[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 06:12.00 AM GMT ]
நேற்று திங்கட்கிழமை குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சாட்சியமளித்த பொலிசார்,
குறிப்பிட்ட அடையாளப்படுத்தப்பட்ட பகுதியானது ஆய்வுக்கு உற்படுத்தப்பட்டதாகவும், மனித எச்சங்கள் என நம்பப்படும் 4 ½ மீட்டர் அளவிலான இடம் அடையாளப்படுத்தப்பட்டு அதற்குரிய அறிக்கை வரும்வரை காத்திருப்பதாகவும் பொலிசார் கூறினர்.
குருக்கள்மட மனிதப் புதைகுழி தோண்டப்பட வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கினால் தாக்கல் செய்யப்பட வழக்கின் தொடர்ச்சியான வழக்கு விசாரணை கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி வழக்கு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது ஏற்கனவே கிழக்கு மாகாண சபை உறுப்பினர்; ஷிப்லி பாறூக்கினால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தினை பூமிக்கு கீழேயுள்ள எச்சங்களை கண்டறிய ஸ்கான் கருவியினூடாக குறிப்பிட்ட அந்த பகுதியினை ஆய்வு செய்யுமாறு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் ஏ.எம்.றியால் கட்டளை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUko0D.html
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 06:13.09 AM GMT ]
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலிருந்த வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பிலிமத்தலாவையை சேர்ந்த 21 வயதுடையவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் காதல் விவகாரம் தொடர்பில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலிமத்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளன
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 06:16.19 AM GMT ]
இந்த நிகழ்வு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.வினோதலிங்கம் தலைமையில் இடம் பெற்றுள்ளது.
இதன்படி 24 பிரதேச சபை உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிகழ்வில் வவுனியா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUko0F.html
Geen opmerkingen:
Een reactie posten