMT ]
கட்சியின் தலைவர்களும் சில அமைச்சர்களும் இணைந்து என்னை கட்சியைவிட்டு வெளியே தள்ள முயற்சிக்கின்றனர்.
முடிந்தால் என்னை கட்சியை விட்டு வெளியே தள்ளி பார்க்கவும்? என்னை பதவியிலிருந்து விலக்க முடியாது. நான் வழக்குத் தொடர்ந்து உள்ளேன்.
மாகாணசபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் என்னை விலகச் சொன்னால் நான் இந்தப் பொறுப்பினை எவரிடமும் ஒப்படைக்கத் தயார்.
முதலமைச்சர் பதவியை விட்டு செல்ல நேரிடும் என்பதனை தெரிந்து கொண்டே இந்த விடயத்தில் இறங்கினேன்.
நான் மக்களின் கருத்துக்கு மட்டுமே தலை வணங்குவேன்.
எங்கள் பிரதமர் ஒருவரை நியமிக்க கட்சி தலைவர்கள் இணைந்து செயற்பட வேண்டும்.
பதவி இல்லாமல் போனால் பஸ்ஸிலோ அல்லது ரயிலிலோ செல்ல முடியும்.
மஹிந்த ராஜபக்சவை பிரதமராக 75 நாடாளுமன்ற உறப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பதவி விலக்குவேன் என்ற எச்சரிக்கைகளுக்கு எல்லாம் நான் அஞ்சப் போவதில்லை என பிரசன்ன ரணதுங்க அண்மையில் மினுவன்கொடையில் வைத்து தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQUSUlx1F.html
அரசாங்க விடயங்களில் தலையிட ஜே.வி.பிக்கு உரிமையில்லை: ஜாதிக ஹெல உறுமய
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 06:16.44 AM GMT ]
அத்துடன் 100 நாள் வேலைத்திட்டம் பற்றி பேசவும் அந்த கட்சிக்கு உரிமை கிடையாது என ஜாதிக ஹெல உறுமயவின் தேிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமே 100 நாள் வேலைத்திட்டத்தை பற்றி பேசும் உரிமை உள்ளது.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் குறைகள் இருக்கும் பகுதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு, அதனை நிறைவேற்றிய பின்னர், நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும்.
அப்படியில்லாமல் ஜே.வி.பிக்கு தேவையான வகையில் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது.
மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெற செய்யுங்கள் என்று கூறமுடியாத அந்த கட்சி தற்போது சிங்கத்தை போல் கர்ஜித்து வருகிறது எனவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQUSUlx2G.html
விக்னேஸ்வரன் மீது மிகுந்த அவதானத்துடன் இருங்கள்: இந்திய ஊடகவியலாளர்
[ திங்கட்கிழமை, 30 மார்ச் 2015, 07:01.35 AM GMT ]
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தேவைகளை கருத்திற் கொண்டு வடமாகாண முதலமைச்சர் செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் இந்திய அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் தனது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடில்லி ஆட்சியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சர் கூறியமை மிகவும் சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQUSUlx3B.html
Geen opmerkingen:
Een reactie posten