தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 31 maart 2015

உண்மையான சுதந்திரத்தை வழங்க மறுத்த மகிந்த ஆட்சி: சந்திரிக்கா

போர்க்குற்றம் தொடர்பில் எந்த விசாரணைக்கும் தயார்: சரத் பொன்சேகா
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 10:49.51 AM GMT ]
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் எவ்வித விசாரணைகளுக்கும் முகங்கொடுக்க தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஆங்கில வார இதழொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
எனது வழிநடத்தலின் கீழ் செயற்பட்ட இராணுவத்தினர் மிகவும் ஒழுக்க சீலர்களாகவே காணப்பட்டார்கள்,
ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட அமைப்புக்களின் கொள்கைகளை பின்பற்றுமாறு அவர்களுக்கு தொடர்ந்தும் நான் வலியுறுத்தி வந்தேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆதாரங்களுடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைகளிலும் பங்கேற்க தான் தனிப்பட்ட முறையில் தயாராகவுள்ளதாகவும், அந்த விசாரணை உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும் பங்கேற்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் இராணுவத் தளபதியாக இருந்த போது எனது கட்டளைகளை மீறி இராணுவத்தினர் தனிப்பட்ட ரீதியில் தவறுகளை செய்திருக்கலாம். ஆனால் முழு இராணுவமும் எந்தவித குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUko2G.html

சுத்தமான கொழும்பை உருவாக்கியவன் நான் தான்: சம்பிக்க சூளுரை
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 11:06.48 AM GMT ]
கொழும்பு நகரம் இன்று சுத்தமாக காணப்படுவதற்கு நானே காரணம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நான் சுற்றுச்சூழல் அமைச்சராக செயற்பட்ட காலத்தில் பாதைகளை அசுத்தப்படுத்துபவர்களுக்கு எதிராக 5000 ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டமூலத்தை கொண்டு வந்தேன்.
இச்சட்டமூலத்தை பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், என்னை குப்பை அமைச்சர் என்றும் அழைத்தார்கள்.
பின்னர் நகர அபிவிருத்தி அமைச்சு குறித்த சட்டமூலத்தை அமுல்படுத்தியிருந்தது. இன்று கொழும்பு நகரம் ஆசியாவின் தூய நகரமாக காணப்படுகின்றது. இதன் மூலகர்த்தா நான்தான்.
எதிர்ப்புகளுக்கு பயந்து இவ்வாறான சட்டமூலத்தை கொண்டுவராமல் இருந்திருந்தால் இன்று என்ன நடந்திருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இந்தியத் துணைத்தூதர் - கட்டைக்காடு மீனவர்கள் சந்திப்பு
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 11:17.09 AM GMT ]
இந்தியாவின் யாழ்ப்பாணத் துணைத்தூதர் நடராஜன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டைக்காட்டிற்கு, அப்பகுதி கடற்றொழிலாளர்களின் அமைப்புக்கள் வேண்டிக்கொண்டதற்கு இணங்க விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் ஒழுங்குபடுத்தலில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த விஜயத்தின் பொழுது துணைத்தூதர் நடராஜன் கட்டைக்காடு கடற்பரப்புக்களை அவதானித்ததுடன், தாழையடி தொடக்கம் கட்டைகாடு வரையான வீதிகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகுளால் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள், சிரமங்கள் குறித்து நட்பு அடிப்படையில் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளால் எடுத்துக் கூறப்பட்டது.
இதற்கு பதிலளித்த இந்த விடயங்கள் தொடர்பாக தமிழ்நாட்டு மீனவர் சங்க பிரநிதிகளுடன் கலந்துரையாடப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.
இந்தச் சந்திப்பின் போது பா.உறுப்பினர் சி.சிறீதரன், கட்டைக்காடு கிழக்கு கடற்றொழிலாளர் சங்க சமாச தலைவர் பிறேம்குமார், கட்டைக்காடு பங்குத்தந்தை,  கட்டைக்காடு  கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் எட்வேட், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள், வடமாகாண சபை உறுப்பினர் ஆனல்ட், பருத்தித்துறை பிரதேசபை தலைவர் சஞ்சீவன், பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் மாலினி, வடமராட்சி கிழக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைப்பாளர் சூரியகாந், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் சுரேன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUko2I.html

விசேட பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட ஞானசார தேரர்?
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 11:45.16 AM GMT ]
பொதுபல சேனாவின் பொது செயலாளர் ஞானசார தேரர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இவர் இன்றைய தினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மதத்தை அடிப்படையாக வைத்து தனி நபர்களுக்கும் சமூகங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை குறித்தே ஞானசார தேரரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பௌத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சின் விசேட பொலிஸ் பிரிவினால் இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையான சுதந்திரத்தை வழங்க மறுத்த மகிந்த ஆட்சி: சந்திரிக்கா
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 12:15.28 PM GMT ]
யுத்தம் நிறைவுற்ற போதிலும் கடந்த கால அரசாங்கத்தினால் உண்மையான சுதந்திரத்தை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்று வந்த யுத்தத்தை கடந்த கால அரசாங்கம் நிறைவுக்கு கொண்டு வந்த போதிலும், நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான எவ்வித ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க மறந்து விட்டது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
யுத்தத்தை அழித்து விட்டதாக மார்தட்டி கொண்ட போதிலும், யுத்தத்தின் பின்னரும் மக்கள் எந்தவித சுதந்திரத்தையும் அனுபவிக்கவில்லை.
அத்துடன் யுத்த களத்திலிருந்து போராட்டம் நடத்தியவர்கள் இராணுவத்தினரே, ஆனால் ஊழலில் ஈடுப்பட்டவர்களே யுத்தத்தை நிறைவு செய்ததாக போலியாக மார்தட்டி கொண்டிருக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUko3E.html

Geen opmerkingen:

Een reactie posten