[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 09:52.51 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் புத்தசாசன மற்றும் ஜனநாயக ஆட்சி பிரதி அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டார்.
யாரும் எதிர்பார்க்காத விடயங்கள் மத்திய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு எதிர்பார்க்காத அமைச்சு பதவிகளும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டன எனவும்,
அமைச்சு பதவி வழங்கப்பட்ட தினத்தில் தான் தேசிய உடை அணிந்திருக்கவில்லை வெறுமனே சாரமும், சேர்ட்டுமே அணிந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய குழுவில் அங்கம் வகித்த 20 பேரில் 17 பேர் இந்த அமைச்சு பொறுப்பை பெற்று கொள்ளுமாறு தன்னை கேட்டு கொண்டமையினாலேயே தான் குறித்த அமைச்சு பதவியை பொறுப்பேற்று கொண்டதாக அவர் தெரிவித்ததோடு,
அமைச்சு பதவியை பொறுப்பேற்றதன் பின்னர் மதவாச்சி தொகுதியிலுள்ள 70 கிராம மக்களும் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சு பதவியை பொறுப்பேற்றால் வாக்குகளை பெற்று கொள்வதற்காக தமது கிராமங்களுக்கு வரவேண்டாம் என மக்கள் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தான் மக்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு அரசியல்வாதி எனவும், புத்தசாசன அமைச்சுக்கு கரு ஜயசூரியவே பொருத்தமானவர் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனது உயிருக்கு ஆபத்து ஏதும் நடந்தால் அரசாங்கமே பொறுப்பு: மகிந்த
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 10:51.35 AM GMT ]
மகிந்த ராஜபக்சவின் ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி சமூக பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அரசாங்கம் அவருக்கு வழங்கியுள்ள பாதுகாப்பு போதுமானதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு அரசாங்கம் 6 வாகனங்களை வழங்கியுள்ளது. எனினும் 21 வாகனங்கள் தேவை என மகிந்தவின் ஊடக இணைப்பாளர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி விடுதலைப் புலிகளை தோற்கடித்ததால், விடுதலைப் புலிகளின் ஆதரவாளரிடம் இருந்து உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதாகவும் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர் ஒருவர் அவரது பாதுகாப்புக்காக கடந்த 27 ஆம் திகதி பஸ் ஒன்றை வழங்கியுள்ளார்.
எனினும் அரசாங்கம் இதுவரை முன்னாள் ஜனாதிபதி ஒரு உத்தியோபூர்வ இல்லத்தை கூட வழங்கவில்லை எனவும் மகிந்த ராஜபக்சவின் ஊடக இணைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRdSUlxyE.html
வடபகுதி விஜயங்கள் மட்டும் போதாது! வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட வேண்டும்!
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 10:57.15 AM GMT ]
இங்கு வந்து செல்பவர்கள் பலதரப்பட்ட வாக்குறுதிகளை தந்துவிட்டு செல்கிறார்கள். அதனால், நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம். இவ்வாறு அண்மை யில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய அரசாங்கத்தின் உதயத்தின் பின்னர் தமிழ் மக்களுக்கு வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சிறிதளவு நல்லெண்ண சமிக்ஞைகள் தென்படுவதை காணக்கூடியதாக உள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்காக பொது எதிரணி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்தில் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை அப்போது அறிவித்திருந்தனர்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வட மாகாணத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்தி, மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் தனது நிலைப்பாட்டினை தெரிவித்ததுடன் கூட்டத்தில் கலந்துகொண்ட கூட்டமைப்பு மற்றும் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களையும் செவிமடுத்தார்.
இத்தகைய நிலையில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் காணியை இம்மாதம் விடுவிப்பதாக அறிவித்துள்ள போதும், முதற்கட்டமாக சுமார் 400 ஏக்கர் காணியை விடுவித்துள்ளனர்.
மக்களிடம் காணிகளை ஒப்படைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் நேரடியாகவே வளலாய் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று மக்களிடம் காணியை ஒப்படைத்துள்ளார்கள்.
இவர்களது வருகையின் மூலம் தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கம் எதையாவது செய்யும் என்ற நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியுள்ளது.
