வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவுக்குமிடையில் இதுவரையில் இடம்பெற்றுவந்த நிழல் யுத்தம் இன்றைய தினம் அம்பலத்திற்கு வந்தது.
இந்தநிலையில் இருவரும் பொது நிகழ்வில் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமலும், பேசிக் கொள்ளாமலும் இருந்ததை காண முடிந்தது.
இன்றைய தினம் யாழ்.வளலாய் பகுதியில் மக்களுடைய காணிகளை மீள கையளிக்கும் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முதலமைச்சர் ஆகியோர் சென்றிருந்தனர்.
இதன்போது பிரதமர் வரும்போது முதலமைச்சர் வரவேற்கும் இடத்தில் நின்றிருந்தார். எனினும் பிரதமர் அதனைக் கவனிக்காது விலகிச்சென்றார்.
அதனைப்போல, முதலமைச்சரும் அவரை வலிந்து வரவேற்காமல் விலகியே நின்றுகொண்டார். பின்னர் மேடையில் ஏறிக்கொண்ட போதும் நடுவில் ஜனாதிபதி உட்கார்ந்திருக்க முதலமைச்சரும் பிரதமரும் ஜனாதிபதிக்கு அருகருகாக உட்கார்ந்து கொண்டனர்.
எனினும் அப்போதும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமலும் பேசிக் கொள்ளாமலும் இருந்தனர்.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்ததன் பின்னர் 10ம் திகதி கொழும்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தபோது மஹாநாயக்க தேரர்களிடம் வடக்கிலிருந்து படையினரை விலக்கமாட்டேன் கூறப்போவதாக பிரதமர் ரணில் கூறிய விடயம் தொடர்பாக முதலமைச்சர் வெளியில் பேசியிருந்தார்.
அந்தப் பேச்சும் யாழ்.வந்த பாதுகாப்பு அமைச்சர் படையினருக்கு நிலத்தில் முகாமை அமைக்காமல் ஆகாயத்திலும், கடலிலுமா? அமைப்பார்கள் என எழுப்பிய கேள்வியை அடுத்தே படையினர் வெளியேற்றம் தொடர்பில் புதிய அரசின் நிலைப்பாடு மாறிவிட்டதா? என கேட்பதற்காகவே முதலமைச்சர் பிரதமருடன் பேசிய விடயத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அன்று தொடங்கிய நிழல் யுத்தம் பின்னர் பிரதமர் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரிக்கப்பார்கிறார் என முதலமைச்சர் வெளிப்படையாக குற்றம்சாட்டும் நிலை வரை சென்று பொது நிகழ்வில் கூட ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமலும், பேசிக்கொள்ளாமலும் இருக்கும் நிலைக்குச் சென்றுவிட்டிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.
- தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு: யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி உறுதி
- ரணில், மைத்திரி, சந்திரிகா ஒரே மேடையில்! சாட்டையடி கொடுத்த விக்கி
- கொடுப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்: காணி கையளிக்கும் நிகழ்வில் டி.எம்.சுவாமிநாதன்
- வடக்கில் படையினர் உல்லாச விடுகளை அமைக்கவில்லை! மீண்டும் பொய் சொன்ன இராணுவத் தளபதி
http://www.tamilwin.com/show-RUmtyDRXSUls7D.html
Geen opmerkingen:
Een reactie posten