தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 31 maart 2015

தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளை முன்னெடுக்கும் மையமே வட மாகாண சபை: சீ.வீ.கே



மஹிந்த அபேகோனுக்கு இரண்டரை வருட சிறை
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 07:13.32 AM GMT ]
தேர்தல் வன்முறை, வாக்கு மோசடி, தேர்தல் பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஆயுதத்தைக் காட்டி அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள மத்திய மாகாண சபை தவிசாளர் மஹிந்த அபயக்கோனுக்கு கண்டி மேல் நீதிமன்றம் இரண்டரை வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இவர் மீது சுமத்தப்பட்டிருந்த மூன்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருந்ததன் பேரில் ஆறு மாத கால சிறைத் தண்டனையும் ஏனைய இரு குற்றச்சாட்டுக்களுக்கும் தலா ஒருவருடம் என்ற ரீதியில் இரண்டரை வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரச்சார காலத்தின் போது தேர்தல் வாக்களிப்பு நிலைய பணியாளர்களை அச்சுறுத்தியமை, வாக்களர்களுக்கு இடையுறு விளைவித்தமை, சட்டவிரேதமாக ஆயுதம் வைத்திருந்தமை மற்றும் சட்டவிரோத ஒன்று கூடல்களை மேற்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டு கண்டி மேல் நீதி மன்றில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
கலஹா பொலிஸாரால் தொடரப்பட்ட மேற்படி வழக்கில் மஹிந்த அபயக்கோன் உட்பட 12 பேர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இவர்களில் 11பேர் வழக்குகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் மஹிந்த அபயக்கோன் மீது தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை இவ்வழக்கின் விசாரணைகள் கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது அபயக்கோன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
இதேவேளை அபயக்கோன் மீது மேலும் பல விசாரணைகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


தென்னாபிரிக்காவில் தமிழ் மொழியைத் தக்க வைக்க உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஆற்றியுள்ள பணி
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 07:36.16 AM GMT ]
தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வந்தாலும் எமது மொழி அழிந்து போய்விடுமோ என்று அஞ்சப்படும் தென்னாபிரிக்காவில் தமிழ் மொழியைத் தக்க வைக்க உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஆற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் மிக்க பணியின் சிறப்பு நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 4ம் திகதி தென்னாபிரிக்காவின் டேர்பன் நகரில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமானது இந்தியாவில் உள்ள முதன்மையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான எஸ். ஆர். எம் பல்கலைக் கழகத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டது.
அந்தவகையில், 2013ம் ஆண்டு ஐப்பசி மாதம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கல்விப் பொறுப்பாளர் வி, சு. துரைராஜா, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொன்னவைகோ, பதிவாளர் ஆகியோர் முன்னிலையில் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் தென்னாபிரிக்காவில் தமிழ் ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.
மேற்படி பயிற்சியை பூர்த்தி செய்த சுமார் 48 ஆசிரியர்களுக்கான பட்டமளிப்பு விழாவே எதிர்வரும் சனிக்கிழமை அங்கு நடைபெறவுள்ளது.
அதில் கலந்து கொள்வதற்காக கனடாவிலிருந்து வி. எஸ் துரைரஜா, உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச ஊடகப் பொறுப்பாளர் ஆர். என். லோகேந்திரலிங்கமும் நேற்று தென்னாபிரிக்கா பயணமானார்கள்.
லோகேந்திரலிங்கம் முன்னர் இந்தியாவில் மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது துரைராஜாவோடு இணைந்து கையொப்பமிட்டடவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்படி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவென தமிழ்நாட்டிலிருந்து எஸ். ஆர். எம் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் பச்சமுத்து, பேராசிரியர் இல. சுந்தரம் மற்றும் இலங்கையிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோரும் தென்னாபிரிக்காவிற்கு பயணமாகின்றார்கள்.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUko1A.html

தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளை முன்னெடுக்கும் மையமே வட மாகாண சபை: சீ.வீ.கே
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 08:12.29 AM GMT ]
தாயகம், தேசியம், சுயர்நிர்ணயம் என்ற கோட்பாடுகளில் மிகத் தெளிவாக அந்த இலக்கை நோக்கி நகர்கின்ற ஒரு மையமாகவே மாகாண சபையை முன்னெடுக்கின்றோம் என அவைத் தலைவா சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்
அண்மையில் நல்லூர் சங்கிலியன் மன்றக் கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய மண், இது வரலாற்று மண். ஈழத்தமிழர் வரலாற்றில் யாழ்ப்பாண இராச்சியம் பெருமையுடையதாகப் பேசப்படுகின்றது. இன்றும் பேசப்படுகின்றது.
யாழ்ப்பாண இராச்சியத்தியத்தின் மையமாக, ஆட்சிநிலமாக அரண்மைனை நிலமாக சங்கிலித் தோப்பு விளங்குகின்றது.
அந்தப் பகுதியில் வாழ்கின்றவன் என்பதல் நான் பெருமையடைகின்றேன். இந்த நிகழ்வு அந்த சங்கியன்தோப்பில் இருந்து ஆரம்பித்துள்ளது என்பதையிட்டு நான் மகிழ்வடைகின்றேன்.
தமிழர்கள் வரலாற்றில் கடந்த 65 வருடங்களாக இந்த நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்த சிங்கள இனவாதிகளால் புறக்கணிக்கப்படுகின்றோம் என்ற உணர்வோடு எங்களது அரசியல் நகர்கின்றது.
இன்றும் அதுவே உள்ளது. நாங்கள் இதுவரை ஒரு எதிர்ப்பு அரசியலை செய்து வந்தவர்கள் அந்த மனோபாவம் இப்பொழுதும் எங்களிடம் இருக்கின்றது.
இந்திய அரசாங்கம் கூட நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இயங்கவில்லை என்ற ஆதங்கமும் கவலையும் எங்களிடம் இருக்கின்றது. நான் உள்ளூராட்சி சேவையிலும் கூட்டுறவுத் துறையிலும் பலகாலம் சேவையாற்றியிருக்கிறேன்.
மாகாண சபைக்கு வருவதற்கு முன் நான் செய்த சேவைகளை தற்போது செய்ய முடியாதுள்ளது என்ற கவலையும் ஆதங்கமும் என்னிடம் இருக்கின்றது.
மாகாண சபையைப் பொறுத்தவரையில் 13 ஆவது திருத்தச்சட்டமோ, மாகாண சபை முறைமையையோ எங்களுடைய அபிலாஷைகளை பூர்த்தி செய்யாது என்று கூறிக்கொண்டிக்கிறோம்.
1987ஆம் ஆண்டில் 13ஆவது திருத்தச் சட்டத்தை மாகாண சபை வரைவை முன்வைத்துபோது அப்போதைய அரசியல் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோர் இது எற்றுக்கொள்ளக்கூடிய முறைமை அல்ல என்று கூறியிருக்கின்றார்கள்.
அந்த நிலைமை இன்றும் இருக்கிறது. தேர்தல் காலத்திலும் சரி, இப்பொழுதும் சரி மாகாண சபை முறைமை என்பது 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது எங்களுடைய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யாது என்பதை நாங்கள் தெளிவாக உணர்த்திருக்கிறோம்.
மாகாண சபையை எங்களுடைய உரிமைகளை ஜனநாயகரீதியில் பேசக்கூடிய, பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய சர்வதேசத்தோடு பேசக்கூடிய ஒரு பலமாகப் பாவிக்கவேண்டும் என்று சொன்னோம். இப்பொழுதும் அவ்வாறே இயங்கி வருகிறோம்.
அப்படி இல்லை என்றால் பல விடயங்களை ஆக 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பேசக்கூடிய ஒரு நிலை உருவாகியிருக்கும். இந்த நிலையைப் போக்கவே 2011இல் கிழக்கு மாகாணத்திலும் 2013இல் வடக்கு மாகாணத்திலும் போட்டியிட்டோம்.
இதையோரு பலமாகப் பாவிப்பதற்காக முன்னைய அரசினால் எங்களுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
ஒதுக்கப்பட்ட நிதி முறையாகச் செலவழிக்கவில்லை என்று குறைசொல்லப்பட்டது. அது உண்மையல்ல. அவ்வாறான கூற்றுக்களை எதிர்க்கட்சிகள் பேசிய காரணத்தால் 420 மில்லியன் ரூபா எங்களது ஒதுக்கீடுகளில் மத்திய அரசினால் குறைக்கப்பட்டது.
இதுதான் இறுதியாக எடுக்கப்பட்ட முடிவு இந்தத் தளத்தில் இருந்து எங்களுடைய மக்களுக்கு என்னென்ன செய்யமுடியும் என்பதை முயன்றுவருகின்றோம்.
நான் உள்ளூராட்சியில் இருந்தவன் என்ற வகையில் நான் செய்த முதலாவது பணி சனசமூக நிலையங்களின் செயற்பாடுகள் அருகிவரும் காரணத்தால் முதலாவது அறிக்கையாக முதலமைச்சருக்கு நான் சமர்ப்பித்தது, மாகாண சபையின் கீழ் உள்ள 1200 சனசமூக நிலையங்களுக்கு ஆகக் குறைந்தது. 5 ஆயிரம் ரூபா ஆவது ஒதுக்கீடாக, நன்கொடையாக வழங்கவேண்டும் என்பது.
மந்திரிசபைக்கும் அமைச்சர் வாரியத்துக்கும் சிபார்சு செய்திருந்தேன். அமைச்சரவையும் அதை ஏற்றுக்கொண்டு இந்த வருடத்தில் இருந்து 5ஆயிரம் தொடக்கம் 10ஆயிரம் ரூபா வரை பகிந்தளிக்க முடிவு செய்யப்பட்டது. என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUko1C.html

Geen opmerkingen:

Een reactie posten