இத்தகைய நம்பிக்கையை கட்டியெழுப்ப கூட்டமைப்பு மக்களுக்கு ஏற்ற சேவையினை செய்வதற்கு ஒன்றுபட வேண்டும். இவர்கள் தேர்தலுக்காக மட்டும் ஒன்றுபட்டு செயற்படாது அனைத்து விடயங்களிலும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்தகால தவறுகளை இனியும் விடாது அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களது அடிப்படை பிரச்சினைகள் மற்றும் காணாமற்போனோர், கடத்தப்பட்டோர், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் இனப்பிரச்சினை தீர்வு ஆகிய விடயங்களில் கவனத்தை செலுத்த வேண்டும்.
அரசின் உயர்மட்ட குழுவினரின் வருகையின் போது, தமிழ்மக்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் வெளிப்படையான கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல் வேண்டும்.
உயர்பாதுகாப்பு வலயத்தில் 1000 ஏக்கர் காணி விடுவிப்பதாக கூறிய நிலையில் சுமார் 400 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏனைய காணி நிலைவரங்கள் தொடர்பில் உரிய தரப்புடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.
உயர்பாதுகாப்பு வலய காணிகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி விடுவிக்கப்பட்ட காணிகளின் நிலைமைகள் தொடர்பாக உரையாற்றும் போது, வடபகுதி மக்கள் சுகபோக வாழ்க்கை வாழ்பவர்கள் அல்லர். இப்பகுதி மாத்தறை, கண்டி, நுவரெலியா போன்று இல்லை என்றும் கூறியுள்ளார்.
இந்தக் கூற்று ஜனாதிபதி இங்குள்ள மக்கள் மற்றும் அவர்கள் வாழும் இடங்கள் தொடர்பில் எத்தகைய நிலைப்பாட்டை கொண்டுள்ளார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
மேலும், விடுவிக்கப்பட்ட பகுதிகளை வளமான பகுதியாக மாற்றுவதற்கு அனைத்து வசதிகளையும் செய்வதோடு அதற்காக முதலமைச்சர் மற்றும் வடமாகாண சபைக்கும் உதவி செய்வதாகவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்தக் கூற்றின் மூலம் வடபகுதி மக்களுக்கு மாகாண சபை மூலம் பல திட்டங்கள் முன்னெடுப்பதற்கான நடவடிக்கையாக இதனை கருத கூடியதாக உள்ளது.
ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆகியோரது வருகையும் வளலாயில் நடைபெற்ற நிகழ்வுகளும் கூட பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக பாதுகாப்பிற்கான சோதனைகள் இடம்பெற்றாலும் முன்புபோல் கடுமையான சோதனைகள் இல்லை என்றே கூறவேண்டும். நிகழ்ச்சிகளின் போது, சர்ச்சையை உண்டுபண்ணியிருந்த தேசிய கீதம் இந்த மீள்குடியேற்ற நிகழ்வின் போது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இசைக்கப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
யாழ்.மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், ஈ.பி.டி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபையின் அமைச்சர்களும் மேடையில் பிரசன்னமாகியிருந்தார்கள். இதுவும் ஒரு நல்லெண்ணத்திற்கான முயற்சியாகவே உள்ளது.
அரசாங்கத்தின் உயர் மட்ட குழுவினரின் வடபகுதி விஜயங்கள் தமிழ் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தி வருகின்ற போதும், இவர்களின் வடபகுதி விஜயத்தின் போது கூறப்படுகின்ற வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் அவாவாக உள்ளது.
ஜனாதிபதியின் வருகையின் பின்னர் வளலாய் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது காணிகளை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் தற்போதுள்ள நிலைமைகள் தொடர்பாக கேட்டபோது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆகியோரின் வருகை எமக்கு ஆர்வத்தை காட்டுகின்றது. அத்துடன் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.
