வடமாகாணத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளனர்.
சமகாலத்தில் பிரதமருக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் நிழல் யுத்தம் ஒன்று நடைபெற்று வருகின்றது.
இந்த நிழல் யுத்தம் கடந்த வாரம் யாழ்.வளலாய் பகுதியில் இடம்பெற்ற காணிகள் கையளிப்பு நிகழ்வில் வெளிப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வட மாகாண முதலமைச்சரை சந்திக்கப்போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களையே சந்திப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இன்றைய நிகழ்வுகளுக்கு முதலமைச்சருக்கு அழைப்பிதழ்களும் அனுப்பி வைக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றயதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடமாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பிரதமரின் யாழ். நிகழ்வுகளை நாங்கள் புறக்கணிப்போம் என தெரிவித்திருந்தனர்.
எனினும் இன்றைய தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபம் மற்றும் யாழ்.மாவட்டச் செயலகம் ஆகியவற்றில் இடம்பெற்ற நிகழ்வுகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை பிரதமரின் கிளிநொச்சி விஜயத்தை தாங்கள் புறக் கணிக்கப்போவதாக கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.tamilwin.com/show-RUmtyDRbSUlv5F.html
தமிழர் தரப்பின் தீவிரவாதப்போக்கை அடுத்தே இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் உறவை கட்டியெழுப்ப ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் தரப்பின் தீவிரப்போக்கே, மோடி இலங்கை அரசுடன் உறவைப் பேண காரணம்!- ஐஏஎன்எஸ்
[ வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015, 03:33.37 PM GMT ]
ஐஏஎன்எஸ் செய்தி சேவையின் மூத்த செய்தியாளர் வீ நாராயணசாமி இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில் மோடி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து அங்குள்ள தமிழர்களின் மனங்களை கவர்ந்துள்ளதாகவும் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் இந்த விஜயம் நெகழ்வுத் தன்மையற்ற வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை பரீட்சிக்கும் நடவடிக்கையாகும்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் விக்னேஸ்வரன், இனப்படுகொலை தொடர்பில் வடக்கு மாகாணசபையில் யோசனை ஒன்றை நிறைவேற்றினார்.
அதில் இலங்கையின் அரசாங்கங்கள் இனப்படுகொலைகளில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தநிலையில், இலங்கையின் எந்தவொரு பொறிமுறையிலும் தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார்.
எனவே இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணையை அவர் கோரியிருந்தார்.
இதன்போது இலங்கையில் உள்ள இந்தியர்கள் இந்திய பிரதமர் மோடி விக்னேஸ்வரனுடன் பொது நிகழ்வுகளில் கொழும்பிலோ அல்லது யாழ்ப்பாணத்திலோ பங்கேற்பதை தவிர்ப்பது நல்லது என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தனர் என்றும் நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten