[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 12:28.41 PM GMT ]
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்து, அங்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
இன்று பகல் 2 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற பொது மற்றும் அரசசார் அமைப்புக்களுடனான கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் அவசரமாக ஐக்கிய தேசியக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளை அலுவலகத் திறப்பு விழாவிற்கு வருகை தந்தார்.
யாருடனும் ஒரு வார்த்தைகூட பேசமால், வந்தவுடன் நாடாவை வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார் பிரதமர்.
அதனையடுத்து, பதிவேட்டில் ஒப்பமிட்டவுடன் சென்றுவிட்டதாக அங்கிருந்து கிடைந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை ஒரு நிமிடத்துள் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாருக், மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் மக்களுடன் சந்திப்பு நடாத்தியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRdSUlxzB.html
பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி எதனையும் மேற்கொள்ள வேண்டாம்!– ஊழல் எதிர்ப்பு உப குழுவில் வெளிவிவகார அமைச்சர்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 12:42.59 PM GMT ]
தேசிய நிறைவேற்றுச் சபையின் ஊழல் எதிர்ப்பு உப குழு கடந்த வாரம் கூடியது.
இதன் போது தற்போது விசாரணைகள் நடைபெற்று வரும் அவன்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தின் சட்டரீதியான நிலமை குறித்து கடும் வார்த்தை பிரயோகங்கள் முன்வைக்கப்பட்டதுடன் அது பகிரங்க நீதிமன்ற விவாதம் போல் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த உத்தரவு அவன்கார்ட் நிறுவன தலைவர் நிஷ்சங்க சேனாதிபதி உட்பட 4 பேரின் கைதுக்கான உத்தரவாக இருக்க வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்ட சிரேஷ்ட பிரதிநிதி கூறியுள்ளார். எனினும் அதற்கான சாட்சியங்கள் இல்லை என அவர் குற்றம் சுமத்தினார்.
தனது 30 வருட சேவை காலத்தில் தான் எதிர்நோக்கும் மிகவும் சிரமமான விசாரணை அவன்கார்ட் தொடர்பான விசாரணை என குழுவின் இரண்டாம் நிலை பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம், துப்பாக்கிகள் மற்றும் வெடிப் பொருள்கள் சம்பந்தமான கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு ஆதரவு வழங்குகிறது என்ற கருத்து ஏற்பட்டு விடும் எனவும் இது நல்லிணக்க விடயத்தில் தாமதத்தை ஏற்படுத்தும் எனவும் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டத்தரணிகள் இந்த விடயம் தொடர்பில் தனது சட்ட ரீதியான நிலைப்பாடுகளை எழுத்து மூலம் முன்வைக்குமாறும் தான் அது சம்பந்தமாக சட்டமா அதிபரின் கருத்தை கேட்டறிவதாக கூட்டத்தில் முன்னிலை வகித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRdSUlxzC.html
தினமும் படையினரால் அச்சுறுத்தப்படுகிறோம்: ரணிலிடம் முன்னாள் போராளிகள் தெரிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 01:31.36 PM GMT ]
வடபகுதிக்கு 3 நாள் விஜயமாக கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.வந்திருந்த பிரதமர் இறுதி நாளான இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகள் குறித்து மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போதே முன்னாள் போராளி ஒருவர் பிரதமரிடம் நேரடியாகவே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக முன்னாள் போராளிகள் பிரதமருக்கு கூறுகையில்,
புனர்வாழ்வு வழங்கப்பட்டு எம்மை விடுவிக்கும்போது எங்களை சமூகத்தில் ஒருவர் என்று கூறியே விடுவித்தீர்கள். ஆனால் நாங்கள் சமூகத்தில் ஒருவர் என்றால் எங்களை பொலிஸார் விசாரிக்க வேண்டும், ஆனால் எங்களுடைய வீடுகளுக்கு படையினர் வருகிறார்கள்.
நாங்கள் வேலைக்குச் சென்றதன் பின்னர் எங்கள் வீடுகளுக்குள் நுழைகின்றார்கள். எங்களை விசாரிக்கிறார்கள்.
இவர்களால் நாங்கள் தினசரி துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என சுட்டிக்காட்டினார்.
மேலும் ஒரு முன்னாள் போராளி கூறுகையில்,
எனது மனைவி படுத்த படுக்கையில் உள்ளார். எனது பிள்ளைகளுக்கு மனநலன் குறைவு, எனக்கும் தலையில் துப்பாக்கி ரவை இருக்கின்றது.
இந்த நிலையிலும் என்னை தினசரி விசாரணைக்கு அழைக்கிறார்கள். நான் வேலைக்குச் சென்றால் வீட்டே வருகிறார்கள். எதற்காக கொடுமைப்படுத்துகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
இதன்போது பிரதமரும் சபையிலிருந்த மற்றய அமைச்சர்களும் முன்னாள் போராளிகளை பார்த்து, ஆட்சிமாற்றத்தின் பின்னரும் வருகிறார்களா? என கேட்டனர்.
அதற்கு ஆட்சிமாற்றத்தின் பின்னரும் வருகிறார்கள் என அவர்கள் பதிலளித்த நிலையில் வாய்மூடி மௌனிகளாக அதனை நாங்கள் பார்த்து நடவடிக்கை எடுப்போம் என்ற பதிலுடன் நிறுத்திக் கொண்டனர்.
இந்நிலையில் சபையில் இருந்த படை அதிகாரிகள் அவ்வாறு நடந்ததா? எப்போது நடந்தது? அவ்வாறு நடந்ததாக நாங்கள் கேள்விப்படவில்லை. அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை. இதனை நாங்கள் நம்பவில்லை. என வழக்கம்போன்றே பதிலளித்தனர்.
எனினும் அங்கிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுசேர்ந்து, இந்த முன்னாள் போராளிகள் கதை சொல்லவில்லை. அவர்கள் அனுபவிக்கும் துயரங்களை சொல்கிறார்கள்.
நடந்ததா? நாங்கள் நம்பமாட்டோம். என்ற பேச்சை விடுங்கள் இந்த சபையில் கற்ப னை கதை சொல்ல அவர்கள் வரவில்லை. என்பதோடு நீங்கள் நம்பவேண்டும் என்பதற்காகவும் அவர்கள் சொல்லவில்லை. உங்களுடைய அடக்குமுறைகள் வெளியே தெரியவேண்டும் என்பதற்காகவே சொல்கிறார்கள் என படை அதிகாரிக்கு பதிலளித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRdSUlxzE.html
Geen opmerkingen:
Een reactie posten