1990ம் ஆண்டும் இடம்பெயர்ந்து சென்ற நாம் சுமார் 25 வருடங்களின் பின்னர் எமது இடத்தில் காலடி எடுத்து வைத்துள்ளோம். இது மகிழ்ச்சியாகவே உள்ளது. ஆனால் இந்த 25 வருட காலத்தில் நாங்கள் பட்ட துன்பங்களை வார்த்தைகளால் கூறிவிடமுடியாது. இந்த துன்பங்களை என்னுடைய பிள்ளைகள் இனியும் அனுபவிக்கவிட முடியாது.
ஆகவே மீள்குடியேற அனுமதி வழங்கப்பட்டு விட்டது என்று விட்டு விடாது எமக்கான உதவிகளையும் விரைவாக செய்து தரப்பட வேண்டும். அடிப்படை வசதிகள் வீட்டுத் திட்டங்கள் போன்றவையும் செய்துதரப்பட வேண்டும் என்றார்.
துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த இன்னொருவர் கருத்து தெரிவிக்கையில்,
1990ம் ஆண்டு முதல் பல இடங்களிலும் மாறி மாறி அகதி வாழ்க்கைதான் வாழ்கின்றோம். இன்றும் அகதி வாழ்க்கைதான். இந்த அகதி வாழ்க்கை முடிவுக்கு வர வேண்டுமானால் எமக்கான அனைத்து உரிமைகளும் தரப்பட வேண்டும்.
வீட்டுத் திட்டங்கள், மின்சார வசதி, பாடசாலை, ஆலயம் போன்றவை மீண்டும் அமைத்து தரப்பட வேண்டும். எமது தொழில் தங்கு தடையின்றி நடைபெற உதவி செய்யப்பட வேண்டும்.
எமக்கான மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்பட வேண்டும். எமது பகுதி மட்டுமன்றி அயல் கிராமங்களையும் விடுவித்து அங்கும் மக்கள் மீளக்குடியமர்வதற்கான ஏற்பாடுகளை செய்வதன் மூலமே நாம் எமது பகுதியில் மீள்குடியேற முடியும்.
வெளிநாடுகளின் உதவிகள் கிடைக்கும் என பல அரசியல்வாதிகள் கூறுகின்றார்கள். இத்தகைய உதவிகள் மக்களுக்கு நேரடியாகவே கிடைக்க வேண்டும். கடந்த கால ஆட்சியின் போது செயற்பட்ட அரசியல் வாதிகள் போல் செயற்படாது புதிய சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.
25 வருட காலமாக துன்பப்பட்டு, துயரப்பட்டு வாழ்ந்த நாம் இனியாவது நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் அச்சம் இல்லாது வாழ்வதற்கான ஏற்ற சூழலை இங்கு வந்து சென்ற ஜனாதிபதி தலைமையிலானவர்களும் பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
எமது சொந்த நிலத்திற்கு செல்வோமோ அல்லது அகதிகளாகவே வேறு மண்ணில் மரணித்து விடுவோமோ என 25 வருடகாலமாக ஏக்கத்தில் இருந்த எமக்கு இந்த சிறு இடத்தையாவது விட்டுத் தந்தமை எமக்கு நம்பிக்கை தருவதாக உள்ளதாக அப்பகுதி மக்கள் நன்றியுடன் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRdSUlxyG.html
புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களை ஒதுக்கி விட்டு அரசியல் தீர்வைப் பெறமுடியாது: அரியம் எம்.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015, 11:10.13 AM GMT ]
புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களை ஒதுக்கி விட்டு அரசியல் தீர்வைப் பெறமுடியாது என்ற எண்ணம் இப்போது வந்திருக்கின்றது. ஏனென்றால் எங்கள் அரசியல் பணி என்பது அகிம்சையாக. ஆயதமாக, இராஜதந்திரமாக பரிணமித்துக் கொண்டிருக்கின்றது.
இந்த இராஜந்திர போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பலமாக இருப்பவர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற பல்வேறு பட்ட அமைப்புக்கள்.
எமது இனத்திற்காக அவர்கள் பல்வேறு தியாகங்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அவர்களை மறந்து அரசியல் தீர்வைப் பெற்றுவிட முடியாது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று நீலன் அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அம்பாறை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRdSUlxyH.html
Geen opmerkingen:
Een reactie posten