[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 10:56.54 AM GMT ]
இன்றைய தினம் காலை 10மணி தொடக்கம் நண்பகல் 12.30மணிவரையில் நடைபெற்றிருந்தது.
இதன்போது தொண்டர் ஆசிரியர்கள் குறிப்பிடுகையில்,
நீண்டகாலம் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றிவரும் எமது நிரந்தர நியமனம் தொடர்பில் பல தரப்பினரிடமும், கோரிக்கை விடுத்தபோதும் அது தொடர்பில் பொறுப்புவாய்ந்தவர்கள் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை.
இந்நிலையில் மற்றய துறைகளில் 180நாள்கள் வேலை செய்த தொண்டர் ஊழியர்களுக்கெல்லாம் நிரந்தர நியமனம் வழங்கப்படும் நிலையில், தொண்டர் ஆசிரியர்கள் மட்டும் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியி ருந்தனர்.
குறித்த தொண்டர் ஆசிரியர்கள் மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜாவுடன் சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தியிருந்தனர்.
இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக தொண்டர் ஆசிரியர்கள் குறிப்பிடுகையில், யாழ்.மாவட்டத்தில் 350ற்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் உள்ளபோதும் அவர்களுடைய நியமனம் குறித்து கரிசணை செலுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம்.
எனினும் அதற்குப் பதிலளித்த அமைச்சர், நியமனம் வழங்குவதற்கு நாம் எதிரானவர் அல்ல என கூறியதுடன், மத்திய அரசாங்கத்திடமே அந்தப் பொறுப்பு உள்ள நிலையில் இது தொடர்பாக நாம் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் எனவும்,
அதனடிப்படையில் எதிர்காலத்தில் வடமாகாணத்திலுள்ள கல்வி வலயங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை அறிந்து அதனை நிவர்த்தி செய்ய முயற்சிப்போம் எனவும் கூறியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சுமார் 2மணிநேரத்தின் பின்னர் அமைச்சரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு விலகிச் சென்றுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUluzD.html
மாகாண சபை அமைப்பு தமிழர்களின் போராட்டத்தினால் பெறப்பட்டது: கி.மா உறுப்பினர் மா.நடராசா
[ புதன்கிழமை, 25 மார்ச் 2015, 11:16.17 AM GMT ]
துறைநீலாவணை தெற்கு 1 ஆம் கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கு கதிரைகள் கையளிக்கும் நிகழ்வு அதன் தலைவர் ஆ.திருச்செல்வம் தலைமையில் பலநோக்கு கட்டிடத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நடராசா மற்றும் கிராமசேவகர் ரி.கோகுலராஸ், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் ரி. தயாளன் ஓய்வுபெற்ற நூலகர் கே. பாக்கியராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர், மகிந்த அரசாங்கத்தில் வடகிழக்கில் திட்டமிட்ட முறையில் அத்து மீறி பறிக்கப்பட்ட தமிழ்மக்களின் காணிகள் இன்றைய மைத்திரிபாலசிறிசேனவின் அரசாங்கத்தில் விடுவிக்கப்படுவது தமிழ்மக்கள் புதிய அரசுக்கு அளித்த வாக்குகளுக்கு நன்றிக்கடனாகவே அமையும்.
என்றும் இல்லாதவாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களின் காலடிக்கு சென்று மைத்திரிபாலவுக்கு வாக்களிக்கச் சொன்னது ஏன் என்றால் கடந்தகால ஆட்சியில் இருந்த மகிந்த அரசாங்கம் தமிழ்மக்களை கொன்றுகுவித்ததுடன் தமிழர்களின் காணிகளை சுவீகரித்து சிங்களக்குடியேற்றங்களை செய்துவந்தன.ர் அவ்வாறான ஆட்சியாளரை வெளியேற்றவேண்டும் என்பதற்காகவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பல பிரயத்தனங்களை மேற்கொண்டது.
ஆனால் இன்று தமிழர்களின் காணிகள் சிறு சிறு பகுதிகளாக விடுவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஜனாதிபதி அங்கு பலபகுதிகளை விடுவிப்பதாக உறுதியளித்திருக்கின்றார்.எனவே ஒட்டுமொத்தமாக எமது பிரச்ச்னைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டாலும் ,ஒருசில விடயங்களைப் பெறக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கின்றது.
கிழக்குமாகாண சபையில் கூட்டமைப்பு முதலமைச்சுப்பதவியை ஏன் பெறவில்லை என்ற கேள்வியும் வரலாம், ஆனால் அதனைப் பெறமுடியாதநிலை அதற்குக்காரணம் நாங்கள் 11 உறுப்பினர்களும் தான். ஏனைய அனைத்து உறுப்பினர்களும் ஒரே பக்கம் இருந்தார்கள் ஆனால் முதலமைச்சர் பதவியை சிறுபான்மைக்கட்சி, எங்களது எந்தவித அனுமதியும் இல்லாதுதான் முன்பு பெற்றிருந்தது தமிழ்ப்பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு தமிழர்களை ஏமாற்றிய சந்திரகாந்தனும் இனியபாரதியும் கையெழுத்திட்டுக் கொடுத்திருந்தார்கள்.
அவர்களுடன் 15 முஸ்லிம் உறுப்பினர்களும் பெரும்பான்மை உறுப்பினர்கள் மூவருமாக 20 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு முதலமைச்சரை நியமித்தனர். பின்னர் சந்திரகாந்தன் எமது தலைவரிடம் சென்று வெளியில் இருந்து ஆதரவு தருகின்றேன் முதலமைச்சரை விடவேண்டாம் என்று வித்தை காட்டிச்சென்றார் இதுதான் உண்மை.
கடந்த இரண்டரை வருடமும் எதிர்கட்சியில் இருந்தோம் எமது தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, அக்காலத்தில் தமிழர்கள் பலவழிகளிலும் புறக்கணிக்கப்பட்டனர் இந்நிலையில்தான் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்குடன் இவ்இரண்டு அமைச்சுக்களையும், பிரதி தவிசாளர் பதவியையும் பெற்று இருக்கின்றோம்.இவ்வமைச்சு பதவிகளின் ஊடாக தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்வதற்காகவே இப்பதவிகளை பெற்றோம்.
கடந்த காலங்களில் தமிழர்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்தவர்கள். மத்திய அரசால் தான் சட்டங்களை ஆக்குவதற்கான திட்டங்கள் இருக்கிறது மாகாணசபை அப்படி அல்ல எமது மக்களின் போராட்டத்தின் விளைவாலும் தியாகத்தின் காரணமாகவும் ஏற்பட்ட ஒரு மாகாணசபை அதில் கூட எங்களுக்கு அதிகாரமில்லை, எங்களால் உருவாக்கப்பட்ட மாகாணசபையினை வைத்து தமிழர்களுக்கு எதிராக பலதிட்டங்களை ஆட்சியில் இருந்தவர்கள் நிறைவேற்றியிருந்தார்கள் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRZSUluzF.html
Geen opmerkingen:
Een reactie posten